Saturday 24 March 2012

எழுதுகோலின் கதை !


எண்ணிய தெழுதுகிறேன்
 எனக்கென எழுதவில்லை
 எல்லோரும் இதிலுண்டு!
ஆறு ஓடினாலும் தாகம் தீர்திடவே
 அள்ளிப் பருகிடுவார்.
 அறிவென்ற ஊற்றுக்கண்
சுரப்பதை அறியாமல்
 எள்ளி நகைக்கின்றார்
 பைத்தியம் என்றிடுவார்!
 ஆணாய் இருந்துவிட்டால்
 எவளுக்கு எழுதுகின்றாய்
 பெண் எழுதும் திறன்கொண்டால்
 எவனைப் பாடுகிறாய்.
 எழுத்தாளர் குடும்பத்தில்,
 எத்தனை வேதனைகள்.
 எழுத மனம் வைத்தே
 எழுத்தும் இவர் கணக்கில்,
 பொதுவுடைமை காண்பதில்லை!
 அவரவர் மனம்போலே,
 ஆயிரம் சந்தேகம்.
 பண்பாடும்  மொழிவாழ்வும்,
 காக்கும் கைகளுக்கு,
 விலங்கிடும் உறவாலே,
 மனம் பட்ட மரமாக,
 எழுதும் எழுத்துக்கள்,
 அவர்துயர் துடைத்துவிடும்!
 காவியம் படைப்பதற்கும்,
 சரித்திரம் சொல்வதற்கும்,
 அவர்துயர் துடைப்பதற்கும்,
 அசிக்கங்கள் அழிப்பதற்கும்,
 பொமுதுகள் போவதற்கும்,
 நாமெழுத வேண்டும்!
 நமக்கொரு இதயமுணடு,
 நினைக்க நாதியில்லை.
 மேடையில் புகழ்வார்கள்,
 ஜாடையாய் வீதியிலே,
அரைவட்டு  சொல்வார்கள்.
 எழுதுகோல் பிடிப்பவர்கள்,
 ஈனப்பிறவிகளா? கேட்கின்றேன்!
 சிரிக்கவும் முடியவில்லை,
 அழவும் வழியில்லை,
 எண்ணமே பாலையாக,
 கனவுகள் வாழ்க்கையாக,
 எத்தனைநாள் ஓடுவது,
 என்னநாம் செய்குவதோ?

யாருக்காய் எழுதுவது,
 உலகுக்கா  ஊருக்கா,
 உறவுக்கா, உண்மைக்கா,
 அன்புக்கா, பண்புக்கா,
 இயற்கைக்கா, காலத்துக்கா,
 காதலுக்கா, பிரிவுக்கா,
 பிறப்புக்கா; இறப்புக்கா!
 யாருக்காய் எழுதாமலிருப்பது?
 எழுத்தாளனென்ன?
 சுமையா! சுமைதாங்கியா?

41 comments:

  1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

    மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  2. ''...எண்ணிய தெழுதுகிறேன்

    எனக்கென எழுதவில்லை...''
    என்று பல கருத்துகள் அலசியுள்ளீர்கள் சகோதரி. உங்கள் எழுத்துகள் பல நல்ல வினைகள் புரியட்டும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. உடன் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  4. எழுத்து
    மதியையும் மனதையும்
    நேர்கோட்டில் இணைக்கும்
    ஒருவித தவம்


    மதிக்கும்
    மனத்திற்கும் அவ்வப்போது
    தர்கங்கள் ஏற்படும்
    தர்காக்கள் நீளுமாயின் கலைந்துவிடும்
    நம் தவம்

    நகைப்போர்
    தூற்றுவோர்
    நம்மைச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்
    ஒருசில நகைப்பு தூற்றலுக்காக நம் தவத்தை கலைப்பது
    அழகல்ல

    எழுத்தாய்
    உருவெடுக்கும்
    நல்ல எண்ணங்கள் சிந்தனைகள்
    நாளைய தலைமுறையை
    நெறிப்படுத்துகிறது

    நிறைய எழுதுங்கள் தோழி

    ReplyDelete
  5. //யாருக்காய் எழுதுவது,
    உலகுக்கா ஊருக்கா,
    உறவுக்கா, உண்மைக்கா,
    அன்புக்கா, பண்புக்கா,
    இயற்கைக்கா, காலத்துக்கா,
    காதலுக்கா, பிரிவுக்கா,
    பிறப்புக்கா; இறப்புக்கா!
    யாருக்காய் எழுதாமலிருப்பது?
    எழுத்தாளனென்ன?
    சுமையா! சுமைதாங்கியா?//

    ivvalaavu kelvikalaa ?

    ReplyDelete
  6. எழுத்து ஒரு வரம். அது ஓரமாய் இருந்து நம்மை இயக்கம்.
    நமக்கான எழுத்தே உலகை வசப்படுத்தும்.
    நல்லதொரு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பிறர் ரசிக்கும்படி எழுதும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நினைப்பவர் சிலரால் எழுத முடிவதில்லை தங்களுக்கு அந்தத் திறமை உண்டு என்பதை தங்கள் பதிவுகள் எடுத்துரைக்கின்றன.
    கவிதை மிக நன்று.

    ReplyDelete
  8. எதற்கென எழுதுவது? எழுத்தாளன் சுமைதாங்கியா? நல்ல கேள்விகள். என்னைப் பொறுத்தவரை உண்மைக்காய் எழுத வேண்டும் தென்றல். அழகான சிந்தனை விதை தூவும் பாக்கள் பல இன்னும் உங்களிடமிருந்து பொங்கிவர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. யாருக்காய் எழுதுவது,
    உலகுக்கா ஊருக்கா,
    உறவுக்கா, உண்மைக்கா,
    அன்புக்கா, பண்புக்கா,
    இயற்கைக்கா, காலத்துக்கா,
    காதலுக்கா, பிரிவுக்கா,
    பிறப்புக்கா; இறப்புக்கா!
    யாருக்காய் எழுதாமலிருப்பது? //

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    சொல்லிச் சென்றவிதம் மனம் தொட்டது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எழுத்தேந்தியவன் படும் பாட்டை மிகவும் தேர்ந்தநடையில் ஏந்திய எழுத்துக்களாலேயே சொல்லிச் செல்கிறீர்கள். பிரமாதம், பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  11. எழுத்துக்களின் சிறப்பை திறம்பட கூறியுள்ளீர்கள் அக்கா

    ReplyDelete
  12. எழுதுகோல் அதை எழுதுபவரின் கண்ணாடி எனலாம்.அதைவைத்து எழுதுபவரின் மனதை படம் பிடிக்கிறது.

    ReplyDelete
  13. ‘யாருக்காய் எழுதுவது?’ எனக்கேட்டு,‘எழுத்தாளனென்ன?
    சுமையா! சுமைதாங்கியா?’ என முடித்திருக்கிறீர்கள்.நல்ல கேள்வியுடன் கூடிய கவிதை.எல்லோருக்காகவும், தனக்காகவும் தான் எழுத்தாளர்கள் எழுதுகின்றார்கள்.தாங்கள் சுமந்த சுமையை எழுத்தின் மூலம் இறக்கிவைக்கிறார்கள். சிலசமையம் பிறர் சுமையையும் சுமக்கிறார்கள்.எனவே அவர்கள் இரண்டும்தான்.

    ReplyDelete
  14. பிறர் துயரை பகிர்ந்து எழுத்தில் இறக்கி மனமிரங்க வைப்பவர்கள் எழுத்தாளர்கள்!

    சுகமான சுமைகள்!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  15. எழுத்து படும் பாடு இந்த உலகில் கொஞ்சநஞ்சமில்லை.ஒரு எழுத்து எவ்வளவு உயரத்திற்கு தூக்கி பேசப்படுகிறேதோ அவ்வளவு உயரத்திற்கு இழித்தும் பேசப்படுகிறதாக சொல்வார்கள்.விஷயமறிந்தவர்கள்.அதை சொல்லும் படைப்பு.நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வணக்கம்! ஒரு பெண், எழுத்தாளராய் இருப்பதில் உள்ள இடர்ப்பாடுகளை, நெஞ்சின் நெருடல்களாகச் சொல்லியவிதம் புரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  18. உங்கள் கவிதை படித்து மனம் வலித்தது. எழுதுபவரின் நிலை இப்படித்தானா..? இதுதான் ஒரு கவிஞனுக்கு கிடைக்கும் மரியாதையா..? ஏனிந்த ஏற்றத்தாழ்வு..?அவர்களில்ல திறமைகள் எவ்வளவோ..!கற்பனை திறன் என்பது கடவுள் கொடுத்த வரம்..!இன்னும் எவ்வளவோ எழுத நினைக்கிறேன். ஆனால் போதுமென பேனா சொல்கிறது. இன்னும் நிறைய கற்பனைக் கவிதைகளுக்காய் காத்திருந்து வாசிக்கத் துடிக்கும் வாசகன் நான்...........,

    ReplyDelete
  19. செய்தாலி
    எழுத்து
    மதியையும் மனதையும்
    நேர்கோட்டில் இணைக்கும்
    ஒருவித தவம் //
    மனதிற்கு இதம் தந்த வரிகள் .
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. "என் ராஜபாட்டை"- ராஜா...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. தோழன் மபா, தமிழன் வீதி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  22. T.N.MURALIDHARAN...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. கணேஷ் ..
    வருக வசந்தமே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  24. ரமணி ....
    ஐயா தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. கீதமஞ்சரி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. Esther sabi..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. விச்சு..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. வே.நடனசபாபதி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. Seshadri e.s. ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. விமலன்
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. Rathnavel Natarajan ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. தி.தமிழ் இளங்கோ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. saravanandls
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. மேடையில் புகழ்வார்கள்,
    ஜாடையாய் வீதியிலே,

    பேனா கனக்கிறது..

    ReplyDelete
  35. கடைசியில் நல்லாக்கேட்டீங்க!அருமை சகோதரி

    ReplyDelete
  36. மனச்சுமையைப் பேனா முனையில்
    இறக்கி வைத்திருக்கிறீகள்.

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  37. sasikala;

    yaarukkaakavum-
    ezhuthida venaan!
    ungal manathil nallathu-
    ena paduvathai ezhungal!

    melum-
    seythali ;
    sonnathai naanum aamothikkiren!
    athai vida azhakaa solla;ezhuthida!
    theriyala!

    ungalukku-
    vaazhthukkal!

    ReplyDelete
  38. மனம் திறந்து தமக்காக மட்டுமே எழுதுபவர்களின் மனநிலையை அப்படியே சொல்கிறது உங்கள் கவிதை சசி !

    ReplyDelete