Wednesday 10 April 2013

காட்சிகள் யாவும் புதுக்கவிதையாய் !


வாடாதே மலரேயென்று
வண்டது வாடி நிற்க.

தேடாதே உறவையென்று
தேனிதழ் உதிர்ந்து விழ.

பார்க்காதே எனையென்று
பச்சைக்கிளி பறந்தோட.

ஏய்க்காதே என்றுரைத்தே
பூனையதை விரட்ட.

நிற்காதே என்றுகாற்றும்
தன்வழி ஓடிமறைய.

சாட்சிகூற மனமின்றி
கதிரது தலைகுனிய.

இருவிழிப் பார்வையிலே
இதயமிரண்டு சறுக்கிவிழ.

சலசலவென்றோடி நீரும்
கலகலவென சிரிக்க.

கண்ணீர் துளிபோலே மழை
நிலம்வீழ்ந்து அதுமரிக்க.

கண்ணாம்பூச்சி ஆட்டமாய்
காலமது கரைந்தோட.

கற்பனையது குதிரைஏறி
கனவுடன் கலந்துவிட.

கோலமாவை எறும்புதன்
உணவென சுமந்துசெல்ல.

கண்ணின் காட்சிகளில்
எல்லாமே புதுக்கதையாய்.

வந்தது போனது வருவது
அதுவும் போகும்.

இருப்பதில் அன்பொன்றே
மீதியாய்ப் பூவுலகில்
அதையும் மறந்துவிட்டால்
அனாதையே நீயும்-நானும்!!

26 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. சொல்லியவிதம் அருமை...
    அன்பை மறந்துவிட்டால்
    இருவருமே அனாதை ...
    வேண்டாமே இந்த வார்த்தை
    ஒன்றாக இருந்து மகிழ்வோடு
    இருந்தால் இருவருக்குமே
    சந்தோசமும் உற்சாகமும்.
    என்றுமே நிலைத்திருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. கவிதைகளில் சொல்லிப்போன எல்லாம்
    என்னுள் காட்சியாய் விரிந்து மகிழ்வித்தது
    கவிதையின் வெற்றியே அதுதானே
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  4. // இருப்பதில் அன்பொன்றே
    மீதியாய்ப் பூவுலகில்
    அதையும் மறந்துவிட்டால்
    அனாதையே நீயும்-நானும்!//- அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete


  5. கண்ணீர் துளிபோலே மழை
    நிலம்வீழ்ந்து அதுமரிக்க

    நமது நாட்டின் இன்றைய பருவ நிலை! இதுதானே! அழகிய எடுத்துக் காட்டு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete

  6. இருப்பதில் அன்பொன்றே
    மீதியாய்ப் பூவுலகில்

    அன்பே அகிலத்தின் ஊற்று ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. வந்தது போனது வருவது
    அதுவும் போகும்.....

    இதுவும் கடந்து போகும்...:)

    நல்ல கற்பனை. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. அன்பில்லா உலகம் அழிந்துவிடும் உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. அன்பொன்றே இவ்வுலகை காத்துக் கொண்டுள்ளது உண்மை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. இருப்பதில் அன்பொன்றே
    மீதியாய்ப் பூவுலகில்//
    அன்பே தெய்வம்!
    அன்பே அனைத்தும்.
    அன்பு கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. வேண்டாம் மறக்க வேண்டாம் அன்பை மறந்துவிட்டு என்ன செய்வது அருமையான கவிதை

    ReplyDelete
  12. \\இருப்பதில் அன்பொன்றே
    மீதியாய்ப் பூவுலகில்
    அதையும் மறந்துவிட்டால்
    அனாதையே நீயும்-நானும்!!\\

    மிகவும் ஆத்மார்த்தமான வரிகள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  13. கண்ணில் காண்பதெல்லாம் கவிதை.....

    அருமை தென்றல்.

    ReplyDelete
  14. கற்பனையது குதிரைஏறி கனவுடன் கலந்து கவிதையாகப் பறக்கிறது. மெருகேறிய வரிகள்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete