Sunday 25 March 2012

தொடர்ந்திடுவோம் பயணமதை


பசியென்ற ருசிமட்டும்
 படைப்பில் இல்லையெனில்
 இயக்கங்கள் நின்றிருக்கும்
 இரையெடுத்த மலைப்பாம்புபோல்.

 தாய் இறக்கி விட்டபின்
 மண்ணில் மாயும்வரை
 நிலையில்லா ஓட்டங்கள்
 இன்பமும்  துன்பமும்
 பார்வையின் வெளிப்பாடே !

 உள்ளார்க்கு  எல்லாமே
 எந்நாளும்  அரங்கேறும்
 இல்லார்க்கு உறவுகளும்
புள்ளியாய் தூரத்தில்!

 வழியெல்லாம் சிந்தியவிதை
 களம்சென்று சேர்வதில்லை
 ஒளியாய் உலாவிவரும்
 நிலவில் ஒளியில்லை!
 பணம்  படுத்தும்பாடு கண்டேன்
 அதுபடும் பாடும் கண்டேன்
 குணம்கொண்ட மனிதர்கள்
 பணமின்றி வாடுகின்றார்!

 மரித்த பூவே மாலையாகும்
 மனிதமனம் நினைப்பதில்லை
 மணம்வீசும் நேரம்வரை
 புவிதனில் ஆராட்டு!

 நல்நோக்கத்தை மனமணிந்து
 ஆக்கத்தை உழைப்பாக்கி
 அன்போடு சீராட்டின்-நாளை
 அகிலமே வணங்கி நிற்கும்!

 கனவுநாம் காண்கின்றோம்
 காலம்தான் கூறவேண்டும்
 உண்மைதனைத் தாழ்பணிந்து
 நல்லதை எழுதுகிறேன்!

 "நாம்" விடைபெற்றுப் போனாலும்
 "நம்" கவிதைகள் உண்மைவாழ
 போராடும்; என்ற நம்பிக்கையில்
 தொடர்ந்திடுவோம் பயணமதை!

40 comments:

  1. அர்த்தமுள்ள அழகிய கவிதை...

    ReplyDelete
  2. உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  3. //உள்ளார்க்கு எல்லாமே
    எந்நாளும் அரங்கேறும்
    இல்லார்க்கு உறவுகளும்
    புள்ளியாய் தூரத்தில்!//
    brilliant!அருமையான கவிதை சசிகலா.

    ReplyDelete
  4. முதல் பத்தியே இந்த கவிதைக்கான பெரிய முதலீடாய் போனது சசி, அருமையான வார்த்தை கோர்வைகள்...இயக்கங்கள் நின்றிருக்கும்
    இரையெடுத்த மலைப்பாம்புபோல்.சூப்பர் லைன்...

    பணம் படுத்தும்பாடு கண்டேன்
    அதுபடும் பாடும் கண்டேன்
    குணம்கொண்ட மனிதர்கள்
    பணமின்றி வாடுகின்றார்

    இது என்னமோ உணமை தான் பணத்தை நம்ம படைச்சோமா இல்லை அது நம்ம படச்சுச்சான்னு ஒன்னும் விளங்கல,

    மரித்த பூவே மாலையாகும்
    மனிதமனம் நினைப்பதில்லை

    கைத்தட்டல் உங்களுக்கு.... சோதனையை தாங்கும் தங்கம் தான் சொக்கத்தங்கமாய் ஒளிர்விடும், அதுபோல தான் மனிதரும், எவ்வளவுக்கெவ்வளவு பிரச்சனைகளையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் எதார்த்தமா எடுத்துக்கிறோமோ அவ்வளவுக்கவ்வள்வு வழமான வாழ்வு உண்டென்று உரைக்கிறது இவ்வரி...

    கவிதை அருமை..வாழ்த்துக்கள் சசி....

