Tuesday, 17 September 2013

தாலாட்டு மாறிப் போனதே !


தேடியெடுத்து விதைக்கவில்லை
தினம் நீரும் ஊற்றவில்லை
தானே வளர்ந்த வேப்பமரம்.

தாராளமாய் நிழலும் தந்து
தன் மடியில் இருத்தி 
தாலாட்டும் பாடி...
உறங்க வைத்த மரம்...

வயிற்றுப்பூச்சிக்கும் மருந்தாகி
வாசலில் தோரணமுமாகி
வாரிசுகளுக்கு ஊஞ்சலுமாகி
அம்மை நாளில் படுக்கையுமாகி
காவலாய் நின்ற மரம்.

காத்து கருப்பை 
விரட்டிய மரம்..
பங்காளிச் சண்டையில்
இங்குமில்லாது..
அங்குமில்லாது..
பாதையில் நின்றதால்
வெட்டினாலும் சரிபாதி
காசாக்கினாலும் சரிபாதி
தீர்ப்பான மறுநாளில்
திசைக்கொரு கதவாய்
எதிரெதிர் வீட்டு வாசலில்...

33 comments:

 1. எதார்த்தமான கவிதை அக்கா...

  அழகாக உள்ளது...

  ReplyDelete
 2. நல்லதொரு கவிதை !

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வெரைட்டியா எழுதறீங்க. நல்லாயிருக்கு. கொஞ்சம் ரிதம் வர்ற மாதிரி எழுதுங்க. இன்னும் நல்ராயிருக்கும்.

  ReplyDelete
 4. வணக்கம்
  சகோதரி
  தாராளமாய் நிழலும் தந்து
  தன் மடியில் இருத்தி
  தாலாட்டும் பாடி...
  உறங்க வைத்த மரம்...

  இயற்கை அதாவது மரத்தைப்பற்றிய கவிதை அருமை கவிதையின் வரிகளும் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. வித்தியாசமான கரு ஒரு சிறுகதையே
  சொல்லிப் போகிறது.நாவல் போன்று கவிதைத் தலைப்பிற்கு
  திரைப்பட பாடல் வரிகளை வைத்து உள்ளீர்கள்.

  ReplyDelete
 6. பங்காளிச் சண்டையில் பங்குபோடப்பட்ட வேம்பு...செத்தும் கொடுத்த வள்ளல் அல்லவா... மனந்தொட்ட கவிதை சசி.

  ReplyDelete
 7. தங்கள் கவிதையும் கீத மஞ்சரி அவர்களின்
  அருமையான பின்னூட்டமும் மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அடப்பாவமே...பல பலன்களுக்கும் விட்டுவைக்காமல் கதவாகிப் போனதே...
  நல்ல கவிதை

  ReplyDelete
 9. திசைக்கொரு கதவாய் எதிரெதிர் வீட்டு வாசலின் நடுவில் தனித்து நிற்கின்ற மரம் கவி பாடியது போல் உள்ளது நல்லதொரு கவி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. தீர்ப்பான மறுநாளில்
  திசைக்கொரு கதவாய்
  எதிரெதிர் வீட்டு வாசலில்...//

  அருமையான முடிவு.... எங்க வீட்டுலயும் ஜன்னலெல்லாம் வேம்புலதான்... வீட்டு வாசல் மட்டும் தேக்கு.

  ReplyDelete
 11. //பங்காளிச் சண்டையில் இங்குமில்லாது.. அங்குமில்லாது..
  பாதையில் நின்றதால் வெட்டினாலும் சரிபாதி காசாக்கினாலும் சரிபாதி தீர்ப்பான மறுநாளில் திசைக்கொரு கதவாய் எதிரெதிர் வீட்டு வாசலில்...//

  அற்புதமான படைப்பு.

  யதார்த்தமான நிகழ்வுகளை ஒவ்வொரு வரியிலும் கவிதையில் கச்சிதமாகக் கொண்டு வந்துள்ளீர்கள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  நன்றி கெட்ட மனிதர்களால் வெட்டப்படும் மரங்கள். ;(

  ReplyDelete
 12. நல்ல கவிதை.
  மரம் கதவாகி பலகதைகளை சொல்கிறது.

  ReplyDelete
 13. இனிப்பான கவிதை எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தபோதும் கசப்பாக இருப்பதால் ஒதுக்கிவைத்து விடுகிறார்கள் இப்போது வெட்டிய பிறகும் வீட்டு நிலையாகவும் கதவாகவும் தன் மரணத்திற்கு பிறகும் இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. கவிதை , இன்றைய அவலம் ( இயற்கை அழிப்பது) படம் பிடித்து காட்டுகிறது..மரம் பல விஷயங்களை தெரிவிக்கிறது. பாராட்டுகள் சகோ..

  ReplyDelete
 15. மரங்களுக்கு இணையான சொர்கம் வேறில்லை..
  அதிலும் வேப்பமரம் அவ்வளவு இனிமை...

  அழகிய கவிதை வரிகள்

  ReplyDelete
 16. கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன்...
  தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்...
  என் வாழ்வே உன்னோடு...
  என் தோளில் கண் மூடு...
  சுகமாய் இரு...

  தாலாட்டு மாறிப் போனதே...
  என் கண்ணில் தூக்கம் போனதே...
  பெண் பூவே வந்தாடு...
  என் தோளில் கண் மூடு...
  என் சொந்தம் நீ...

  தாலாட்டு மாறிப் போனதே...
  என் கண்ணில் தூக்கம் போனதே...
  ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ...

  ReplyDelete
 17. ஒரு சிறுகதையை கவிதையில் வடித்துவிட்டீர்கள், சசி.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 18. சிறுகதை இங்கே சிறு கவிதை போல

  பாதையில் நின்றதால்
  வெட்டினாலும் சரிபாதி
  காசாக்கினாலும் சரிபாதி
  தீர்ப்பான மறுநாளில்
  திசைக்கொரு கதவாய்
  எதிரெதிர் வீட்டு வாசலில்.

  ரசித்தேன்

  ReplyDelete
 19. ஊரில் நடக்கும் நிதர்சனத்தை கவிதையாக கொடுத்திருகிங்க ,... சிறப்பு அக்கா

  ReplyDelete
 20. திசைக்கொரு கதவாய்
  எதிரெதிர் வீட்டு வாசலில்...
  தாலாட்டு மாறி காவலாய்
  நின்று மனம் தொட்டது..!

  ReplyDelete
 21. திசைக்கொரு கதவாய்
  எதிரெதிர் வீட்டு வாசலில்...
  தாலாட்டு மாறி காவலாய்
  நின்று மனம் தொட்டது..!

  ReplyDelete
 22. ஒவ்வொரு கதவின் பின்னால் எத்தனை உயிர்ப்பான கதை....

  ReplyDelete
 23. நன்று. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 24. வணக்கம்
  உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
  http://blogintamil.blogspot.com/2013/09/3.html?showComment=1379545194911#c5940160482125873396
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 25. யதார்த்தமான வரிகள் அருமை

  வாழ்த்துக்கள் சசிகலா

  ReplyDelete
 26. எத்தனை உண்மை! இயற்கை அன்னையின் படைப்பை எந்தவித சிந்தனையுமில்லாமல் எல்லாம் எனது எனது என்னும் அகங்காரம்கொண்டு துஸ்பிரயோகம் செய்கின்றனர் சிலர் என்பதை மிக அழகாகக் கவிதையாய் வடித்தீர்கள்!....

  உங்கள் மாறுபட்ட சிறந்த சிந்தனையை ரசிக்கிறேன்!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 27. மனித சண்டையில் மரங்களை அழிக்கிறோம்! சிறப்பான கவிதை! நன்றி!

  ReplyDelete
 28. சிறப்பான கவிதை...... பாராட்டுகள் சசிகலா....

  ReplyDelete
 29. வெட்டுப்படவென இருக்கிறவைகளில் மரங்களும் ஒன்றாக/ கதவு,நிலை,ஜன்னல் இன்னுமின்னுமான எத்தனையோவைகளாக உருகொள்கிற மரங்களின் ஆயுள் மனிதன் கையாலே நிர்ணயிக்கப்படுவது மிகவும் கொடுமையானதுதான்,வளரும் போது மனிதனை கேட்டு வளராத மரங்கள் வெட்டுப்படும்போது மனிதன் கையால்,,,,,,,யதார்த்தம் உறைக்கிறது.

  ReplyDelete