Tuesday 16 April 2013

எண்ணச்சிறகுகள் !

எண்ணச்சிறகுகள் 
எல்லாயில்லா தொலைவில்
எம்பிப் பிடிக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

எதேச்சையான செயல்களிலும்
யதார்த்தம் மீறிய வேகம்
நினைவுகளுக்குள் முட்டிமோதி
நீந்த முடியாது மூழ்கியபடி...

முன்னெப்போதுமில்லாமல்
முன்வரிசையில் வந்து நிற்கும்
முற்றதை வெறித்த பார்வையும்
முகம் பார்க்க மறுக்கும் தனிமையும்.

சொல்லத்தான் வார்த்தையில்ல
சொல்லி அழுதாலும் தீரவில்ல

மல்லிப் பூ பறிக்கையில
மல்லுக்கு வந்து நின்னான்

தண்ணிக்கு நான் போகையில
தாமரப் பூ கொண்டு தந்தான்

கோலமிடும் வேளையில
கொக்கரக்கோ என்று சொன்னான்.

விடிகின்ற பொழுதினிலே
விடுகதையா வந்து போனான்

15 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எண்ணச்சிறகுகளின் வேகத்திற்கு இணையில்லை! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  3. சொல்லத்தான் வார்த்தையில்ல
    சொல்லி அழுதாலும் தீரவில்ல
    விடுகதையா வந்து போன பகிர்வு அருமை..!

    ReplyDelete
  4. எண்ணச் சிறகுகளின் படபடப்பு இதயத்தின் படபடப்பைக் காட்டுகிறதே.... இரு வேறு கவிநடையில் ஈர்க்கின்ற கவிதை! ஏங்கித் தவிக்கும் உள்ளத்தை எடுத்துக்காட்டும் வரிகள் அருமை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  5. சொல்லத்தான் வார்த்தையில்லை கவிதையை பாராட்ட

    ReplyDelete
  6. எண்ணச் சிறகுகள் நன்றாக பறந்து இருக்கிறது.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. விடிகின்ற பொழுதினிலே
    விடுகதையா வந்து போனான்// நல்ல இருக்கு

    ReplyDelete
  8. விடிகின்ற பொழுதினிலே
    விடுகதையா

    எண்ணச் சிறகுகள் ரசிக்க வைத்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வண்ணமயமான எண்ணச் சிறகுகளை ரசித்தேன். அருமை.
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. விடிகின்ற பொழுதினிலே விடுகதையா வந்து போனவன் பற்றிய அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete

  11. வணக்கம்!

    கோலமிடும் வேளையிலே கொக்கரக்கோ என்றவரி
    சாலமிடும் இன்பம் சமைத்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete