Friday 23 August 2013

பசுமையை (பாசத்தை)தேடும் வேர்கள் !-3


பாட்டி காய் கனிகள் போன்றவற்றை சந்தையில் சென்று விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தாங்க. இப்ப பேரனும் வந்து விடவே அவன் தேவைகள் தான் அதிகமாச்சே ..
முடிந்த மட்டுமாவது பேரனை சந்தோஷப்படுத்த நினைத்த பாட்டி சந்தைக்கு செல்லும் போது பேரனையும் அழைத்து சென்று அங்கு அவனுக்கு தேவையானதை வாங்கித்தர முடிவு செய்து அவனையும் அழைத்து செல்கிறாள்..

அந்த கிராமத்தில் சந்தை கூடும் இடத்திற்கு செல்வதென்றால் ஊருக்குள் நாளொன்றுக்கு ஒரு முறையோ இரு முறையோ வந்து போகும் பேருந்தின் உதவியத்தான் நாட வேண்டியிருக்கும் . அந்த  பேருந்தின் வருகைக்கு காத்திருக்கும் நேரத்தை கணக்கிட முடியாது அப்படி பேரன் காத்திருக்கும் போது அவன் அடைந்த கோபத்திற்கு அளவு இல்லாமல் போனது.

சந்தைக்கு சென்று அவன் பாட்டியை தனியே விட்டு விட்டு அங்கும் இங்குமாக வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுகிறான்.  பாட்டி தான் கொண்டு வந்த பொருட்களை விற்று காசு சேகரித்து பேரனை தேடி அழைத்து நவீன உணவுகள் வாங்கி கொடுத்து அவன் சாப்பிடும் அழகை ரசிக்கிறாள்.  இறுதியில் உணவிற்கான காசு கொடுக்கவும் பாட்டிக்கு பணத்தின் மதிப்போ அல்லது கணக்கோ தெரியமல் இருப்பதை காண்கிறான். கடை ஊழியரே சரியான சில்லரையை பாட்டியிடம் தந்து அனுப்புகிறார்.

பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு பேருந்தாக ஏறி தன் இருப்பிடம் செல்லுமா என்று கேட்டு பாட்டி கடைசியாக ஒரு பேருந்தில் பேரனை அமர வைக்கிறாள். அங்கும் தனி இடமாக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொள்கிறான் .

அப்பேருந்தில் ஒரு குழந்தை சாக்லேட் சாப்பிடுவதை பார்த்து அது வேண்டுமென அடம்பிடிக்கிறான். பாட்டியும் கீழே இறங்கும் போது அந்த குழந்தை தூக்கி எறிந்தசாக்லேட் காகிதத்தை எடுத்து சென்று அந்த இனிப்பை வாங்கி வந்து பேரனுக்கு கீழிருந்த படியே தருகிறாள். மீதமான தன் உடமைகளை பேரனிடம் ஜன்னல் வழியாக தருகிறாள் தன்னால் சுமந்து கொண்டு ஏற முடியாததால் . பேரனோ அதை வாங்க மறுக்கிறான். உடனே பேருந்தும் புறப்பட்டு விடுகிறது. பேரன் மட்டும் வீடு வந்து சேர்கிறான் . மாலை வரை பாட்டி வராமல் போகவே பேருந்து நிறுத்தம் வந்து வந்து பார்த்து போகிறான். ஊருக்குள் வரும் கடைசி பேருந்தும் வந்து போகவே கவலையுடன் சாலையை பார்த்தபடி நிற்கிறான். தூரத்தில் பாட்டி நடந்து வருவது தெரியவே மகிழ்ச்சியடைகிறான்.

பாட்டி பேரனுக்கு வீடியோ கேம் பேட்டரியையும் தேடி வாங்கி வந்து தருகிறாள். அதை பார்க்கவும் மறுக்கிறான் பேரன். 

பேரனுக்கு தலையில் முடி அதிகம் இருப்பதை பார்த்து பாட்டியே அவனுக்கு முடி வெட்டி விடுகிறாள் கண்ணாடி பார்த்தபடி அமர்ந்திருந்த பேரன் அப்படியே தூங்கி விடுகிறான். பாட்டி முடி வெட்டி முடித்து பேரனை எழுப்ப மாடலாக வெட்டாததால் பாட்டியை கடிந்து கொண்டு தன் முகத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று கண்ணாடிக்கு முன்பு நின்று முகமுடி ஒத்திகையும் பார்ததபடி இருக்கிறான். பாட்டி அத்தனை குறும்பையும் ரசிக்கவே செய்கிறாள். 

அதோடு விடாமல் பேரன் தான் நகரத்தில் பெரிய பெரிய ஓட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் பற்றி பாட்டியிடம் சொல்லி அவ்வாறு சாப்பிட வேண்டுமெனவும் ஆசைப்படுவதாக சொல்லவே . பாட்டி புறப்பட்டு சென்று கோழி ஒன்றை வாங்கி வருகிறாள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் .  வீட்டில் பேரன் திண்ணையிலேயே தூங்கிப்போனதை பார்தது அவனுக்கு மழையில் குளிருமே என்று போர்வையை எடுத்து போர்த்திவிட்டு அவன் எழுந்திருக்கும் முன்பு இறைச்சியை செய்து முடித்து பேரனை எழுப்பி உண்ணச்சொல்கிறாள். 

மசாளாப்பொருட்கள் எதுவும் சேர்க்காத அந்த உணவை அவன் இது இல்ல நான் சொன்னது . பீட்சா.. பர்கர் இப்படி பாட்டிக்கு புரியாத விவரங்களை சொல்லி அழுதுபடி உணவினை தட்டி விட்டு படுத்துவிடுகிறான்.

பாட்டியும் அமைதியாக படுத்து உறங்கிவிடுகிறாள். பின்பு சத்தமில்லாமல் எழுந்து பாட்டிக்கு தெரியாமல் சாப்பிட்டு விட்டு பாட்டியை வந்து பார்க்கிறான் .  மழையில் நனைந்து வந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வந்து முனகிய படி படுத்துக்கிறாள்.  பாட்டிக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு தலையில் ஈர டவலை ஒத்தி எடுக்கிறான். பாட்டிக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்கிறான்.


பாட்டியை பாட்டியின் அன்பை புரிந்து கொள்கிறான். பாட்டி பேரனுக்கு தாய் மொழியை கற்றுக்கொடுக்கிறாள். இருவரும் அன்நோன்யமாகும் சமயத்தில் அம்மா வந்து பிள்ளையை அழைத்து போறாங்க. பேருந்து நிறுத்தத்தில் பேரன் பாட்டியிடம் தான் வைத்திருந்த தனது புகைப்படங்களை தந்துவிட்டு பஸ் ஏறுகிறான். பின்பு பாட்டியை விட்டு செல்ல முடியாமல் ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான். அம்மா திரும்பி வந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் அடுத்த விடுமுறையில் வந்து பாட்டியை பார்க்கலாம் என்று பல ஆறுதல் கூறிய பின்பே பிறிய மனமில்லாமல் பாட்டியும் பேரனும் பிரிகிறார்கள் . அவர்கள்  தவிப்பதை பார்க்க கண்கள் கலங்கி விடுகிறது. மறுபடி பாட்டி பேரனின் வரவை எதிர்பார்த்து வாழ் நாளை கடத்துகிறாள்..

இது வரை நான் பார்த்த கதை.. முற்றும்.

இந்த கதையில் வரும் பாட்டி பேசியிருந்தால் தன் மனநிலையை எப்படி சொல்வாங்க என்பதை என் கற்பனையில் எழுதியிருக்கேன் அதையும் படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க.

நீயுறங்க 
நினைவுறங்க
நெஞ்சமட்டும் உறங்கலையே
நேத்து வர சேத்து வச்ச
நேசம் மட்டும் குறையலையே.

நாடி தளர்நது போன பின்னும்
நரை முடி கண்ட பின்னும்
ஆசைகுந்தான் திரையுமில்ல
வச்ச பாசத்தில் தான் வேசமில்ல...

பாச வலை இழுக்குதய்யா
பாவி மனம் தவிக்குதய்யா...

மண் சாலையுண்டு
சோலையுண்டு...நீயுறங்க
என் தோளுமுண்டு
இமை மூடா சாபமுண்டு
இறுதி வரை தனிமை துணையுமுண்டு...

பேரான்டி...
நீயருகே தானிருந்தா
ஓடிப்போகும் தனிமையுந்தான்.

சிந்தைக்கும் சிறகுமுளைக்க
சில்வண்டும் பறந்து வர
சிட்டாக நீயும் வந்து
சிரிச்ச முகம் காட்டிப்புட்டா
சிரிக்கி மவ என் உசிரும்
ஜென்ம மெடுத்த பயனடையும். !

15 comments:

  1. பொறுமையின் எல்லை அந்தப்பாட்டி.

    சிறுவனின் செயல்களை ஆரம்பத்திலிருந்து படிக்கப்படிக்க நமக்கே எரிச்சல் ஆகிறது.

    கடைசியில் அவனும் பாட்டியின் பாசத்தை உணர்வது புரிகிறது.

    மிகவும் நன்றாக அழகாக எழுதி முடித்துள்ளீர்கள்.

    பாட்டி பேசியிருந்தால் கவிதை அழகோ அழகு.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதுமையோடு சேர்ந்து அனுபவமும் அவர்களுக்கு அமைதியையும் அனுசரித்து போவதையும் தரும் போல...
      தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  2. பொறுமையாய் காத்திருந்தால் சூரியனும் நிலவாய் மாறும் பாட்டியின் பொறுமைக்கு பேரனின் பாசம் கதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி சூரியன் நிலவாய் மாறும் ?

      Delete
  3. பயங்கர செண்டிமெண்டோட இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்.

      Delete
  4. பாச வலை - சரியான வலைதான் ..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பாசம் வலைதான்.

      Delete
  5. அவர்கள் தவிப்பதை பார்க்க கண்கள் கலங்கி விடுகிறது. மறுபடி பாட்டி பேரனின் வரவை எதிர்பார்த்து வாழ் நாளை கடத்துகிறாள்..//

    உண்மை சசிகலா இந்த பாட்டிக்கும் கண்ணீர் வந்தது.

    பாச வலை இழுக்குதய்யா
    பாவி மனம் தவிக்குதய்யா.//

    பாசவலைக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது உண்மைதான்.

    சிந்தைக்கும் சிறகுமுளைக்க
    சில்வண்டும் பறந்து வர
    சிட்டாக நீயும் வந்து
    சிரிச்ச முகம் காட்டிப்புட்டா
    சிரிக்கி மவ என் உசிரும்
    ஜென்ம மெடுத்த பயனடையும். !//

    அருமையான மனதை தொட்ட வரிகள் சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இரண்டு மூன்று தடவை படம் பார்த்தேன் அப்பவும் இறுதியில் அழுகையே வருகிறது.

      எனது வரிகளை பாராட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

      Delete
  6. கோபப்படும் அதே மனதில்தான் அன்பும் பாசமும் வருகிறது சூரியன் வரும் அதே வானில்தான் நிலவும் வருகிறது மாலை வரும் வரை பொறுமையாக காந்திருந்தால் சூரியன் நிலவாக மாறிவிடும்

    ReplyDelete
  7. சிரிச்ச முகம் காட்டிப்புட்டா
    சிரிக்கி மவ என் உசிரும்//சந்தோசமாய் சேர்ந்திடும்தான்

    ReplyDelete
  8. azhakaana kathiyum-
    kavithaiyum...


    vaazhthukkal...

    ReplyDelete
  9. பாட்டியும் பேரனும் – நல்ல கதை. சிறுவயதில், நான் படித்த சோவியத் நாட்டு நாடோடிக் கதைகளின் படக் காட்சிகள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  10. படிக்கப் படிக்க பிடிக்கும் கதை....

    அருமை அக்கா...

    கவிதை கலக்கல்...

    ReplyDelete