Friday 29 March 2013

விடியலொன்றைத் தேடி !


மலரொன்று வாடியதற்கா ?
மனமொன்று வாட்டியதற்கா ?

தினமொன்று கழிந்தற்கா ?
தினம் சோகம் தொடர்வதற்கா ?

அலை வந்து தீண்டியதற்கா ?
அதுவும் விட்டுப் போனதற்கா ?

ஒளி வந்து எழுப்பியதற்கா ?
இருள் வந்து சூழ்ந்ததற்கா ?

ஒலி கேட்டு அஞ்சியதற்கா ?
ஓலம் கண்டு ஓடுவற்கா ?

கட்டியழும் தனிமையிடம் 
எதற்க்கிந்த சோகமென்றேன் ?- அதுவும்
விட்டொழிந்து போனதுவே
விடியலொன்றைத் தேடி 
தொடரும் என் பயணங்கள்.

17 comments:

  1. தனிமையை விரட்டி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விடியலொன்றைத் தேடி
    தொடரும் என் பயணங்கள்
    இலக்கை அடையட்டும் ...!

    ReplyDelete
  3. //விடியலொன்றைத் தேடி
    தொடரும் என் பயணங்கள்.//

    அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பயணங்கள் தொடரட்டும்...

    அழகிய கவிதை...

    ReplyDelete
  5. உறுதியான பயணத்தில் விடியல் நிச்சயமே!

    ReplyDelete
  6. அருமை..
    எப்போதும் தனிமை கொடுமை..
    அப்பப்ப வரும் தனிமை இனிமை..

    ReplyDelete
  7. கட்டியழும் தனிமையிடம்
    எதற்க்கிந்த சோகமென்றேன் ?
    விட்டொழிந்து போனதுவே
    விடியலொன்றைத் தேடி
    தொடரும் என் பயணங்கள்..../// உண்மை நாம் வாழ்வில் என்றுமே சோர்ந்து விடலாகாது

    ReplyDelete
  8. நல்ல அருமையான கவிதை! வாழ்த்துக்கள் தோழி!

    விடியலுக்கான பயணம்
    விரைந்து தந்திடும் உதயம்....

    ReplyDelete
  9. இனிய பயணமாக அமையட்டும்!

    ReplyDelete
  10. சோகமே தொலைந்ததென்றால் இனி விடியல் தானே?

    ReplyDelete
  11. எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல விடிவு காலம் பிறக்க
    வாழ்த்துக்கள் .சிறப்பான இக் கவிதைக்கு என் பாராட்டுக்கள் தோழி !

    ReplyDelete
  12. கேள்வியும் பதிலும் சிறப்பு! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  13. தினமொன்று கழிந்தற்கா ?
    தினம் சோகம் தொடர்வதற்கா ?//

    அருமை

    ReplyDelete
  14. விடியலொன்றைத் தேடி
    தொடரும் என் பயணங்கள்.//

    பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. விடியும்! பயணமும் தொடரும்!

    ReplyDelete
  16. தொடர்கிற பயணங்கள் எல்லோரிலும் வேறு வேறு அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுக்கொடுத்து விட்டு போகின்றன.நல்ல் கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தனிமை சில நேரங்களில் இனிமை. பல நேரங்களில் சுமை.சிறப்பான ஆக்கம்.

    ReplyDelete