Thursday 21 March 2013

தினம் போடும் புதிரேனோ !


மச்சானே மச்சானே- ஆச
வச்சானே வச்சானே.

பாதையில்லா  ஊருக்கு
பரிசம் போட வந்தானே

ராகமில்லா பாட்டெடுத்து
ராத்திரி வந்து சொன்னானே

பூவிருக்கு பொழுதிருக்கு
பொண்ணும் கூட காத்திருக்கு

கண்ணடிச்சி ஜாட காட்டி
கம்மாக் கர போறவரே

தினம் போடும் புதிரேனோ
தினுசாத்தான் விடைய சொல்லு

கண்ணாடும் சதிராட்டம்
காலாடும் பொம்மலாட்டம்

வழிப்பேச்சு வேனாம் போய்யா
விழியசைவும் போகும் பொய்யா

பிடிச்சிருந்தா சொல்லு மச்சான்
பெசையாத வீனா மனச மச்சான்.

35 comments:

  1. ''..மச்சானே மச்சானே- ஆச

    வச்சானே வச்சானே.




    பாதையில்லா ஊருக்கு

    பரிசம் போட வந்தானே..''இனிய வாழ்த்து சசி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் நன்றிங்க.

      Delete
  2. நாட்டுப்புற பாடல் நன்று அழகாக காதலை சொல்கிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் தோழி!

    வாடி என் பூ வசந்தமே
    வாழ்கை முழுசும் உன்வாசமே...
    தேடி நீபடிச்ச தெம்மாங்கு
    தேனா இருக்குதடி தென்றலா வீசுதடி...
    ஊருமணம் மனக்குதடி
    உள்மனசு துடிக்குதடி
    ஆயுசுக்கும் வாழ்த்துறனே
    அழகாதான் நீ பாடுற புள்ள....:)

    ReplyDelete
    Replies
    1. மிக மிக மிக ...மகிழ்ச்சிங்க உங்க பின்னூட்டம் படிக்கும் போது என் மகன் பக்கத்தில் இருந்தான் என்னம்மா சிரிக்கிறீங்க எனக்கேட்டான் பாருங்க எந்த அளவிற்கு மலர்ந்த முகத்தோடு தங்கள் வரிகளைப் படித்திருப்பேன் என்று.

      Delete
  4. கிராமத்து பைங்கிளியின் காதல் கவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அப்புடிப் போடு புள்ள அருவாள :) வெட்டொண்டு துண்டு ரெண்டு
    முடிஞ்சுது கத .யாருகிட்ட இதெல்லாம் முறம் கொண்டு புலிய
    விரட்டின இனமாக்கும் !!.............:) அருமையான கவிதை வரிகள்
    மனம் சொக்கிப் போனதடி என் தோழி ..வாழ்த்துக்கள் மேலும்
    தொடரட்டும் இது போன்ற இன்பக் கவிதை வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டமும் மிக்க மகிழ்வளித்தது தோழி. பக்கத்தில் இருந்திருந்தால் பேசிப்பழகி பரிமாறி இருக்கலாம் உணர்வுகளை.

      Delete

  6. பாடலாக பாடிப் பார்த்தேன்... அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாடி ரசித்தமைக்கு நன்றி சகோ.

      Delete
  7. கிராமத்தில் பிறந்தாலும் வெளிப்படையாக பேசும் இந்தப் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சசி!

    ReplyDelete
    Replies
    1. கிராமத்து பெண்கள் மனதுக்கு பிடிக்கும் விதமாகத்தான் இருப்பார்கள் போல நன்றிங்க.

      Delete
  8. //பெசையாத வீனா மனச மச்சான்.//
    உணர்வின் வெளிப்பாடு அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  9. தினம் போடும் புதிரேனோ
    தினுசாத்தான் விடைய சொல்லு

    வெட்டொன்று --துண்டு இரண்டு .......

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சரியா சொன்னீங்க நன்றிங்க.

      Delete
  10. வரிகள் நாட்டுப்புற பாடல் போன்று உள்ளது :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. கிராமத்துப் பெண்ணு மயங்கிப்பாடும் பாடல் சொக்க வைக்கின்றது.

    ReplyDelete
  12. // பாதையில்லா ஊருக்கு
    பரிசம் போட வந்தானே
    // - நல்ல மச்சான். கவிதை அருமை!

    ReplyDelete
  13. அட பாட்டாவே எழுதிடீங்கலா நல்ல இருக்கு நல்ல இருக்கு

    ReplyDelete
  14. Replies

    1. தென்றல் தீட்டும் தேன்கவியைத்
      தேடி வந்து படிக்கின்றேன்!
      மன்றல் காணும் இன்பத்தை
      வழங்கும் இந்தப் பாட்டென்பேன்!
      அன்றும் இன்றும் என்றென்றும்
      அருமைத் தமிழே நல்லினிமை!
      உன்றன் பயணம் தொடருகவே
      உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்

      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  15. அருமை....வாழ்த்துக்கள்
    ராகமில்லா பாட்டெடுத்து....
    ராத்திரி வந்து சொன்னானே.....
    பூவிருக்கு பொழுதிருக்கு
    பொண்ணும்கூட காத்திருக்கு.....

    எங்களின் ஏக்கங்கள் உங்களின் வரிகள்....

    ReplyDelete
  16. நாட்டுப்புறப் பாட்டு மனதிற்கு தாலாட்டு!

    ReplyDelete
  17. பாட்டு நன்று. மச்சானின் பாடு நன்றில்லை

    ReplyDelete
  18. கிராமத்து அழகியே !

    கவிதையாலேயே சொன்னாயே

    உன் எண்ணத்தில் உள்ள எண்ணங்களை

    இப்படித்தான் பளிச்சுன்னு சொல்லணும் புள்ள

    இல்லையின்னா சொல்லாத காதலும்

    காணாமலேயே போய்விடும் யாருக்கும் தெரியாமலேயே

    உரக்கத்தான் சொன்னாயே நான் உறங்கும் முன்னே

    எனக்கும் புடிச்சிருக்கு உன்ன விரைவில் வருவேன்

    என் கண்ணே உன் கண்ணெதிரின் முன்னே...

    பரிசமும் போட்டு உன்னை ஊரறிய கைபிடிக்கவே...

    என்னதொரு அருமை சசி கலா வாழ்த்துக்களும்
    பாராட்டுக்களும் தங்களின் திறமை வளர....

    ReplyDelete
  19. கிராமத்து மணம் கமழும் பாட்டு....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. kiraamiya vaasam.!



    arumainga...!

    ReplyDelete
  21. அருமை அருமை
    நாங்களே மயங்கிவிட்டோம்
    மச்சான் நிச்சயம் பாட்டைக் கேட்டு
    மயங்கித்தான் இருப்பார்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete