Sunday 28 April 2013

ஜன்னலுக்கு வெளியே !


மலர் கொடியொன்று அசைந்து வந்து

பட்டு ரோசா முகம் கொண்டு
துளிர் பூங்கரம் கொண்டு
துணிவுடனே கன்னம் வருடி
எச்சிலால் முகம் தீண்டி
எண்ணங்களை கவர்ந்து நிற்க..
நடையழகு நாட்டியமே
கண்ணசைவில் ஒரு காவியமே
சொல்லொன்றை உதிர்த்திடவோ
பிறந்திடுமே எண்ணிலா அதிசயங்கள்...
அவன் சிரிப்பை ரசித்திடவே
ஆயுள் முழுதும் கரைந்திடுமே
அவன் அழகை அள்ளிபருகிடவே
கண்ணிரண்டும் போதாதே...
அந்தோ என் செய்வேன்
அவன் அசைவுகளை
பதிவு செய்ய என்னில்
உடற் கருவி ஏதுமில்லையே.
கனவிலவன் நிஜமாய்
நினைவிலவன் கனவாய்
நிஜமது பொய்யோ?
கனவதுதான் நிஜமோ?

29 comments:

  1. //அந்தோ என் செய்வேன்
    அவன் அசைவுகளை
    பதிவு செய்ய என்னில்
    உடற் கருவி ஏதுமில்லையே.//
    அதுதான் மனசுல பதிவு செஞ்சு அழகான கவிதை ஆக்கிட்டீங்களே! அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க மனதில் பதிவு செய்துவிட்டேன். நன்றிங்க.

      Delete
  2. அழகுக் கவிதை தங்கை சசி...

    அழகு தமிழ் ஓவியம்
    அழகுநடை பயில்கிறது....
    மனக்கருவியால் புனைந்திட்ட
    அழகுக் கவியிருக்க
    உடற்கருவி தேவையோ இங்கு...
    கனவெனினும் நனவெனினும்
    மலர் சுமந்த கொடியது
    நினைவினில் தவழ்ந்திடுமே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரிகளை ரசிக்கவே தினம் ஒரு கவிதை பதிவிடலாம் அண்ணா. அழகான பின்னூட்டம்.

      Delete
  3. அவன் சிரிப்பை ரசித்திடவே
    ஆயுள் முழுதும் கரைந்திடுமே//
    உங்களுக்கும் நீண்ட ஆயுள் வேண்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. அந்தோ என் செய்வேன்
    அவன் அசைவுகளை
    பதிவு செய்ய என்னில்
    உடற் கருவி ஏதுமில்லையே.//

    மனதில் அழகாய் அவன் அசைவுகளை சிறைபடுத்தி கவிதை ஆக்கியவிதம் அருமை.
    மழலை செல்வம் தரும் இன்பம் கோடி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க மழலை செல்வங்கள் தரும் இன்பங்கள் கோடி தான். நன்றிங்க.

      Delete
  5. எண்ணங்களை கவர்ந்து நிற்க..

    கனவிலவன் நிஜமாய்
    நினைவிலவன் கனவாய்
    அழகுக் கவிதை..........!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. அழகான கவிதை தோழி!
    மழலையுடன் அனுபவிக்கும் அற்புதமான அந்த தாய்மை உணர்வை மிக அழகாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழி!...

    கொஞ்சும் மழலை குரல்மயக்க
    பிஞ்சு விரல்தடவும் பேருணர்வை
    கெஞ்சும் அழகில் பாடிசைத்த
    அஞ்சுகமேநின்கவி நிறைத்தென் நெஞ்சே...

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான தங்கள் வரிகள் மிக மிக ரசித்தேன் மிக்க நன்றி தோழி.

      Delete
  7. அழகு... அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. கனவைப் படம்பிடிக்கும் கருவியொன்று இருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும் என்ற ஏக்கமே உண்டாகிறது எனக்கும்! கவி அழகா? கவிபொழியும் கரு அழகா? கரு சுமக்கும் வரி அழகா? வியக்கிறேன் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டமே அழகுங்க. நன்றிங்க.

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. நடையழகு நாட்டியமே
    கண்ணசைவில் ஒரு காவியமே
    சொல்லொன்றை உதிர்த்திடவோ
    பிறந்திடுமே எண்ணிலா அதிசயங்கள்..

    உண்மை! குழந்தை காவியமே ! கவிதை எழில் ஓவியமே! நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் பின்னூட்டமும் மிகுந்த மகிழ்வளித்தது ஐயா.

      Delete
  12. ''..அவன் சிரிப்பை ரசித்திடவே
    ஆயுள் முழுதும் கரைந்திடுமே
    அவன் அழகை அள்ளிபருகிடவே
    கண்ணிரண்டும் போதாதே..''
    good This lines suitable for my grand son. congratz
    Vetha.Elangathilakam..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க குழந்தையின் படம் பார்த்திருக்கிறேன் அழகு...

      நன்றிங்க.

      Delete
  13. "நடையழகு நாட்டியமே
    கண்ணசைவில் ஒரு காவியமே..." அழகிய கவிதை.

    எனக்கும் அண்டையில் இருவீடுகளில் பெண்குழந்தைகள் அழகிய ஓவியங்கள் வந்து மகிழ்வூட்டும்.

    ReplyDelete
  14. அந்தோ என் செய்வேன்
    அவன் அசைவுகளை
    பதிவு செய்ய என்னில்
    உடற் கருவி ஏதுமில்லையே.
    கனவிலவன் நிஜமாய்
    நினைவிலவன் கனவாய்
    நிஜமது பொய்யோ?
    கனவதுதான் நிஜமோ?


    அழகிய கவிதை சசிகலா

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. வேலிக்கு வெளியில் பூத்திருக்கும் அழகான
    மலரை நினைக்க வைக்கிறது கவிதை.

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete

  16. வணக்கம்!

    சன்னல் கவிதை மலா்பின்னல் பேரழகாய்
    மின்னும் மனத்துள் மிளிர்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. குழந்தையின் அழகை உங்கள் நெஞ்சில் பதித்து, அதை கவிதையாக வடித்து எங்கள் நெஞ்சிலும் பதித்து விட்டீர்கள், சசி!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete