Sunday 13 May 2012

கொடுப்போம் ...நீரூற்றாய்!

கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !
உங்களுடையது என்று ஏதுமில்லை !
அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது !

இலவசமாய் பெற்றதை
விற்றுப் பிழைப்பவராய்
இருப்பதை அழித்து
இனிமை காண்பவராய்
இரக்கத்தைக் கொன்று
அடித்துண்ணும் நரமாமிச பட்சியாய் !

இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்தாயா ?
கொண்டு போவதற்கு ?
இதயத்தைப் பூட்டி வைத்து
கைகளை முடக்காதே !

அன்பை வாரி வழங்குவோம் !
அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !
கருணையாய் பார்ப்போம் ....
படைப்பில் ஊனமில்லை
நடக்க வேலை செய்ய
இன்பம் தேட ,இன்னல் ஒழிக்க
அன்பைப்பெற , அன்பு செய்ய
உழைக்க சம்பாதிக்க
படிக்க, எழுத , பாட என
அனைத்தும் நமக்கு அருளப்பட்டது .

அம்மா ,அப்பா ,உறவுகள்
கொடுக்கப்பட்டன ...

இதோ ...
அனாதைகளாய்
ஊன்முற்றவர்களாய்
பார்வை இழந்தோராய்
தெருவில் விடப்பட்டவராய் ...
பைத்தியங்களாய்
மனவளர்ச்சி குன்றியவராய் ..
கைம் பெண்களாய் ...
நோயின் பிடியில் சிககியவராய்...
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவராய்
படிப்பின் தவறுகளாய்..
தினம் தினம் உடலாலும்
மனதாலும் நொந்து வெந்து
மாய்ந்து சாய்ந்து கிடக்கும்
உள்ளங்கள் எத்தனையோ ?

வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
பொறுக்க மாட்டோம் ..
வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்
காப்பாற்ற இரங்க மாட்டோம்!
யாருக்கு வேதனை !
யாருக்கு துக்கம் !
கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !
கெடுத்து வாழ்பவனை
வேதனை தேடி வரும் ...
கொடுப்போம் ...நீரூற்றாய்!
இன்று வலைச்சரத்தில் தென்றலின் அறிமுகம் இங்கே கிளிக் செய்து வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

12 comments:

  1. கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !
    உங்களுடையது என்று ஏதுமில்லை !
    அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
    வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
    அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
    அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது !
    nice.

    ReplyDelete
  2. //கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான்//

    கொடுப்போம் வாழ்வோம்

    அருமை வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  3. பிரமாதமான சிந்தனை தென்றல். கொடுக்கக் கொடுக்கக் குறைவின்றி வளர்வது அன்பும் கல்வியும். சூப்பர்ப். அதுசரி... உங்களின் வலைச்சரப் பதிவிற்கு இங்கே ஒரு லின்க் கொடுத்திருந்தால் தெரியாதவர்கள் அங்கு சென்று தென்றலை ரசிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே சசி... கொடுங்களேன்...

    ReplyDelete
  4. சமூக
    நல் உணர்வு உள்ளம் கொண்ட
    சகோவின் ஒவ்வொரு கவிதையும்
    ஊருக்கு ஆணித்தரமாக சொல்லும் நல் எடுத்துக்காட்டு

    சிறந்த கவிதை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    ஆசிரியர்ர் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியரா உங்களைப் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. வாரம் பூரா தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு வலைச்சர நந்தவனத்துல வலம் வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்க்கா. (அட... கவித... கவித!)

    கொடுத்துக் கொண்டே இருங்கள்ன்னு அருமையான எண்ணத்தை விதைச்சிருக்கீங்க. நானும் இனிமே அளவில்லாம கொடுக்கப் போறேன். கவிதை சூப்பரு!

    ReplyDelete
  6. கொடுப்போம் கொடுப்போம் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
    வலைச்சர ஆசிரியராக தேர்வானதற்கு என் வாழ்த்துக்கள்
    சசி அக்கா..

    ReplyDelete
  7. எடுப்பதில் ஏது இன்பம்!
    கொடுப்பதில்தானே இன்பம் என்று கூறும் நல்ல கவிப் பதிவு

    ReplyDelete
  8. சமுதாய வீதியிலே கண்ட அவலங்களை மட்டும் சொல்லாமல், அவைகளை நீக்கும் விடையாக ”கொடுப்போம் .... நீரூற்றாய்” என்று சொன்ன உங்கள் கவிதை அருமை!

    ReplyDelete
  9. அருமையான வரிகளுடன் கவிதை. கொடுப்பதுதானே வாழ்க்கை.

    ReplyDelete
  10. //கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான்!//

    உண்மைதான்.இன்றைக்கும் கடையெழுவள்ளல்கள்
    நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. இந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி! அதே சமயம் எனது வலைத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி!

    ReplyDelete
  12. கவிதை வழக்கம் போல "மிக நன்றாக" இருந்தது.
    இந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete