Thursday 7 March 2013

ஆகாயம் தொடும் முயற்சி !



போராட்டம் இல்லையெனில்-மன
தேரோட்டம் அழகில்லை
நன்று மட்டும் வாழ்வெனில்
நஞ்சறிய வாய்ப்பில்லை.

இன்பமும் வாழ்வு தான்
துன்பமும் அதன் பகுதிதான்
பிள்ளைத் தொல்லை தாய்க்கழகு
மண்ணின் மாண்பு சேய்க்கழகு

விளைந்த கதிர் தலைக்குனியும்
அதற்கது மேன்மையே.

சூறாவளியாய் சுழன்றாடும்
காட்டாற்று வெள்ள வாழ்வும்
மீனுக்கது விளையாட்டே.

முள்ளின் மீது ரோஜா வாழும்
அதனுள்ளே மணம் வாழும்
முள்ளென்பது வேலியே.

சின்னச்சின்னதாய் கூடுகட்டி
அழகாய் அதில் முட்டையிட்டு
மகவு வளர வாழ்ந்திருக்கும்
குருவியின் வாழ்வும் தியாகமே.

ஒன்றிலொன்றாய் கலப்பதும்
ஒன்றிலொன்று முளைப்பதும்
முளைத்தது வளர்வதும்
வளர்ந்தது வீழ்வதும்
யார் கையில் அறியாமல்
பதுமைகளாய் நாமுமே.

ஆனாலும் விடமாட்டோம்
ஆகாயம் தொடும் முயற்சி
நடக்கட்டும் நாடகம்
நடப்பதும் நன்மைக்கே.

35 comments:

  1. //ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி
    நடக்கட்டும் நாடகம்
    நடப்பதும் நன்மைக்கே.//

    வரிகள் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. aahaaa piramaatham...!

    vaazhthukkal sako....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம்
    பாவையர் நாமும் பகுத்தறிவுகொண்டால்
    மேதையாய் இவ்வுலகில் மேன்மையாய் வாழ்ந்திடலாம்...

    //அருமையாகச் சொன்னீர்
    ஆகாயம் தொடும் முயற்சி//
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. // ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி //

    சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி///
    அறிந்தே செய்யும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. மனதுக்கு வலுவூட்டும் இனிய கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  7. தன்னம்பிக்கை விரைவில் நடக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. ஒன்றிலொன்றாய் கலப்பதும்
    ஒன்றிலொன்று முளைப்பதும்
    முளைத்தது வளர்வதும்
    வளர்ந்தது வீழ்வதும்
    யார் கையில் அறியாமல்
    பதுமைகளாய் நாமுமே.//

    ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி /

    அருமையான வரிகள்.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு மூத்த பதிவர் GMB அவர்கள் தமது வலைப் பதிவில் உங்களை பாராட்டி எழுதியுள்ளார்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
    http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க.

      Delete
  11. முயற்சி வெற்றி அடையட்டும் .
    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி//
    நன்று.காற்றிலேறி விண்ணையும் சாடுங்கள் சசி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  13. அருமை.. அருமை...

    வரிகளில் தன்னம்பிக்கை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  14. மகளிர் தின வாழ்த்துக்கள்.

    //மண்ணின் மாண்பு சேய்க்கழகு
    புரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. நீதி . நேர்மை. இயற்கை வளம் காத்தல் இதுவே மண்ணின் மாண்பு அதைக் காப்பதே வளரும் சேய்க்கழகு இதுவே என் கருத்து.

      Delete
    2. interesting. நீதி நேர்மைக்கும் மண்ணுக்கும் என்ன தொடர்பு? ஒரு வேளை literal பொருள் எடுத்துக் கொள்கிறேனோ?

      Delete
    3. தங்கள் கருத்தை தெரிவித்தாலும் வணக்கத்துடன் கற்றுக்கொள்கிறேன்.

      Delete
  15. அசத்தலா இருக்கு..உற்சாகம் தரும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. //ஆனாலும் விடமாட்டோம்
    ஆகாயம் தொடும் முயற்சி//

    தன்னம்பிக்கை வரிகள்....

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  17. நீங்கள் கூறும் ஆகாயம் தொடும் முயற்சி எல்லாப் பெண்களிடமும் பரவட்டும்.
    மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete