Saturday 9 March 2013

இருப்பது போதும் !



பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
சிறகொண்ணுத் தருவாயா?
உன்னபோல நானும்பறக்க
படிச்சித்தான் கொடுப்பாயா?

அணிலண்ணா அணிலண்ணா
உனக்கெதுக்கு இந்தஆசை
அற்பஆயுள் வாழ்வெனக்கு
அறிந்துத்தான் கேட்டாயா?

கழுகங்கே காத்திருக்கு
மரமேறமுடியலையே
கூட்டுக்குள்ள எத்தனை 
நாள் பட்டினியா இருப்பது
சிறகிருந்தா பறந்தோடி
கொய்யாப்பழம் தின்னலாம்!

ஆண்டவனே ஆண்டவனே
அண்ணாவுக்குத் தோகைகொடு
அதுபறந்துப் பொழைக்கட்டும்
பசியாற உண்ணக்கொடு!

கொடுத்தானே ஆண்டவனும்
வௌவாலா வேஷந்தான்
எடுத்தானே பார்வைமட்டும்
தலைகீழாய் தொங்கியதேயதுவும்
உருமாறிப்போனதுவே மனித
ஜாதியாய்ப் பாதியானதுவே!

11 comments:

  1. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் இப்படி தான் என்பதை சொல்லும் கவிதை நன்று

    ReplyDelete
  2. அளவிற்கு மீறினால் இப்படித் தான்...

    ReplyDelete
  3. பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
    சிறகொண்ணுத் தருவாயா?
    உன்னபோல நானும்பறக்க
    படிச்சித்தான் கொடுப்பாயா?//

    பட்டாம்பூச்சியை பார்க்கும் போதேல்லாம் சிறகடித்து பறக்க தோன்றும்.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. எப்பயெல்லாம் சிந்திக்கிறீர்கள்...!!

    நல்ல கருத்துக்கவிதை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான சிந்தனை!அசத்திட்டீங்க சசிகலா

    ReplyDelete
  6. இருப்பதே போதும்,, கவிதை அழகு..

    ReplyDelete
  7. எளிய நடை நல்ல கருத்து

    ReplyDelete
  8. நல்ல கவிதை. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான்!

    ReplyDelete
  9. அழகான பாடல் தங்கை சசி...

    ReplyDelete
  10. நல்ல கருத்துள்ள கவிதை குழந்தைகளுக்கும் ஏற்ற பாடல்

    ReplyDelete