தினம் பூக்கும் ரோசாவே
திரும்பிப் பாரேன் ராசவ
ஒடிசலான உன் தேகம் -அதில்
ஒட்டிக்கிடக்கும் என் மோகம்.
கட்டியிழுக்கும் உன் வாசம்
கட்டாந்தரையே என் தேசம்
நீர் உறுஞ்சும் பாவையே - உன்
நினைவருந்தும் இக்காளையே
முள் உனக்கு ஆடையாச்சி -உன்
முன்னிருப்பதே என் வேலையாச்சி.
காற்றிலாடி சிரிக்கிறியே
கன நேரம் எனை பாரடியே
இதழ் விரிய அழைக்கின்றாய்
இதயம் நுழைய மறுக்கின்றாய்.
தினம் பூக்கும் ரோசாவே
ReplyDeleteதிரும்பிப் பாரேன் ராசவ
ஒடிசலான உன் தேகம் -அதில்
ஒட்டிக்கிடக்கும் என் மோகம்.
கட்டியிழுக்கும் உன் வாசம்
கட்டாந்தரையே என் தேசம்.......
கட்டாந்தரையான உங்க தேசம் செழிக்கட்டும் எப்போதும்...அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteஆணின் வார்த்தைகள் கட்டாயம் அந்த ரோசாவை மனம் மாற வைக்கும்!
ReplyDeleteசித்திரப் பாவையோ நீ
ReplyDeleteசிங்காரக் கடல் முத்தோ!
சிந்தனைச் சிற்பியோ
சிதறாத தேன் தமிழோ!
சிலைவடிவானவளோ
சிற்பியின் கலை வடிவோ!
சிங்காரத்தேர் உன்ரதமோ
சிகைமேகம் தரித்தவளோ!
சித்திரையில் மலர்ந்தவளோ
சிந்தையதைப் பறித்தவளோ!
சிட்டாகப் பட்டாடையுடுத்தி
சிறகுவிரித்துப் பறப்பாயோ!
யாராயினும் நீ கவிதைக்கரசி
யாதுமாயினும் நான் ரசிகன்!!
ரோஜா கவிதை வாசம் பூத்தது! அருமை! நன்றி!
ReplyDeleteமீண்டும் கிராமத்துத் தென்றல் தவழும் பாட்டு. அருமை. ரொம்ப ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteஅருமையான கவிதை..... நன்றி...
ReplyDeleteரோஜாவை ராஜாவாக்கியது அருமை.மலரென்றால் பெண் இல்லை இனி ஆண்களையும் சொல்லலாம் நன்றிம்மா
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஎளிய இனிய கவிதை.
ReplyDeleteமிகவும் எளிய நடையில் அருமையான பாடல்
ReplyDeleteமிகவும் ரஸித்த வரிகள்:
//முள் உனக்கு ஆடையாச்சி -உன்
முன்னிருப்பதே என் வேலையாச்சி.
இதழ் விரிய அழைக்கின்றாய்
இதயம் நுழைய மறுக்கின்றாய்//.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
கவிதை அருமை சகோ...
ReplyDeleteஇதழ் விரிய அழைக்கின்றாய்
ReplyDeleteஇதயம் நுழைய மறுக்கின்றாய்.
ரோசாவின் மணம் வீசும் மனம் கொண்ட வரிகளுக்குப் பாராட்டுக்கள்..
ராசாவின் மனசிலே! மனங் கவர்ந்த ரோசாவைப் பற்றி ஒரு அருமையான கவிதை!
ReplyDeleteரோஜாவின் வாசம் கவிதையில் மயக்கியது
ReplyDeleteவரிகள் அனைத்தும் இனிமை வழக்கம்போல்
ReplyDeleteவாழ்த்துக்கள்...
aakaaaaa...!
ReplyDeleteரசித்தேன்.....
ReplyDeleteஇரசித்தேன்! நன்றி!
ReplyDeleteஅருமை..வாழ்த்துக்கள்
ReplyDelete