Sunday 25 August 2013

எம் பேர ஊருமெச்சும் !


உச்சிக்கிளையில் முருங்கக்கா
ஒடியாம பறியக்கா...
கருவாட கழுவிப்போட்டு-புளி
கரைச்சி வையேன்  கொழம்பக்கா.

எட்டு வீதி வாசமெட்டும்
எம் பேர ஊருமெச்சும்
மச்சானும் மல்லி தருவான்
மாமியா முகம் சுளிக்க..

சுண்ட வச்ச குழம்புவாசம்
நாளையும் நாக்கு கேக்கும்
அடுப்படியில் படி உருளும்
அடுத்த வீடும் வேடிக்க பார்க்கும்

அந்த கத இங்கெதுக்கு..
அம்மியில் அரைச்செடுத்த
மிளகாயுடன்..
ஆரோக்கியத்துக்கு பருப்பு சேர்த்து
கொதிக்க விட்ட சாம்பாரும்
கொதிக்கும் முன் இறக்கிய ரசமும்
தொட்டுக்க ஊறுகாயும்- கைய
தொட்டுத் தொடைக்க 
முந்தாணையும் போதும் மச்சான்..

40 comments:

  1. கொடுத்து வெச்ச மச்சான்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மச்சானும் மகிழ்வாங்க.

      Delete
  2. கவிதையே மணம் கமழ வைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வாசம் பிடித்தபடி வாங்க பதிவர் சந்திப்புக்கு.

      Delete
  3. ம்ம்ம் ... நல்ல சமையல் தான் அக்கா

    ReplyDelete
    Replies
    1. ஊர் நினைவு வந்து விட்டதா தம்பி.

      Delete
  4. நல்ல கிராமிய மணம் மற்றும் சமையல் மணம் வீசும்
    பாடல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

      Delete
  5. அருமை அருமை
    உங்க கவிதைகள் கொடுத்த ஊக்கத்திலதான்
    நானும் கிராம மணத்துடன் ஒன்னு எழுத
    முயன்றேன்.ஆனால் இதுபோல் அத்தனை
    இயல்பாக வரவில்லை
    குறிப்பாக இறுதி வரி
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா இது என்ன நீங்களும் உங்க பின்னூட்டமும் தரும் ஊக்கம் தான் எனை இயல்பாக எழுதவைக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா.

      Delete
  6. உங்க பேர கண்டிப்பா ஊரு மெச்சும்
    நா-விற்கு = சமையல் மணம்
    செவிக்கு = கிராமிய மணம்
    மனம் குளிர= மச்சான் மீதான காதல் மணம்
    அபாரம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனதிற்கு மகிழ்ச்சி தரும் தங்கள் பின்னூட்டமும் மிக்க நன்றிங்க.

      Delete
  7. நாக்கில் எச்சி ஊறுதே தாயே!

    ReplyDelete
    Replies
    1. இன்று வீட்டில் கருவாட்டுக்குழம்பா ?

      Delete
  8. Replies
    1. அப்படியா மகிழ்ச்சிங்க.

      Delete
  9. வலைப்பதிவருள் கவிதைக்கு சசிகலா என்றோர் இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். தென்றல் சசிகலாவும், திருவண்ணாமலை சசிகலாவும் ஒருவரேதானா ?

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலையில் ஒரு தோழி இருக்காங்க அவங்க பெயரும் சசிகலாங்க அவங்க கோலங்கள் வலை தொடங்கியிருக்காங்க.
      http://chitrakolangal.blogspot.in/2013/07/blog-post_19.html

      Delete
  10. உண்மையைச் சொல்லுங்க...அம்மியிலா அரைச்சீங்க..மிக்சியில் தானே.. சும்மா..

    கவிதை அழகு...

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொல்லட்டுமா வெளிய கொடுத்து மிஷினில் தானே இப்ப மிளகாய் பொடி அரைக்கிறோம்

      Delete
  11. எளிய இனிய வாழ்க்கை..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அது தானே மன சாந்தி தரும்.

      Delete
  12. வாசன எங்க ப்ளாக் வரைக்கும் தூக்குதுங்க....கம கம கம கம கம...!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அப்ப வாசம் தான் உங்களை இங்க அழைத்து வந்ததா ?

      Delete
  13. மச்சானுக்கு கம... கமன்னு அருமையான சாப்பாடு...
    அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. சாப்பாடு மட்டும் தான் அருமையா இருக்கா சகோ.

      Delete
  14. அம்மியில் அரைச்செடுத்த
    மிளகாயுடன்..
    ஆரோக்கியத்துக்கு பருப்பு சேர்த்து
    கொதிக்க விட்ட சாம்பாரும்//

    அம்மியில் அரைச்சு வைத்த சாம்பார் வாசனை கம கம என்று மணக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அரைச்சி வைச்சா நல்லா தான் இருக்கும்.. ஆனா அம்மிய காணவில்லையே .

      Delete
  15. மணம் கமழ சமைத்த பாடல் அருமை தோழி...

    ReplyDelete
  16. கவிதையும் சமையலும் வாசனை
    திக்கெங்கும் பரவி நிறைகிறது தோழி!

    மிக மிக அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. வரிகளில் கிராமிய (சமையல்)மணம் வீசுது

    ReplyDelete
  18. அடடா..
    அப்படியே கம்மாக்கரை பக்கம்
    தலைப்பாகை கட்டிக்கிட்டு
    நடந்துபோனது போல இருக்குது பா..
    கவிதை வரிகள் மிக மிக தித்திப்பாக..

    ReplyDelete
  19. கவிதை அருமை கிராமிய மணம்

    ReplyDelete