Wednesday 17 April 2013

வரம் ஒன்று கேட்கிறேன் !


என் விழித்திருக்கும்
நேரமெல்லாம் உன்
அருகில் இருக்கவே 
வரம் ஒன்று கேட்கிறேன்.

நீயோ வரம்,
சாபம்
இதில் எல்லாம் நம்பிக்கை
இல்லாதவன்...
என்ன சொல்லி புரியவைக்க..?

உனக்காக என்று 
தனியே ஒதுக்க எதுவும் இல்லை.
என்னில் எல்லாமே நீயாகிப்போனதால்.

உன் சோகத்திற்கு 
நான் அழுகிறேன்.
நீ சிரித்தால் 
நான் மகிழ்கிறேன்.
என் சிந்தையில்
நீ சிரிக்கிறாய்..
எழுதுகோல் நானாகிறேன்
எழுதவைப்பது நீ தானே.
-- 

15 comments:

  1. வாவ்... சசி அக்கா செம!!!!!சூப்பர் கவிதை!!!!

    ReplyDelete
  2. என் சிந்தையில்
    நீ சிரிக்கிறாய்..
    எழுதுகோல் நானாகிறேன்
    எழுதவைப்பது நீ தானே.//
    சிந்தை முழுவதும் நிறைந்து இருக்கும் போது வேறு எப்படி!
    கவிதை அருமை.

    ReplyDelete
  3. உனக்காக என்று

    தனியே ஒதுக்க எதுவும் இல்லை.

    என்னில் எல்லாமே நீயாகிப்போனதால்..

    இந்த வரிகள் மிகப்பிடித்தது

    ReplyDelete
  4. எழுதுகோலும் பேசுகிறது...

    சிறந்த சிற்பியின் கைஉளிபோல
    உங்கள் சிந்தனையின் எழில் எழுத்துவடிவம்...

    அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  5. மிகச் சிறந்த கவிதை .வாழ்த்துக்கள்

    ReplyDelete

  6. என் சிந்தையில் நீ சிரிக்கிறாய், நீ சிரித்தால் நான் மகிழ்கிறேன். அதுவே வேண்டும் வரம்தானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வரம் கேட்கும் தென்றல் ..!

    ReplyDelete

  8. துண்டுக் கவிதை என்றாலும் சிந்தனையை தூண்டும் கவிதை!

    ReplyDelete
  9. ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  10. உருகி விட்டேன் படித்து!

    ReplyDelete
  11. நீ ஆட்டிவைக்கிறாய், நான் ஆடுகிறேன் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள் கவிதையில். பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  12. ரசித்தேன்

    ReplyDelete
  13. சிறந்த கவிதை...
    ரசித்தேன்.

    ReplyDelete
  14. சூப்பர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete