Friday 12 April 2013

வென்றவர் நட்பு மறப்பதில்லை !



ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

22 comments:

  1. அருமையா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  2. எல்லா வரிகளும் அழகாக சிந்திக்க வைப்பதாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...

    பூனையும் கிளியும்கூட ஒன்றாக வாழும்போது
    ஏன் எமக்குள் பிரிவினை???

    அழகிய கவிதை. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  4. அழகான கருத்து... ஆனால் உரைநடை பாணியில் எழுதப்பட்டதாக உணர்ந்தேன்... நன்றி மேடம்...

    ReplyDelete
  5. கணக்கு டீச்சரோ?

    ReplyDelete
  6. //இரண்டு ஒன்றானாலது மணம்.
    இரண்டது நாலானால் குடும்பம்.
    நாலது எட்டானால் சமூகம்.
    எட்டது விரிந்து பரந்தால் நாடு//
    அருமை ரசித்தேன்..

    ReplyDelete
  7. ஒற்றுமையின் வலிமையை உணர்த்திய வரிகள் அத்தனையும் வலிமை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  8. அருமையான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அருமை.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. அருமைஅருமைஅருமை

    ReplyDelete
  11. கூடி எவரும் தோற்றதில்லை
    இதை மறந்தவர் வென்றதில்லை
    வென்றவர் நட்பு மறப்பதில்லை.//

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூடி வாழ்ந்தவர்கள் பெற்றது அதிகம்.
    ஒற்றுமை ஒன்றே பலமாம்!
    மூதாட்டி சொன்ன சொல் பொய் ஆகுமா!
    சசிகலா உங்களுக்கு இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    ReplyDelete
  13. //கூடி எவரும் தோற்றதில்லை
    இதை மறந்தவர் வென்றதில்லை// - ஆம்! நன்று!

    ReplyDelete
  14. கூடி எவரும் தோற்றதில்லை
    இதை மறந்தவர் வென்றதில்லை
    வென்றவர் நட்பு மறப்பதில்லை

    அருமை ..!!

    ReplyDelete
  15. சரியா சொல்லிடீங்க நாம் எப்படி இருக்கனும் அருமை

    ReplyDelete
  16. தன்னம்பிக்கை தரும் வரிகள்

    அருமை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. கூடி எவரும் தோற்றதில்லை! உண்மையான வரிகள்! சிறப்பான படைப்பு! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. தனித்தனியாயோடி வெலல்
    கூடாது இவ்வுலகில்..
    நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

    கூடி எவரும் தோற்றதில்லை....
    அருமையான வரிகள்.
    இனிய விஜய வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete


  19. கூடி எவரும் தோற்றதில்லை
    இதை மறந்தவர் வென்றதில்லை
    வென்றவர் நட்பு மறப்பதில்லை.

    உண்மையை உணர்த்தும் வரிகள்!

    ReplyDelete
  20. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  21. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete