Tuesday 9 April 2013

நிம்மதி !


கட்டிப்போட்ட எண்ணங்களை
களவாடிப் பறந்துபோன உந்தன்
காலடிச் சுவடி தேடி நானும்.

காத்திருந்த காலங்கள் தந்த
நினைவென்ற இனிமைகளும்
நிம்மதி பறித்த பிரிவுகளும்
நீ அறிவாயா? நான் அறியேன்.

நீண்ட பயணத்தில் தனியாக
எத்தனையுகங்கள் நானோட ?
மலர் நீ மலர்வாய்
நிஜமாய் நீ வரவேண்டாம்
நிழல் கவிதையாய் மலராயோ!

17 comments:

  1. அன்பதுவே அடிமைப்பட்டு
    ஆசையது நம் மேனிசுட்டு
    இன்பமெலாம் மிதிபட்டு
    ஈகையாய் இங்குதீமைகளோ
    உறவெல்லாம் மாயங்களோ!!

    ReplyDelete
  2. /// நிஜமாய் நீ வரவேண்டாம்
    நிழல் கவிதையாய் மலராயோ! ///

    அருமை...

    ReplyDelete
  3. நிஜமாய் நீ வரவேண்டாம்
    நிழல் கவிதையாய் மலராயோ!

    அழகிய கவிதை

    மலரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நிழலாய் அல்ல நிஜ கவிதையாகவே மலரட்டும்!

    ReplyDelete
  5. நல்ல கவிதை... தொடருங்கள்

    ReplyDelete
  6. உங்கள் எண்ணம் போல் மலரட்டும்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  7. நிஜமாய் நீ வரவேண்டாம் என்று நீங்கள் சொன்னாலும் அவன் ஒரு நாள் வந்தேதீருவான்

    ReplyDelete
  8. நிஜமாய் மலரும் கவிதை... அருமை. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  9. நிஜமாய் வந்தால் நிம்மதி போய்விடுமோ!
    நல்ல கவிதை

    ReplyDelete
  10. வார்த்தைகள் தங்கள் கவிதைகளில்
    சரளமாக பவனி வருவதும்
    தன் முழு அழகைக் காட்டிப் போவதும்
    அதிக மகிழ்வூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  11. வணக்கம்!

    கொஞ்சும் மழலையின் கோலங்கள் அத்தனையும்
    நெஞ்சுள் நிலைத்த நினைவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  12. வழி மறக்கவும் இல்லை, வலி மறக்கவும் இல்லை!

    சுவடறியாமல் உன் கவிதைக்குள் வந்துபோகும் மாயம் இன்னும் அறிந்திலையோ நீ?

    மனம் வசப்படுத்தும் வரிகளுக்குப் பாராட்டுகள் சசி.

    ReplyDelete