Monday 4 March 2013

அனுபவப் பாடம் !



கடலோரம் கடலோரம்
காத்திருக்கேன் படகோரம்

அலையோடும் வேகமென்ன
அது உணர்த்தும் பாடமென்ன

நண்டோடி வளைதனைத் தேட
நாமோடி மனசாந்தி தேட

மணல் வீட்டின் அழகைப்பாரு
மலராய் சிரிக்கும் மனமே தேரு

வலை வீசி வாழ்வைத் தேடி
வாழ்விழந்தோர் விந்தை கோடி

நீர் குடித்த கடலம்மா
நீந்தப் பழகும் அலையம்மா

காற்றாடுது மனமம்மா- அதில்
கானலாய் எண்ணமம்மா

வார்தையெலாம் உதிருதம்மா அதுவே
மணல் விரிப்பாய் கிடக்குதம்மா

எழுதுகிறேன் கவிதையம்மா அதை
அலையழித்துச் சிரிக்குதம்மா

அனுபவங்கள் பாடமம்மா நாம்
காலத்தின் கைதியம்மா.

வருவார் போவார் வாழ்வம்மா
உணர்த்தும் பயணமே வழியம்மா

முள்ளும் மலரும் இருக்குமம்மா
முயற்சி மட்டுமே நமதம்மா.



39 comments:

  1. முள்ளும் மலரும் இருக்குமம்மா
    முயற்சி மட்டுமே நமதம்மா.

    தென்றலாய் வீசிய
    அனுபவப் பாடத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. வரிகள் தாலாட்டுவது போல் உள்ளது :)

    அருமை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. அலைகள் ஊடே
    மிதந்து வரும் மீன்கள் போல்
    காற்றின் ஊடே
    கசிந்து வரும் நறுமணம் போல்
    வானின் ஊடே
    உருண்டு செல்லும் மேகங்கள் போல்
    உங்கள் கவிதையின் ஊடே
    எங்கள் இதயங்களையும்
    இணைத்துவிட்டீர்களே !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டம் தனி அழகு நன்றி ஐயா.

      Delete
  4. வழக்கம் போல உங்கள் கவிதை மிக அருமை

    தொடர வாழ்த்துகள்..

    மலர் இருக்குமிடத்தில்தான் முள் இருக்குதம்மா
    அந்த முள்தான் மலருக்கு வேலியம்மா
    மலரை மென்மையாக கையாள்பவாரைமட்டும்
    அந்த முள் எந்த வித சேதத்தை ஏற்படுத்தாதும்மா

    ReplyDelete
    Replies
    1. அழகான விளக்கம் நன்றிங்க.

      Delete
  5. நல்ல folk மெட்டு கிடைத்தால் பாடலாம். எளிமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. இயற்கையோடு இணைந்த அனுபவ வரிகள்...

    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. // அனுபவங்கள் பாடமம்மா நாம்
    காலத்தின் கைதியம்மா.//

    உண்மை!

    காலத்தின் கைதிகள் நாமெல்லோருமே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. அருமை கவிதை!

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. பாடிப் பார்த்தேன்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. அழகான கவிதை .. அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. கடல் தந்த கவிதை. அருமை.

    சுனாமியால் செய்த பாவத்துக்கு அலைகள் மறுபடி மறுபடி மனிதன் காலில் வந்து மடிகின்றன!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டமே கவியானது அருமைங்க.

      Delete
  12. கடற்கரை காட்சி கவிதையாய் மலர்ந்தது அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. பாட்டாவே படிச்சிட்டேன்..அசத்தறிங்க போங்க!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. தென்றல் அறிமுகமும் தங்கள் ஆசியும் மிக்க மகிழ்வளித்ததுங்க.

      Delete
  15. விரல் நுனி மொழிந்த சொற்களெல்லாம்
    அமிர்தமாய் இருக்கிறது தங்கை சசி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் அண்ணா.

      Delete
  16. அனுபவங்கள் கற்றுத் தந்த பொன் மொழிகள் கவிதை வரிகளாக
    தென்றலோடு கலந்து வீசக் கண்டேன் .இன்புற்றேன் வாழ்த்துக்கள்
    தோழி மென் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  17. கடலோர தாலாட்டா கவிதையிலே சீராட்டா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  18. மணல் வீட்டின் அழகைப்பாரு
    மலராய் சிரிக்கும் மனமே தேரு//

    மணல் வீடு கட்டி மகிழும் குழந்தைகளாய் இருந்தால் எந்தகவலையும் இல்லை. மனதைசிரிக்கும் மலராய் வைத்துக் கொண்டால் நல்லது தான். மலர்விரிவது போல் மனம் விரிந்தால் மிக மிக நல்லது.
    கவிதை அருமை அப்பாதுரைசார், திண்டுக்கல் தனபாலன், ஆதிரா போல் நானும் ராகத்தோடு பாடிப் பார்த்தேன் மிக நன்றாக இருக்கிறது சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. பாடி மகிழ்ந்தமைக்கு நன்றி தோழி.

      Delete
  19. சுற்றுப்புரங்களும் நமக்கு பாடம் பாடம் கற்பிக்கிற அல்லது அதனிடமிருந்து கற்று க்கொள்லச்சொல்கிற ஒரு ஆசானாகிப்போகிறது.

    ReplyDelete
  20. எளிமை,இனிமை,புலமை!

    ReplyDelete