Thursday 22 August 2013

பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !


மகன் : எங்கம்மா போகிறோம் ?  அங்கே யார் இருக்காங்க ?  இது என்னம்மா காட்டுக்குள் போகிறோம் ?..

தாய் : ச்சூ.. பாட்டி வீட்டிற்கு போகிறோம். எத்தனை முறை சொல்வது. கிராமத்தில் தானே பாட்டி வீடு இருக்கு.. வழி இப்படித்தான் இருக்கும். இங்கு ரோட் எல்லாம் கிடையாதுப்பா.

மகன் : கிராமத்து ஜனங்களின் பேச்சு வழக்கு.. அவர்களின் அழுக்கான உடம்பு..  வியந்து பார்த்தபடி கையில் இருக்கும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

தாய் : பாட்டியிடம் சேட்டை செய்யாமல் இருக்கனும் சரியா ? இங்கு நவீன வசதிகள் இருக்காது.  ஆதலால் பாட்டியை அது வேண்டும் இது வேண்டும் என்று தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்று எவ்வளவு கூறியும். (சிறுவன் அதை கவனித்தாக தெரியவில்லை)
பேருந்திற்குள் நிகழும் சண்டை சச்சரவுகளை பார்த்தபடி இருக்கும் போது ஒருவர் பையில் வைத்திருந்த கோழி பறந்து அமர்ந்திருப்பவர்களை அலைக்கழித்தது.  சிறுவன் பயந்து என்னம்மா இதெல்லாம் என்று அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். இறங்கும் இடமும் வரவே அவன் இந்த இடத்தில் நான் இருக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தபடி இறங்குகிறான்.

செல்லமாக பின்பு கோபமாக பிறகு அடித்து உதைத்தும் பாட்டி வீட்டிற்கு வயல் வெளிகளை கடந்து நடக்க வைத்து அழைத்து செல்கிறாள்.

காட்சி _2

பாட்டியின் வீடு முகப்புத்தோற்றம்.  கூறை வீடு முன் புறம் மரத்தினால் செயப்பட்ட தடுப்புகள்.. அவைகளும் மழையிலும் வெய்யிலிலும் கரையான் அரித்து கிழிந்த ஆடையைப் போல் அவனுக்கு காட்சியளித்தது.  முகம் சுளித்த படி வீட்டின் உட்சுவரில் பார்வையை பதிக்கிறான். மண் சுவர் வெள்ளை பூசப்படாத சுவரில் மழை நீர் ஒழுகி ஊற்றிய சாயங்கள் .. ஆங்காங்கே சிறு சிறு பூச்சிகள் ஊர்வதையும் பார்க்கிறான்.  அவனுக்கு பூச்சிகள் என்றாலே பயம். குடிநீர் கழிப்பிடம் இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த இடத்தில் தாம் எப்படி இருக்கப்போகிறோம் என்று யோசித்தபடி திண்ணையில் அமர்கிறான்.

                            தாயும் - மகளும்

மகள் : அம்மா உன் பேரன் எதற்கெடுத்தாலும் அடம்பிடிப்பவன். எப்படித்தான் நீ சமாளிக்கப்போகிறாயோ ?  அவனுக்கென்று விளையாட சில பொருட்களையும் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான நொருக்கு தீனிகளையும் எடுத்து வந்திருக்கிறேன். அவனுக்கு கொடும்மா என்று பாட்டியிடம் கொடுக்கும் முன்பே சிறுவன் ஓடி வந்து அவற்றை வாங்கி தனி பையில் திணித்துக்கொள்கிறான். 

பாட்டிக்கோ பேச வராது.. சைகையில் தான் பார்த்துக்கொள்வதாக சிரித்தபடி மகளை வழியனுப்புகிறாள். மகள் சென்றதும் பேரனை அன்போடு வருடுகிறாள்.

பேரனோ விருட்டென தட்டி விட்டு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. என்னை ஏன் அம்மாவோட அனுப்பவில்லை. நீங்க சொல்லி இருந்தா அம்மா அழைச்சி போயிருப்பாங்க இல்ல... என்று சலிப்போடு எனக்கு வரத்தெரியும் போ என்கிறான்.

பாட்டிக்கும் பேரனுக்குமிடையில் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நடக்கிறார்கள்.. பாட்டி சற்று தூரம் சென்று திரும்பி பார்த்ததும் வேறு பாதையில் செல்வதாக போக்கு காட்டி பின்பு பாட்டியை தொடர்நது வீடு வந்து சேர்கிறான்.

பாட்டி சாப்பிட எதைக்கொடுத்தாலும் தூக்கி எறிந்து விட்டு.. நொருக்குத்தீனிகளை உண்கிறான். வீட்டில் இருந்த டிவிப்பெட்டியை சற்று நேரம் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுகிறான்.  அதுவும் இயங்காமல் போனதால் மறுபடி வீடியோ கேம்மை எடுத்து வைத்துக்கொண்டு அமர்கிறான்.  அவன் சேட்டைகளை பார்த்தபடி இருந்த பாட்டி மெல்ல எழுந்து மரத்தினால் செய்யப்பட்ட சட்டத்தில் இரு டின்களை மாட்டிக்கொண்டு தண்ணீர் எடுக்க செல்கிறாள். அப்போது எதிர்படும் அந்த ஊர் சிறுவன் ஒருவன் பாட்டியிடம் இவன் உங்க பேரனா ஊரில் இருந்து வந்திருக்கானா ? என்றதும் தலையசைத்து விட்டு பாட்டி செல்கிறாள்.

அந்த சிறுவன் இவன் வைத்திருக்கும் விளையாட்டு பொருட்களை ஆவலுடன் பார்த்துவிட்டு இது என்ன ? என்று தொட முயற்சிக்கிறான். அவன் உடன் வந்த குட்டி நாயும் அவனை முகர்ந்து பார்க்கிறது. பேரனுக்கு அது பிடிக்காது போகவே நாயை காலால் உதைத்து விட்டு விளையாட்டு சாமான்களையும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறான்.
                                                                                                            தொடரும்......

இது ஒரு புரியாத பாஷையில் படம் பார்த்தபின்பு எனக்கு புரிந்ததை எழுதினேன்.  அது என்ன படம் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க. 

27 comments:

  1. படைத்ததைப் பார்த்துக் கதையை எழுதினாலும் மனம் குழப்பமடையாமல் புரிந்து கொள்ள மிகவும் நேர்த்தியாகவும் உருக்கமாகவும் எழுதியுள்ளீர்கள்
    தோழி .அருமையான கதை .கிராமத்து வாழ்க்கை முறைகளை அறியாத பல பேரக் குழந்தைகளின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும் இக்
    கதை மேலும் சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி. தொடர்கிறேன்.

      Delete
  2. இயற்கை சார்ந்த கிராமமாக இருப்பதால் கதை அருமையாக இருக்கிறது கிராமத்து வாசம் இனிய சுவாசம் தொடரட்டும் கதை ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தொடர்கிறேன்.

      Delete
  3. Replies
    1. பேரனின் சேட்டைகள் இன்னமும் இருக்கே..

      Delete
  4. க்தையின் துவ்க்கமே வெகு அருமையாக உள்ளது.

    பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கோ.

    பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் ! தலைப்பு மிக அழகு.

    படத்தேர்வும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  5. வணக்கம் மேடம் தலைப்பும் அருமை கதையும் அருமை கருத்தும் அருமை காட்சியும் அருமை ஆனால் அந்த பாட்டி ஏன் பேசாமல் சைகை காட்டுகிறது அதுதான் புரியவில்லை மற்றபடி சிறப்புதான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாட்டிக்கு பேச வராது என்றேனே புரியவில்லையா ? தெளிவாக சொல்ல வேண்டுமோ ? ஊமை என்று அப்படி சொல்ல எனக்கு வருத்தமாக இருந்தது அதனால் அப்படி சொல்ல வில்லை.

      Delete
  6. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  7. The Way Home என்பது படத்தின் பேர்.
    கொரியன் சினிமா.
    என் மகள் வீட்டில் இந்த படம் பார்த்தேன்.
    மிக நன்றாக இருக்கும்
    தொடருங்கள்.
    தொடருகிறேன்.
    பாசத்தை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை அல்லாவா!
    நீங்கள் சொல்லும் விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் பாசத்தை புரிந்து கொள்ள மொழி ஏன் ?
      மிக்க நன்றி தோழி.

      Delete
  8. நல்ல துவக்கம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வேர்களை மறந்து விட்டோம்;வேதனைதான்!

    ReplyDelete
  10. கிராமத்து காட்சிகளை கவிதைகளாகத் த்ந்த உங்களுக்கு கட்டுரையின் நடையிலும் அழகாக வருகின்றது. தொடருவோம்1

    ReplyDelete
  11. கிராமத்து நிகழ்வுகள் ..... தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. தலைமுறை இடைவெளி, கிராம நகர வேறுபாடு.. அடுத்து என்னாச்சு?

    ReplyDelete
  13. ஆரம்பமே அருமையாக இருக்கின்றது. மிக அழகாக வர்ணனைகளுடன்... அசத்தல். தொடருங்கள் தோழி!

    ReplyDelete
  14. பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !

    பசுமையாய் மனதில் தழைக்கும் தலைப்பு ..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு.. தொடருங்கள்...

    ReplyDelete
  16. ரஷியப் படமோ! நன்றாக இருக்கிறது.

    ஓ... கொரியன் படமா? நன்றி கோமதி அரசு மேடம்...

    ReplyDelete