Tuesday 15 May 2012

மாயம் செய்தாயோ ...?

என்னில் ஏன் இந்த மாற்றம் ?
எதையோ தேடி வந்த
என்னையே திருடிக்கொண்ட
கள்வன் நீ ....!

உண்ணும் போதும் நீ
உறங்கும் போதும் நீ
எண்ணத்திலும்  நீ
எழுத்திலும் நீ ....!

கொஞ்சும் மழலைச் சிரிப்பையும்
உன்னுடனே பகிர்ந்து கொள்கிறேன் ...
என் கோபமும் -உன்
பார்வை பட்டவுடனே
பறந்து போகும் மாயம் கண்டேன் ...!

என் பசியையும் மறக்கச் செய்த
பாதகன் நீயே ஆனாய் ...
என்னில் அப்படி
என்ன மாயம் செய்தாய் ...?

எல்லாச் சடங்கிற்கும்
உறவுகள் அழைத்த போதும்
உனைப் பிரிய மனமில்லாது
மழுங்கி நிற்கிறேன் ...!

பசி நேரத்தில்
தலையில் குட்டி
ஆரோக்கியத்தை உணர்த்துகின்றாய் !
வம்பளந்த நேரமெல்லாம்
இப்போது உன் முகம் 
பார்த்தே கழிகிறது ..!

உனைக் கடந்து போகும்
நேரமெல்லாம் எனை
கண்ணடித்து அழைக்கிறாய் ..!

உண்டு உறங்கிக் கழித்த
பொழுதெல்லாம் -இன்று 
உன் அருகாமைக்காகவே ஏங்குகிறது ..!

எங்கெங்கோ தொலைத்த
நிம்மதியை ...
உன்னிலே காண்கிறேன் .

மின்னலென என் வாழ்வில் வந்து
மின்சாரமாய் தாக்கிய
விந்தை என்ன ..?
மின்சாரமற்ற நேரத்திலோ
உன் முகம் காணாது
சோர்ந்து போனேன் .

அவ்வளவு கருப்பா
என கோவிக்காதே ...
என்னில் வெளிச்சமே நீயென்பேன் ...!

இப்படியெல்லாம் எனைக் கவர்ந்த கள்வனை நீங்களும் பார்க்க வேண்டாமா ...?

                                                           


இன்று வலைச்சரத்தில் பொன்னும் புதனும் பதிவைக் காண வலைச்சரம் வருக வருகவே .

10 comments:

  1. ஹய்யோ... உங்களைக் கவர்ந்த கள்வன் என்னையும் கவர்ந்து விட்டான் தென்றல். கொள்ளையழகு... கள்வன் மட்டுமில்லை உங்களின் கவிதையும்தான்!

    ReplyDelete
  2. பசியை மறக்கச் செய்த பாதகன், மின்னலென வந்து தாக்கிய அழகன்... உங்களுக்குக் கவிதையைத் தந்தான். எனக்கோ நல்லதொரு ரசனையைத் தந்திருக்கிறான். கவிதையை நான் ரொம்பவே ரசிச்சேன்க்கா...

    ReplyDelete
  3. மாயக்கள்ளன்தான்.கவிதையிலும் மாயம்தான் சசி !

    ReplyDelete
  4. உங்களைக் கவர்ந்த கள்ளன், எங்களையும் கவர்ந்தவன் தான். மடிக்கணினிக்கும் நமக்கும் உள்ள தொடர்பை இதைவிட வார்த்தையில் வடிக்க இயலாது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கவிதையும்
    கள்வனும்
    அழகு

    ம்ம்ம் அருமை சகோ

    ReplyDelete
  6. எனக்கொருகோபம் கவிமீது,
    கடலளவு வாழ்த்துக்களைக்,
    கொண்டு குவித்த கதை,
    கூறவில்லையேயென்று,
    முகவரிதந்த கணணியின்,
    கம்பீரம் அழகு-வளரட்டும்,
    கவிதையுடன்-கவியும்!

    ReplyDelete
  7. எனைக் கவர்ந்த கள்வனை நீங்களும் பார்க்க வேண்டாமா ...?
    //

    உங்களைக் கவர்ந்த கள்ளன்... எங்களையும் கவர்ந்தவன் தான்...

    ReplyDelete
  8. ஆஹா! அழகோ அழகு.

    ReplyDelete
  9. கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உங்களை மட்டுமல்ல எங்களையும் தான் கள்வன் & கவிதையும் கவர்ந்து விட்டது

    ReplyDelete