Tuesday 12 March 2013

உயிர் பயண மாற்றம் !



உதிர்வென்பதது முடிவோவென்று
காலத்தை அழைத்து கேட்டுப்பார்த்தேன்
உயிர் பயண மாற்றமே வேறில்லையென்று
சொல்லியதும் உதிரக்கண்டேன்.

பகலவனை கேட்க ஓடி காலை
கடற்கரை மணலில் நடந்து போனேன்
மௌனமாய் அதுவும் கூட மாலை
கடலில் புதையக் கண்டேன்.

இருளது படர்ந்து இருளாய் நிற்க
முழுநிலவும் வந்து ஒளி சிந்தி மலர
மெதுவாய் அதுவும் கரைந்தேயழிந்து
அம்மாவாசையாகப் போகக்கண்டேன்.

ஜோடியாய் பறந்த பறவைக் கூட்டம்
கட்டின கூடுகள் தன்னின வாழ்வென
பொரித்தன முட்டைகள் புதிதாய் ஜனனம்

தேடின தேனீ பூவில் உணவினை
சேர்த்தன தேனை மெழுகுக் கூட்டில்
பறித்தன கைகள் சேமித்த தேனை
மனித சுயநலம் சுரண்டலாய் தானே.

நகர்ந்தன எறும்புகள் சாரை சாரையாய்
வேனிற்கால சேமிப்பை தனதென நம்பி
கனிந்தன கனிகள் மண்ணீல் வீழ
புதைந்த விதைகள் எழுந்து மலர.

அம்மாவென்றே அழைத்த கன்றும் 
அம்மாவாகி பாலை ஈந்திட
பூவை அவளும் பாவை ஆணால்
கொஞ்சும் பாதம் தாங்கி நடந்தாள்
இடுப்பில் இன்று அவளது சாயலில்
குட்டித்திருமகள் மகவு என்றே.

காலமுருண்டது நேரமுதிர்ந்தது
கோலமுதிர்ந்தது வளர்ச்சி கண்டே
விடைபெற்ற உறவுகள் உதிர்ந்ததென்ன
முடிவோ ? கேள்வி முடிவில்லை
கேள்வி கேட்டு பயனொன்றுமில்லை

உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
நிம்மதி கொண்டு நித்திரை காணின்
அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.








27 comments:

  1. காலத்தின் சுழற்சி.. அருமை! மேலே தட்டச்சு செய்தவை தமிழில் தெரியவில்லை font மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் நன்றிங்க.

      Delete
  2. Replies
    1. வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் நன்றிங்க.

      Delete
  3. உயிர் பயணம் அருமை...

    எழுத்தின் அளவை சிறிது பெரிதாக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன் நன்றிங்க.

      Delete
  4. உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
    நிம்மதி கொண்டு நித்திரை காணின்
    அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.

    தென்றலாய் வீசும்
    ஆனந்த பூங்காற்று அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Very hard to read...
    small letters.
    Vetha.Elangathilakam. .

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன் நன்றிங்க.

      Delete
  6. ஆதி சன்கரர் சொன்னதை..”..........
    புனரபி ஜனனம்,புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்”
    அழகுபடச் சொல்லியிருக்கிறீர்கள் சசி!

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  7. அருமையான கவிதை! காலத்தின் சுழற்சியை சிறப்பாக கவிதையாக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. //உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
    நிம்மதி கொண்டு நித்திரை காணின்
    அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.//

    சந்தோஷ வாழ்வின் இரகசியத்தை சரியாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
    நிம்மதி கொண்டு நித்திரை காணின்
    அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.//

    ஆம், உண்மை.
    நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete


  10. /உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
    நிம்மதி கொண்டு நித்திரை காணின்
    அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று./ உயிர்த்தெழும் இன்னொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
    நிம்மதி கொண்டு நித்திரை காணின்
    அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.

    இதுவே நிம்மதியான சந்தோசமான ஒன்று

    ReplyDelete
  12. அசத்தல் கவிதை....

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. உயிர் பயணத்தை அழகு தமிழில் சொல்லியிருக்கிறீர்கள்!
    இன்று காலை எங்கள் நண்பர் ஒருவரின் பிரிவு செய்தி வந்து, மனது வாட்டத்துடன் இருந்தோம். உங்கள் கவிதை மன வருத்தத்திற்கு மருந்தை அமைந்தது என்றால் மிகையில்லை!

    ReplyDelete
    Replies
    1. படிப்பவரின் மனநிலையை மாற்றக் கூடிய தன்மை எழுத்துக்கு இருந்தால் இதை விட வேறென்ன வேண்டும் படைப்பாளிக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  14. தேடின தேனீ பூவில் உணவினை
    சேர்த்தன தேனை மெழுகுக் கூட்டில்
    பறித்தன கைகள் சேமித்த தேனை
    மனித சுயநலம் சுரண்டலாய் தானே.

    நகர்ந்தன எறும்புகள் சாரை சாரையாய்
    வேனிற்கால சேமிப்பை தனதென நம்பி
    கனிந்தன கனிகள் மண்ணீல் வீழ
    புதைந்த விதைகள் எழுந்து மலர.

    அம்மாவென்றே அழைத்த கன்றும்
    அம்மாவாகி பாலை ஈந்திட
    பூவை அவளும் பாவை ஆணால்
    கொஞ்சும் பாதம் தாங்கி நடந்தாள்
    இடுப்பில் இன்று அவளது சாயலில்
    குட்டித்திருமகள் மகவு என்றே.

    இறப்பும் பிறப்பும் இயல்பானதே என்று
    உயிரோட்டம் உள்ள கவிதை வரிகளால்
    மனதை வருடிச் சென்றது இப் படைப்பு
    மிகவும் மிகவும் அருமை !..பகிர்வுக்கு
    நன்றி வாழ்த்துக்கள் என் தோழி ..........

    ReplyDelete