    ReplyDelete
  5. எத்தனையோ
    அர்த்தங்கள் பொதிந்த வரிகள்
    சிறந்த சிந்தனை சிறப்பான கவிதை தோழி

    ReplyDelete
  6. வணக்கம்!
    // உண்மைதனைத் தாழ்பணிந்து
    நல்லதை எழுதுகிறேன்! //
    என்று பாடும் உங்கள் நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  7. சென்னை பித்தன் ..
    தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

    ReplyDelete
  8. ரேவா ..
    தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. செய்தாலி ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. தி.தமிழ் இளங்கோ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. அயர்ந்து நிற்கும் மனங்களை அழகாய்த் தட்டியெழுப்பும் அருமையானக் கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  12. கீதமஞ்சரி ...
    ரசித்து வாசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  13. தொடர்ந்து வளரட்டும் உங்கள் கவிப்பயணம்.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  14. \\\பசியென்ற ருசிமட்டும்
    படைப்பில் இல்லையெனில்
    இயக்கங்கள் நின்றிருக்கும்
    இரையெடுத்த மலைப்பாம்புபோல்.///

    நல்ல கவிதை
    சிறந்த வரிகள்

    ReplyDelete
  15. அழகான கவிதை அர்த்தமுடன் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  16. AROUNA SELVAME...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. நம்பிக்கைபாண்டியன்
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. மனசாட்சி™ ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. //மரித்த பூவே மாலையாகும்//

    மிகவும் பிடித்த அர்த்தமுள்ள வரிகள். கவிதை பிரமாதம்

    ReplyDelete
  20. மணம் வீசும் மலர்கள் மலரட்டும் கவிதைகளாய்!

    ReplyDelete
  21. Azhakaana varikal-
    aasuvaasa paduthina!

    ungal payanam-
    thodarattum!
    naalai sarithirangal-
    athu sollattum!

    ReplyDelete
  22. //தாய் இறக்கி விட்டபின்
    மண்ணில் மாயும்வரை
    நிலையில்லா ஓட்டங்கள்
    இன்பமும் துன்பமும்// அழகான வரிகள்.

    ReplyDelete
  23. மிக அருமையான கவிதை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சசி அக்கா

    ReplyDelete
  24. Avargal Unmaigal ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. Seeni ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. விச்சு...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. Esther sabi ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. //வழியெல்லாம் சிந்திய விதை
    களம்சென்று சேர்வதில்லை//
    நான் இரசித்த வரிகள் இவை.

    உண்மைகள் வாழ நம் கவிதைகள்
    நிச்சயம் போராடும்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. இந்த முறை ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கு...

    பணம் படுத்தும்பாடு கண்டேன் | அதுபடும் பாடும் கண்டேன் | குணம்கொண்ட மனிதர்கள் | பணமின்றி வாடுகின்றார்! -இந்த வரிகள் நிதர்சனம்!

    மொத்தக் கவிதையும் தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்ட இயலாதபடி எல்லா வரிகளும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன தென்றல்!

    ReplyDelete
  30. உங்கள் சிந்தனையும் வார்த்தைக் கோர்வையும் போட்டி போடுகின்றன சசி.மனம் நிறைந்த பாராட்டு !

    ReplyDelete
  31. முன்னரே வாக்கிட்டேன்- கருத்தை
    மொழிந்திட திறக்க வில்லை
    பின்னரும் வந்தேனிங்கே-என்ன
    பிழையெனத் தெரியவில்லை
    சொன்னயிக் கவிதைநன்கே-வந்த
    சொற்களும் நன்கேநன்கே!
    இன்னமும் இதுபோல்தினமே-நீர்
    எழுதினால் மகிழும்மனமே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. உள்ளார்க்கு எல்லாமே
    எந்நாளும் அரங்கேறும்
    இல்லார்க்கு உறவுகளும்
    புள்ளியாய் தூரத்தில்!....

    உயிருள்ள வரிகள் அருமை ...

    ReplyDelete
  33. கவிதை உங்களுக்கு மிக இயல்பாக வருகிறது
    வாழ்த்துகள்

    ReplyDelete
  34. வே.நடனசபாபதி ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  35. கணேஷ்..
    வருக வசந்தமே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  36. ஹேமா..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  37. புலவர் சா இராமாநுசம் ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  38. தினேஷ்குமார் ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  39. ஹைதர் அலி ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  40. நாம்" விடைபெற்றுப் போனாலும்
    "நம்" கவிதைகள் உண்மைவாழ
    போராடும்; என்ற நம்பிக்கையில்
    தொடர்ந்திடுவோம் பயணமதை!

    பயணம் தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete