Monday 30 September 2013

இருள் தின்றவன் !


கண்ணாமூச்சியாடும்
கண்களை விடுத்து
மெல்ல மெல்ல
மன இருளை இரட்டிப்பாக்க
மேகப்போர்வைக்குள்
ஒளிந்து கொண்டு...

மெல்லிதழாள்
சட்டென விழுங்க
முடியா அவனுக்கான
மௌனங்களை..

பத்திரப்படுத்துகிறாள்
பூனையொன்றாய்
பதுங்கிப் பதுங்கி
வருகிறான்.

அசைவில்லாமல்
அணுவளவும் மீதமின்றி
உண்டு முடித்திருப்பான்
என் மன இருளை.

53 comments:

  1. தலைப்புக்கு பொருத்தமான வரிகள்.. கலக்குங்க!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. நன்றிங்க.

      Delete
  2. கவிதையும் கவிதைக்கேற்ற படமும் அசத்தல்....

    வாழ்த்துகள்.

    படம் கிடைத்ததா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மெயில் கிடைக்கப்பெற்றேன். நன்றிங்க.

      Delete
  3. அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  5. அருமைத் தங்கை சசிகலா! அருமை தங்கள் படைப்பு!
    சும்மா “சாப்பாடு நல்லா இருந்துச்சு“ன்னு வாயால சொல்றத விட, வெக்கப்படாம “இன்னும் கொஞ்சம் பாகக்கா வறுவல் வைங்க“ன்னு கேட்டு வாங்கறதுதானே உண்மையான பாராட்டு? நான் உங்கள் வாலைப் படைப்புகளைத் தொடர்கிறேன் என் கவித்தங்கையே உன் பயணம் தொடரட்டும். பக்கததிலேயே முமு., வெண்ணிலா வேற இருக்காங்க... அப்புறமென்ன கலக்குங்க... அண்ணனின் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. எனக்கு உடன்பிறந்த தம்பி தான் இருக்காங்க . தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெருமையாக நினைத்த எனக்கு தாங்கள் உரிமையுடன் சகோதரியாக எனை ஏற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சிங்க அண்ணா. திருமணத்திற்கு முன்பு வரை தான் பெண்ணிற்கு பிறந்த ஊர் இப்போதோ சென்னை வாசம் அதனால் வெண்ணிலா அக்காவை அங்கு சென்றால் தான் பார்க்க முடிகிறது. அவர்களை விட்டு விலகி இருப்பதில் சற்று வலிக்கவே செய்கிறது.

      Delete
  6. எப்படியோ மன இருள் போனால் நல்லதுதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா அம்மா எப்படி இருக்காங்க ?

      Delete
  7. மன இருளை அகற்றும் வரிகள் அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  8. ''..கண்ணாமூச்சியாடும்

    கண்களை விடுத்து..''
    இனிய சொல்லாடல்.
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  9. யார் வேணும்னாலும் கதை கட்டுரைன்னு எழுதிறலாங்க.... ஆனா மனசை வருடும் இந்த மாதிரியான கவிதைகளை எழுதறதுங்கறது ஆண்டவன் கொடுத்த அருள்.... அது உங்கக்கிட்ட நிறையவே இருக்கு..... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப்போன்ற நட்புக்களின் வாழ்த்துக்களே எனை உற்சாகப்படுத்துகின்றன. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  10. பூனையெனப் பதுங்கி வந்து இருள் தின்பவனின் வருகைக்காகவே மன இருளை இரட்டிப்பாக்கும் யுக்தி ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் சசி.

    மெல்லிதழாள் - மெல்லிதழால்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி.. மெல்லிதழாள் என அவங்களை செல்லமாக அழைப்பதை அப்படி குறிப்பிட்டேன்.

      Delete
    2. விளக்கத்துக்கு நன்றி சசி.

      Delete
  11. நல்ல கவிதை.. தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  12. அருமை. மன இருள் அகலட்டும். பாராட்டுக்கள்.

    நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  13. வணக்கம்
    சகோதரி

    இருள் தின்றவன் என்ற கவித் தலைப்புக்கு கவிவரி வடித்த விதம் அருமை சகோதரி......மேலும் சிறப்பான படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  14. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. தலைப்பும் அது தந்த கவிதையும் மிகச் சிறப்பு! அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. கவிதை அருமை. மனஇருள் ஒழியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க

      Delete
  17. ம்... மன இருள் விலகிவிட்டார் வாழ்க்கை இனிமைதான்...

    ரசிக்கும்படியான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  18. மன இருள் நீக்கும் உங்கள் மயங்க வைக்கும் இனிய கவிதை..
    வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  19. அசைவில்லாமல்
    அணுவளவும் மீதமின்றி
    உண்டு முடித்திருப்பான்
    என் மன இருளை.//

    வார்த்தையின் இறுக்கம்
    கவிதைக்கு மெருகூட்டிப்போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  20. மௌனமாய் அடைகாக்கும் மன இருளை
    மீதமின்றி முவதுமாய் உண்டிடல் வேண்டும்...

    அழகிய கற்பனை. அற்புத வரிகள்!
    மிகமிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

      Delete
  21. நாளும் வளர்ச்சி கற்பனை முதிர்ச்சி கவிதையில் எழுச்சி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆசி ஐயா.

      Delete
  22. கவிதை விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது...இருந்தாலும் அருமையான கவிதை..

    ReplyDelete
    Replies
    1. இதில் என்னங்க இருக்கு வரிகள் மனதில் பதியுதா இல்லையா என்பதை சொல்வது தானே விமர்சனம்.
      நன்றிங்க.

      Delete
  23. அழகிய கற்பனை அருமையான கவிதை அற்புத வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  24. மிக அருமை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. கவிதை வரிகளில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. நல்லாருக்குங்க

    ReplyDelete