Thursday 25 April 2013

மாறும் மனமே !


அண்ணாவியொன்று கண்ணாறக்கண்டு
கிள்ளைக்குப் பாலூட்ட!
ஆகாயம் தொட்டே வல்லூறு பறந்தே
பிள்ளைக்கு இரைதேட!
காவல் தோடுஒன்றுசுமந்தே நத்தையதுவும்
ஊர்கோலம் சென்றிருக்க!
மீன்நாடிக் கொக்கும் காலம்பொய்க்க
காற்றோடு காத்திருக்க!
பனியுதிர் கொண்டே இலையுதிர்கண்டு
மரங்கள் நாணிநிற்க!
மேலாடைதுறந்தே நீலவானில் நிலவது
பயணம் போக!
கோலமங்கை காலையெழுந்தே வண்ணக்
கோலம் போட்டுமகிழ்ந்திருக்க!
அவனியில் மானிடர் அவர் பசிப்போக்கிட
ஏர்தனைப் பூட்டிநிற்க!
கார்குழலேந்திய பயிர்கள் மணமீந்து
ஆராட்டித் தாலாட்ட!
மணியோசைஏந்திக் கறவை மாடுகள்
கன்றினைத் தேடியழ!
தூண்டில் மாட்டிய மீனின் கதியாய்
அவள் வம்பர் வாயில்விழ!
கரும்புத் தோட்டமும் கட்டுக் கதையும்
காலத்தைக் கொன்றுநிற்க!
மிருகமும்பறவையும் வாழ்க்கைப்பாடம்
படித்துக் கொடுக்கின்ற!
அவலநிலையில் மாமனிதர் கூட்டம்
ஆறறிவு சுமந்தே காண்!
மனமே மனமே மாறும் மனமே
மாறுவதென்னாளோ?
குணமே குணமே மாயக் குணமே
சீர்பெற மாட்டாயோ?

16 comments:

  1. நன்றாகச் சொன்னீர்கள்

    // குணமே குணமே மாயக் குணமே
    சீர்பெற மாட்டாயோ? //

    இறுதியில் வரிகள் அருமை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அண்ணாவியொன்று கண்ணாறக்கண்டு
    கிள்ளைக்குப் பாலூட்ட!

    அண்ணாவி என்றால் என்ன அர்த்தம்?

    ReplyDelete
  3. வெப்பச்சலனமும் கோடைக்காலமும்
    மழைத்துளிஈந்து மண்மடி காக்கையிலே!
    நடித்துதிரும் மனிதர் யாவரும் கருணைக்
    கொல்வோராய்-கண்ணீர் கொடுப்போராய்!
    வடித்தசிற்பி செதுக்கிய சிலையில் தவறுகள்
    காணவில்லை-படித்தும்,அறிந்தும்,கண்டும்,
    கேட்டும்-பதராய் உதவா மானுடங்கள்!!

    ReplyDelete
  4. மனிதனுடைய குணம் ஒரே நிலையானது அல்ல...

    அழகிய கவிதை...

    ReplyDelete
  5. இயற்கை நிகழ்வுகளின் தொகுப்பு நன்று! காலத்தோடு கருத்தும் மாறத்தான் செய்யும்!

    ReplyDelete
  6. குணம் காலத்தோடு சுயநலமாகிவிட்டது. மாறுவது ................

    ReplyDelete
  7. மாறும் மனம் நல்லவிதமாய் மாறவேண்டும்

    ReplyDelete
  8. மனிதனின் மனமும் குணமும் சீர்பெறவெண்டும்!

    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete

  9. வணக்கம்!

    அழகிய கற்பனையை அள்ளி அளித்தீா்!
    பழகும் தமிழில் மணிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. மனமே மனமே மாறும் மனமே
    மாறுவதென்னாளோ?

    மாறுமோ மனம் ...!

    ReplyDelete
  11. இனிய வணக்கம் தங்கை சசி...
    நலமா?
    நம் நாட்டுப்புறக் கலைகள் அண்ணாவி என்றால்
    நடுவிலிருந்து பாடுபவர் என்று பொருள் கூறுகிறது...
    அணில்கள் இரைதேட புறப்படும் முன்னர்
    தங்கள் கூட்டத்தினருக்கு முன்னர் சற்று நேரம் உரையாடுகின்றனவாம்...
    எப்படி இரை தேடுவது, சோதனை வந்தால் எப்படி சமாளிப்பது என்று..
    அதனாலேயே நம் மொழி அதற்கு அண்ணாவி என்று பெயரிட்டது...

    அழகு சொற்களால் சாந்த நடையில் புனையப்பட்ட
    அழகிய கவிதை...

    ReplyDelete