Wednesday 14 March 2012

திருமணச் சந்தையிலே

இருளும் ஒளியுமிங்கே
இசைப் பாடி பயணம் செய்ய
இணையும் துணையும் மட்டும்
இரக்கமற்ற இழிமனமாய் !

அன்புக்கும் விலை வைக்கும்
அற்ப மன மானிடர்கள்
அறிவுசார் ஜீவியென்ற
அவதார வேடங்களில் !

மழலைச் செல்வம் இல்லையென
மடிப்பிச்சை எடுத்துப் பெற்ற
மங்கை குல மாதரினில்
சிவபபொன்றும், கருப்பொன்றும் !

கலையரசி , தமிழரசி
குடும்பத்துக் கண்மணிகள்
மழலையாய் தவழ்ந்து
மங்கையாய் மலரும் வரை
இரண்டும் இருகண்கள்  !

பூப்பெய்தி புதுமலராய்
மலர்ந்த நேரம்முதல்
புன்னகைத் தமிழ் வாழ்வில்
பொய்யாய்ச் சிரிக்கிறது
பிறப்பால் அவள்
கறுப்பாய்ப் போனதால்  !

பெற்றோர் பேதலிக்க
பெருஞ்சுமை அவளாக
மாமன் மகன் உறவு கூட
தண்ணீரில் எழுதியதாய் !

பெண்பார்க்க வந்தவரும்
கண்பார்த்துச் சென்று விட்டு
தமிழரசி எமக்கு வேண்டாம்
கலையரசி உண்டோ சொல்
என்றுரைத்து எறிந்த ஈட்டி
தந்த வடு ஆயிரம்  !

உலக அழகி கிளியோப்பட்ட்ரா
கறுப்பினப் பெண்
உரைத்து தேற்றுகின்ற
பெற்றோர் மனப்பாட்டு
கண்ணில் நீர் நிறைய
அன்னை மடி சாய்கின்ற
அவள் மன வேதனைக்கு
ஆறுதல் யார் சொல்ல  !

மூத்தவள் இருக்க இளையவளை
கொடுப்பதெப்படி ?
காத்திருந்து காலம் போக
கடைசியில் தமிழ் சொன்னால்
எனக்கு வேண்டாம் திருமணம்
தங்கைக்கு பாருங்களேன்
தந்தையோ தவிப்போடு
தமிழுக்கு கூனோ , குருடோ
தேடி புறப்பட்டார்  !

ரோசாப்பூ நிறமென்றால்
இலவசமாய்க் கொண்டிடுவர்
கொஞ்சம் குறைவானால்
பொன்பேசும் உறவுகளை
கறுப்பு என்றானால் சந்தையிலே
பெண் ஊசி காது ஒட்டகமாய்
மனிதா மாறமாட்டாயா ?

மகராசிக் கையென்று
கைநீட்டம் வாங்கியதும்
எதிர்ப்பில் வந்தால்
எல்லாம் நடக்கும்
சொல்லிச் சொல்லி மாயந்தவரும்
எங்கே தேடுகிறேன்
எல்லாமே பொய்தானோ ?

இறைவனுக்கு அபிஷேகம்
பொங்கல் படையலிட்டு
காணிக்கை லஞ்சமென
கொடுக்கின்ற கனவான்கள்
செய்த பாவமெல்லாம்
தீருமென்ற நம்பிக்கை

இரக்கமில்லா அரக்கர் கூட்டம்
தாய் என்றும் சேய் என்றும்
பாடி கொலல் பெரும்பாவம்
சாயத்தில் என்ன வாழ்கிறது
இதய பாசத்தைப் பகிருங்களேன்  !

      

34 comments:

  1. நிறத்தைப் பார்த்து நின்று போகும் மணப்பெண்ணின் மனவேதனையை அழகாய் கவிதை வடித்து கலங்கவைத்து விட்டீர்கள் .,

    ReplyDelete
  2. இத்தகையத் துயரங்கள் களைய, பெண்களுக்குக் கல்வி அவசியம்! சுய ஈட்டு மணவாழ்க்கையை கொண்டு வரும்!

    ReplyDelete
  3. வணக்கம்!ஆசைக் கனவான்களும், நகைப் பைத்தியங்களும், கல்யாணத் தரகர்களும் உள்ளவரை திருமணம் என்பது ஒரு சந்தைக் கடைதான். அன்புக்கு முதலிடம் தரும் உங்கள்

    // சாயத்தில் என்ன வாழ்கிறது
    இதய பாசத்தைப் பகிருங்களேன் ! //

    என்ற எண்ண வரிகள் அனைத்து உள்ளங்களிலும் பரவ வேண்டும்.

    ReplyDelete
  4. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

    ReplyDelete
  5. நிறங்களை மட்டும் காணும் மனிதர்களை நான் மனிதர்களாய் எண்ணுவதில்லை ..
    உணர்வுகளை உரைக்கும் உன்னத கவிதை ... என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வண்ணத்தில் என்ன இருக்கிறது,மனித எண்ணத்தைப் பாருங்கள்!அழகாகச் சொல்லி விட்டீர்கள்,நன்று

    ReplyDelete
  7. தவிர்க்க முடியாத பேதமாய் சமூகத்தில் ஊறிக்கிடக்கிறது.

    ReplyDelete
  8. எல்லா அழகுப்‌ பொருள்களும் பெண்களுக்கு சிவப்பழகை வழங்குவதாய்தான் சொல்கின்றன (ஏமாற்றுகின்றன). கருப்பாய் இருந்தால் அழகில்லையோ என்று பெண்ணுக்கே ஒரு குற்ற உணர்வு வந்துவிடுமோ என எனக்குத் தோன்றும். இயல்பான கருப்பிலும் அழகு உண்டென்று புரிந்து ரசிப்பவர் குறைவுதானே? நிறத்தில் என்ன இருக்கிறது என்பதை படிப்போர் மனதில் ஆணியாய் பதியும் வண்ணம் சொல்லிட்டீங்க தென்றல்!

    ReplyDelete
  9. தனிமரம் ..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. ரமேஷ் வெங்கடபதி ..
    கல்வி வரதச்சனை தான் குறையும் என்பது என் கருத்து.தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. தி.தமிழ் இளங்கோ..
    வரிகளால் திருந்தினால் மகிழ்ச்சியே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. அரசன் சே ..
    என் உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி .

    ReplyDelete
  13. கறுப்பு தான் எனக்கு புடிச்சக் கலரு.. ன்னு ஒரு பெண் பாடுகிறாள் சினிமாவில்! காரணம் பெண்கள் மனத்தைத் தான் பார்க்கிறார்கள். ஆண்கள் பாவம்!!

    ReplyDelete
  14. சென்னை பித்தன் ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. Sekar...
    ஊறியதை தேய்த்து கழுவ சொல்லுவோம் .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. கணேஷ்...
    ஆண்கள் ஒதுக்கியே அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிட்டாங்க வசந்தமே .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. AROUNA செல்வமே..
    ஆண்கள் தான் நிறத்தை பார்ப்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. குணம்
    பார்க்க கண்ணில்லாத குருடர்கள்
    நிறம் பார்க்கிறார்கள்


    நல்லா கவிதை தோழி

    ReplyDelete
  19. மனதின் நிறம் பார்க்காத கபோதிகளும் நிறைந்த உலகிது. அதனால்தான் பெண்ணிற்கு வேதனை. நன்கு எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. kalanga vaiththa kavithai!
    ovvoru aanum sinthikkanum'

    ReplyDelete
  21. என்னங்க இப்படி!! சுரீர்னு ஒரு கவிதை. "சாயத்தில் என்ன இருக்கிறது" - சாட்டையடி.

    ReplyDelete
  22. நிறம் என்பது என்ன? அதில் ஒரு மண்ணும் இல்லை அதை பெரிதாக்குபவர்கள் மனித வர்க்கமே கிடையாது.. நல்லதோர் கவி சசி அக்கா

    ReplyDelete
  23. மனம் பார்க்காமல் தோலின் நிறம் பார்க்கும் மடமை உள்ளவர்களை எத்தனை பெரியார், பாரதியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள். குரங்கு கையில் பூ மாலை போல பெண்கள் அல்லலுறத்தான் வேண்டும் போல. கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  24. செய்தாலி
    எண்ணத்தை மாற்றுவோம் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. kovaikkavi ..
    கண்ணிருந்தும் குருடர்கள் தான் சகோ .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. சீனி ...
    சிந்திப்பார்களா ? .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. விச்சு ..
    சாட்டை அடிக்கும் திருந்தாத மனிதர்கள் என்ன செய்வது .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. Esther sabi ...
    பெண் பார்க்கும் படலத்தில் முதல் வைக்கும் கேள்வியே அதுதானே சகோ .

    ReplyDelete
  29. ராஜி...
    மாற வேண்டும் என்பதே அவ .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. அன்புக்கும் விலை வைக்கும்
    அற்ப மன மானிடர்கள்
    அறிவுசார் ஜீவியென்ற
    அவதார வேடங்களில் !//கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. //சாயத்தில் என்ன வாழ்கிறது
    இதய பாசத்தைப் பகிருங்களேன்!//

    இந்த கருத்தை இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும். துரதிஷ்டவசமாக நம்மில் சிலர், வண்ணம் குறைவாக உள்ளவர்களை கருப்பன் என்றும் கருப்பாயி என்றும் அழைத்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையையும் மற்றோர் மனதில் கருப்பு என்றால் அழகு குறைவானது என்ற எண்ணத்தை உண்டாக்குகிறோம். என்றைக்கு புற அழகை விட்டு மன அழகை இரசிக்க/விரும்ப கற்றுத்தருகிறோமோ அன்றுதான் இந்த பேதம் ஒழியும். மக்களின் மன ஓட்டத்தை படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    ReplyDelete
  32. மாலதி....
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. வே.நடனசபாபதி ...
    வரும் சந்ததிகளுக்கு நற்ப்பண்புகளை சொல்லிக்கொடுப்போம் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. [கடைசியில் தமிழ் சொன்னால்..]

    கவிதை அருமை ! சில இடங்களில் எழுத்துப்பிழைகளை கவனியுங்கள் ! 'கடைசியில் தமிழ் சொன்னாள்'....என்று இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும் ! ஒரு எழுத்தால், ஒரு வாக்கியமே மாறிவிடுகிறது ! நன்றி !

    ReplyDelete