Saturday 17 March 2012

தோற்கும் முன் விழித்திடு


அதிகாலைத் தெருமுனையில்
வேர்த்து நிற்கும் இயந்திரங்கள்
அள்ளிச் செல்லக் காத்திருக்கும்
சாரை , சாரையாய் வாகனங்கள்
நாய்பிடிக்க பிணம் பொறுக்க
நகராட்சி அனுப்புகின்ற
கறுப்பு நிற ஊர்தி போல் !
 உண்டு உறங்காமல்
உறவைப் பேணாமல்
வாழ்வைத் தேடியிவர்
வாழ்வு தொலைக்கின்ற
ஓட்டம் எதற்க்காக ?

ஜாண் வயிறு நிரப்பவா ?
பெற்றவரைக் காக்கவா ?
பெண்ணைக் கரை சேர்க்கவா ?
குழந்தை கல்வி பயிலவா ?
இல்லறம் செழிக்கவா ?
ஊரார் உயர்வெனப் பேசவா ?

காரணம் எதுவாய் ஆனாலும்
வாச வாழ்வு என்றெண்ணி
வாழ்வு தொலைத்தல் சரியில்லை
இருப்பதில் வாழப் படித்திருந்தால்
இயந்திர வாழ்வு தேவையில்லை
இனிய கூட்டில் குஞ்சுகளும்
தனியாய்த் தவிக்கும் அவலம் ஏன்?


கருணையில்லா இதயங்கள்
பெயர் விளங்கக் கட்டிவைத்த
வானுயர மாளிகையில்
இவரென்றும் அடிமைகளாய் !
ஹை டெக்  வியாபாரத்தின்
கனவுலக சஞ்சாரங்கள்
குளிர்பதன அறைகளிலே
மரித்துப் போன பாசங்கள் !

பகலவன் ஒளி கண்டறியா
இருள் உலக உறவுகள்
பாஸ்ட்புட் பெயராலே
தேடிவரும் புற்று நோய்கள்
பிராய்லர் கோழி போல்
உதிர்ந்து விழும் விண்மீன்கள்
தான் மரித்து மீன்பிடித்து
தரணி ஆளல் தேவையா ?

கூடையில் பணத்தை அள்ளி
பாசத்தை விலைக்கு வாங்க
நினைத்தால் தோல்விவரும்
உறவுகள் படி கடக்கும்
அன்பின்றி வாழ்க்கையிலே
நிம்மதி மலர்வதில்லை
பணம் தந்த நிம்மதி காண்
பறந்தோடும் ஓர் நாளில் !
 நாகரீகம் பெயராலே
அநாகரீகம் விளைகிறது
தோற்கும் முன் விழித்திடு !

குடும்பமென்ற கூடுவிட்டு
அன்பு விடை பெறுங்காலம்
வருமுன்னே நீ எழுந்தால்
உனக்கென வாழ்ந்திருக்க
உறவுகள் நிலைத்திருக்கும் !

 நாடி நரம்பு செயலிழந்து
விழுகின்ற நேரமதில்
நெஞ்சோடு சேர்த்தணைத்து
ஆறுதல் சொல்ல உறவு வேண்டும்
கணவனோ ?  மனைவியோ ?
குழந்தையோ , குடும்பமோ ?
யாராயினும் பழுதில்லை
தூக்கிப் போட ஆளின்றி
தெரிநாயாய் வீழுமுன்
உறவுகளைப் பலப்படுத்து
உயிர் கொல்லும் ஓட்டத்தால்
எந்நாளும் பயனில்லை !



 

 

40 comments:

  1. இன்றைய அவசர உலகினை கண்முன் காட்சிப்படுத்துகிற் கவிதை,நன்றாயிருக்கிறது,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை அருமை..

    ReplyDelete
  3. எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியாமல் தலைதெறிக்க ஓடுகின்ற அவசர உலக மனிதர்களின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்தீர்கள் தென்றலே! நல்ல சிந்தனை விதைத்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. இருப்பதில் வாழப் படித்திருந்தால்
    இயந்திர வாழ்வு தேவையில்லை

    அவசர வாழ்வின் அவலம்..

    ReplyDelete
  5. அவசர யுகத்தில் அவதியுறும் எம் பாடுகள் அக்கா அழகான கவி

    ReplyDelete
  6. அவதியாய் வாழும் அவசர உலகின்
    நிதர்சனம் காட்டும் கண்ணாடி....

    ReplyDelete
  7. இன்றைய நிதர்சன வாழ்வை அப்படியே எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் சசி !

    ReplyDelete
  8. அவசர உலகின் அவலங்களை
    சொல்லிச் செல்லும்விதம் அருமை
    நிச்சயம் சிலரையாவது விழிக்கச் செய்யும் அல்லது
    அது குறித்து சிந்திக்கவாவது செய்யும் படைப்பு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஒரு அசம்பாவிதம் நடந்துமுடிந்த பின்தான், அதைப்பற்றி கவலைப்படுகிறோம் ! கும்பகோணத்தில், பள்ளிப்பிள்ளைகள் தீயில் கருகியதற்கு நாம் அனைவருமே காரணம் ! நிறைய விஷயங்களை கவிதை தொட்டு செல்கிறது !.. பாராட்டுகிறேன் !!

    ReplyDelete
  10. விமலன் ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  11. guna thamizh ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  12. போதும் என்ற மனமிருந்தால் ஓட்டம் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன் . நன்றி வசந்தமே

    ReplyDelete
  13. இராஜராஜேஸ்வரி..
    அவலத்தோடு நாமும் ....தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  14. Esther sabi...
    அன்பை காட்டவும் அவசரம் என்ன செய்வது தங்கையே ...

    ReplyDelete
  15. மகேந்திரன் ..
    அண்ணா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி அண்ணா .

    ReplyDelete
  16. ஹேமா..
    நிச்சயமாய் மாற்ற முடியாது என தெரிந்தும் . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  17. ramani ..
    சிந்திக்கவும் மறந்து ஓடும் அவலம் . ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா .

    ReplyDelete
  18. AMK.R.PALANIVEL ...
    தங்கள் கருத்து உண்மையே .தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  19. நகர வாழ்க்கையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாகிவிட்டது! கூட்டுக் குடும்ப வாழ்க்கையை யாரும் தற்போது விரும்புவதில்லை! தம் மீது பெற்றோர் ஆதிக்கம் செலுத்துவதை குழந்தைகள் விரும்புவதில்லை! vote 4!

    ReplyDelete
  20. ரொம்ப பீல் பண்ண வச்சுட்ட சசி,,,,,,,

    ReplyDelete
  21. வணக்கம்! உறவுகளைப் பலப் படுத்தாத, ஓட்டமும் நடையுமான ஓய்வு ஒழிச்சல் இல்லா வாழ்வில் பயன் இல்லை என்பதை கொஞ்சம் கோபமான வரிகளில் கவிதையாய் தந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  22. //நாகரீகம் பெயராலே
    அநாகரீகம் விளைகிறது//

    நாட்டு நடப்பை நயமாய் சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒவ்வொரு வரியும் அற்புதம்.கவிதைக்கு பொருத்தமான தலைப்பு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. நாடி நரம்பு செயலிழந்து
    விழுகின்ற நேரமதில்
    நெஞ்சோடு சேர்த்தணைத்து
    ஆறுதல் சொல்ல உறவு வேண்டும்
    கணவனோ ? மனைவியோ ?
    குழந்தையோ , குடும்பமோ ?
    யாராயினும் பழுதில்லை
    தூக்கிப் போட ஆளின்றி
    தெரிநாயாய் வீழுமுன்
    உறவுகளைப் பலப்படுத்து
    உயிர் கொல்லும் ஓட்டத்தால்
    எந்நாளும் பயனில்லை !

    -நல்ல வரிகள்
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  24. ரமேஷ் வெங்கடபதி ..
    தங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சி அளித்தது . நன்றி

    ReplyDelete
  25. shanmuham Dhana...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ ..
    கோபம் இல்லங்க வருத்தம் .தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  27. வே.நடனசபாபதி ..
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  28. Seshadri e.s. ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  29. இன்றைய காலத்தை...வாழும் வாழ்க்கையை சிந்திக்க வைக்குது. மிக அழகாக கவிதை வரிகள் மின்னுகின்றன

    ReplyDelete
  30. நல்ல சமூக நோக்கு கவிதை

    ReplyDelete
  31. அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  32. இன்றுதான் தங்கள் வலைப்பதிவு கண்ணில் பட்டது
    மிக அழகிய கவிதைகள் தங்கள் தளத்தை எனது வலையில் இணைத்துள்ளேன்

    ReplyDelete
  33. மனசாட்சி ....
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  34. செய்தாலி...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  35. பி.அமல்ராஜ் ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  36. யாழ். நிதர்சனன் ...
    தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  37. இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்!

    ReplyDelete
  38. unmai thaan avasar ulakai-
    urithu vitteerkal!

    melum uriththu thongavidungal-
    konjamaavathu thirunthuvomaaka!

    ReplyDelete