Friday 18 May 2012

கவிதையாய்க் காதலர்கள்...!

அப்பாவிக் கலைஞனொருவன்,
அழகாய் கட்டிய மனக்கோட்டை,
அழியாத கலை மகள் போல்,
அருவியாய் வாழ்ந்த காலமது! 
ஆண்டவனின் சன்னிதானம்,
ஆலமர நண்பர் வட்டம்,
ஆதவனின் மஞ்சள் ஒளி,
ஆடுகளமாய் துணையாக!

இனிமையாய் இளமையாய்,
இரவென்றும் பகலென்றும்,
இதயமாய் கட்டிக்காத்த,
இமயமான கலைஞனவன்!

ஈகையாய் நிற்கையிலே,
ஈஸ்வரி வடிவெடுத்து,
ஈடில்லாக் காதலென்று,
ஈரக்காற்று வீசியதே!

உயிரான வித்தைகளை,
உணர்வான பாட்டதனை,
உலகாள வைத்த அவன்,
உறவின் கைதி ஆனானே!

ஊமையாய் வந்த காதல்,
ஊரறிய வாழ்ந்த பாசம்,
ஊடலுடன பிரிவெழுத,
ஊனுறக்கம் இழந்தானே!
எல்லாமே கலையேயென்று,
எழுந்து நின்று வென்றவனை,
எப்படியோ சாய்த்த காதல்,
எழுதியதெல்லாம் பொய்யாக!

ஏனிப்படி நடக்கிறது,
ஏக்கத்தோடு அவன் இருக்க,
ஏந்திழையாள் வந்துநின்று,
ஏடெடுத்துக் கொடுத்தாளே!

ஐம்பொன் சிலையொன்று,
ஐந்துறவும் மறந்தின்று,
ஐந்தறிவு கொண்டதோ,
ஐக்கியஉறவு பொய்யுரையோ!

ஒருவருக்கொருவர் பேசவில்லை,
ஒழுகியோடும் கண்ணீருமில்லை,
ஒன்றுபட்டஇதய மனப்பாட்டை,
ஒருவரும் புரிவதுமில்லை!

ஓசையாய் நாதஸ்வரம்,
ஓர் தேவதையாய் அவளமர,
ஓசையின்றி மேடை ஏறி,
ஓரடி ஈரடியென்று வணங்கி,

கற்றறிந்த வித்தையெல்லாம்,
கடைசியாய் ஆடிநிற்க,
இதயத்தில் உதிரம்சிந்த,
இமைக்காமல் பார்த்திருந்தாள்!

இயந்திரமாய்ச் சுழன்று,
இதயம் வெடிக்க அவனாட,
இறகிமை துயில்கொள்ள,
இரண்டு காதல் பறவைகளும்,
இவ்வுலகம் துறந்ததுவே!
ஆலமரத்தடியில் சிரிப்பொலி,
நண்பர்கள் சொல்லி அழ,
ஆற்றங்கரையில் கொலுசோசை,
தோழியர் பயந்து மிரள,
ஊர்கூடி உறவும் கூடி'
ஊர்காவல் கடவுளாய்!

நேற்று வாழ்ந்த -காதல்!
இன்று வாழும்-காதல்!!
நாளை பேசும்-காதல்!!!
கவிதையாய்க் -காதலர்கள்.

 ==================================================================
பின்குறிப்பு: கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளியூர்ப் பயணம் செல்வதால் ஒரு வாரம் என் தளம் விடுமுறையில்!

25 comments:

  1. அகர வரிசையில் அசத்துறீங்களே சகோ வாழ்த்துக்கள்

    காதல் சொன்ன விதம் அழகு

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி™...
      சொல்லாத காதலும் அழகைத்தான் இருக்குமோ ?

      Delete
  2. எக்ஸலண்ட் தென்றல். அகர வரிசைப்படி கவிதை அமைந்தாலும அதற்குள் ஒரு உயிர் உரு(க்)கும் காதல் சிறுகதையாக அமைந்தது அருமை. மனதைத் தொட்டது.

    ReplyDelete
    Replies
    1. கதை சொல்ல வந்தாலும் அது கவிதையாகவே வருகிறது என்ன செய்ய ... நன்றி வசந்தமே .

      Delete
  3. இனிமையாய் இளமையாய்,
    இரவென்றும் பகலென்றும்,
    இதயமாய் கட்டிக்காத்த,
    இமயமான கலைஞனவன்!//அருமைவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி தங்கள் வருகை மகிழ்ச்சியளித்தது .

      Delete
  4. இயந்திரமாய்ச் சுழன்று,
    இதயம் வெடிக்க அவனாட,
    இறகிமை துயில்கொள்ள,
    இரண்டு காதல் பறவைகளும்,
    இவ்வுலகம் துறந்ததுவே!
    ஆலமரத்தடியில் சிரிப்பொலி,
    நண்பர்கள் சொல்லி அழ,
    ஆற்றங்கரையில் கொலுசோசை,
    தோழியர் பயந்து மிரள,
    ஊர்கூடி உறவும் கூடி'
    ஊர்காவல் கடவுளாய்!

    ம்ம்மம் அருமை அக்கா
    இவை எனக்கு பிடித்த வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு நன்றி .

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  6. காலங்களைக் கடந்த கவிதை !!!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி தங்கள் வருகை மகிழ்ச்சியளித்தது .

      Delete
  7. சூப்பர் .........என்றென்றும் காதல் ..

    ReplyDelete
  8. காலம் வருமுன் கடந்து செல்லும்,
    காதலர்கள் ஊர் காவலராய்,
    காலத்தால் அழியாத காவியமாய்,
    கதை சொல்லும் களஞ்சியங்களாய்,
    கடவுளாய்,கற்சிலை கலையாய்,
    கவிதையாய் வாழ்கின்ற உண்மைதனை,
    கண்முன் கொண்டு நிறுத்துகின்ற,
    கவியின் திறமைக்கு-வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வலைசரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி. அத்தனை தகவல்களையும் பதிவுகளையும் எப்படித் தான் திரட்டிணீர்களோ தெரிய வில்லை. இத்தனையும் செய்துகொண்டு பதிவும் இடுகிறீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. அருமை அருமை
    மிகவும் ரசித்து மீண்டும் மீண்டும் படித்தேன்
    மனம்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. புதிய ஆத்திச்சூடியில் காதல் உணர்வு, கவிதை நன்றாக இருக்கிறது.
    தங்களது வலைச்சரத்தில் எனது பதிவையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. கவிதைக்குள் கதையா? இதைதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றதா?

    ReplyDelete
  13. ம்ம்ம் ரெம்ப அருமையான கவிதை

    நிரம்பி
    வழிந்தொழுகும் வரிகளில்
    காதல் ரசம்

    ReplyDelete
  14. தாமதமாக வந்தததற்கு மிக மிக வருந்துகிறேன். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சந்தோசம் உங்கள் மூலம் வந்தது குறித்து மிக மிக மகிழ்கிறேன்

    கண்டிப்பாக இதை படியுங்கள்

    மீண்டு(ம்) வந்தேன்

    ReplyDelete
  15. சசி,

    ஒரு சோக காவியத்தை துள்ளல் ஓசையில் கவிதையாய் வடித்திருக்கும் பாங்கு அழகோ அழகு. படித்து மறந்தேன் மெய்மரந்தேன்.

    ReplyDelete
  16. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வாங்க!
    உயிரெழுத்துத் தொடக்கக் கவிதை உயிருள்ள கவிதை

    ReplyDelete
  17. காதல் காதல்.உணர்வோட இருக்கு வரிகள் !

    ReplyDelete
  18. நல்ல கருத்தோவியம் சசிகலா.

    ReplyDelete
  19. கவிதையாய் வாழ்கிற காதலர்கள் வாழ்விலும் ஜெயிக்க வேண்டும் என்பதே ஆசை.

    ReplyDelete