Wednesday 10 April 2013

சிந்தனைப் பூ !



நித்திரையில் எனையெழுப்பி
நித்தம் நித்தம் வார்த்தையாடி
கனவு மழையில் நனைய வைத்து...

சித்திரையில் பிறந்த எனை
சித்திரைப் பாவையாக்கி
சிந்தனைப்பூ பறித்தெடுத்து
சித்து வேலை காட்டுகிறாய்...

உன் நினைவலையில் மீனாய்
எனை வீழ்த்தி...பார்கடலதிலே
உறக்கத்தை கொள்ளையடித்தே...

பித்தெனவே அலையவிட்டு-உன்
மாயப்பிடியிலெனை உருகவிட்டாய்
சத்தான மெய்யுணவெனக்கு
உன்  நினைவென்றாகிப்போனதடி...

முத்துக் கொத்தாக மலர் பறித்து
கூந்தலில் நான் சூடிநின்றால்
கதிரொளிசாரமாய் நீ சிரித்து
புது சந்தத்தை உணர்த்துகிறாய்.

சகலத்தின் அறிமுகமும் என்னில்
நீயாகிப்போனதால்..நானிங்கே
ஏக்கத்தில் மாய்ந்தேனடி- எனைநீ
ஏந்திக்கொள் தமிழேயென்றுந்தன்
 மலர்க்கரத்தில் அதுபோதுமடி!

34 comments:

  1. அழகு கவி சிறப்பான தொகுப்பு

    சித்திரையில் பிறந்த என்னை

    நித்திரையில் எழுப்புகிறாய்

    என்னவொரு சித்திர வரிகள்

    அழகான எண்ணங்கள் இருந்தால்

    மட்டுமே இதுபோன்ற வர்ணனை

    தானாக அருவிபோல கொட்டும்...

    தனித்திறமை இயற்கையாய்

    குடிகொண்டது சசி தங்களிடம்

    யாருக்கும் எளிதில் வாய்க்காது

    அதற்காக என்னுடைய வாழ்த்துக்கள்...

    தென்றல் காற்று பூந்தோட்டத்தின்

    வாசங்களை சுமந்து பரப்பட்டும்

    அனைத்து நட்புக்களின் நடுவே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. தமிழோடு உறவாடும்
    அழகோடும் கவிதந்து
    பழமோடு தேன்சுவையென
    படைத்திட்ட கவிஅருமை!

    வாழ்த்துக்கள் தோழி!...

    ReplyDelete
    Replies
    1. தமிழோடு அழகோடு தந்த வாழ்த்து நன்றி தோழி.

      Delete
  3. அழகான அருமையான வரிகள்...

    சிந்தனைப் பூ... சிறப்பான பூ... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அருமை சகோ தங்களின் சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் என் கவி தாகத்தை தீர்க்கும் வரிகளை எப்பொழுதும் கொண்டிருக்கிறது உங்களின் தளம்.எனவே கவிதைகளின் வரிகளில் என்னால் வேறுபாடு அறிய முடியவில்லை.தாகத்தை தீர்க்கும் நீரைப் போல...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரிகள் என்னில் மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன நன்றிங்க.

      Delete
  6. முத்திரைக் கவி !
    சித்திரக் கவி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  7. சிந்தனைப்பூக்களில் அழகான வாசம்மிக்க வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  8. சித்திரையில் பிறந்த எனை
    சித்திரைப் பாவையாக்கி//

    சித்திரை பாவை வந்து விட்டாள்.
    சிந்தனைபூ அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. சித்திரையில் பிறந்த என்னை
    நித்திரையில் எழுப்புகிறாய்//அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. ஏந்திக் கொண்டுவிட்டாள்
    இல்லையெனில் இத்தனை அருமையான
    கவி படைக்க சாத்தியமே இல்லை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ஐயா தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  11. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. சிந்தனைப் பூக்கள் அழகுற கவி படைத்தன.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  13. தமிழ் ப்பற்று மிக கவிதை நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. வழக்கம் போல் எழில்மிகு தமிழ் தென்றலிடம் மணந்து வாசம் வீசுகிறது. வரிக்கு வரி ரசித்தேன் இந்தக் கவிதையை! சூப்பர்ப்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. சிந்தனைப்பூச்சரத்தில் சிக்கிய வரிகளின் நேர்த்தி கண்டு வியப்பும் மலைப்பும். தொடரட்டும் தங்கள் இனிய கவிச்சரங்கள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. நல்ல கவிதை. வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete