Monday 11 March 2013

உன்னுறவு இனியும் வேண்டாமெனக்கு!



இதயத்தை கிழித்தெறிந்து
இங்குமங்கும் அலைகின்றேன்
சிதறிக்கிடக்கும் உன் முகத்தை
கண்ணீரில் சிலையாய் வடிக்கின்றேன்.

வெட்டி ஒட்டி பூசினாலும்
அழுதழுது தேற்றினாலும்
ஒட்டாத உன் முகத்தை
என்னில் ஏந்தித் திரிகின்றேன்.

காண்பவர் நகைத்து நிற்க
காணாதவரும் பகைத்துப்  பேச
கொஞ்சியவனை கோபமுறச்செய்து
மிஞ்சியவரை மிரள வைத்து
ஏ... கோபமே
 நீ சிதறியதே போதும்
மீண்டும் என்னில் ...
சேர்ந்து என்னெண்ணமதை
கங்கையில் கரைத்துவிடாதே.
காயங்களின் சாபங்கள்போதும்
காயதுகனிந்து விதையது
மண்வீழ்ந்து தளிர்குமுன்
மண்ணாகிப்போவதோ நினைவு
கோபமே எனையாழும் சாபமே
போ போய்விடு உன்னுறவு
இனியும் வேண்டாமெனக்கு!

31 comments:

  1. கோபம் மனிதனின் உடல் நிலையை பாதிப்படையச் செய்யும் !

    நல்லதொரு மெசஜ்ஜூடன் கூடிய பதிவு - பாராட்டுகள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. கோபம் மேல் இத்தனை கோபமா? ஏங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அனுபவம் பேசுகிறது.

      Delete
  3. அதன் உறவு நிச்சயம் வேண்டாம்--தேவையற்ற கோபமாயின்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  4. அழகான வார்த்தைக் கோர்வைகளைக் கொண்ட கவிதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. ஏ... கோபமே
    நீ சிதறியதே போதும்
    மீண்டும் என்னில் ...//மிரட்டாதீங்க அன்பா சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. கோபத்தை மிரட்டித்தான் விரட்டனுங்க.

      Delete
  6. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.

    ReplyDelete
    Replies
    1. தகுந்த குறள் நன்றிங்க.

      Delete
    2. beautiful தனபாலன்! தெரியாத குறள்.

      Delete
  7. தென்றல் இங்கு புயலாகி போனது ஏன்?
    கோபத்தில் கூட அழகாக இருப்பது என்று சொல்வது போல கோபத்துடன் கூடிய இந்த கவிதை மிக நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இன்று கோபத்தின் மீது கோபம் என்ன செய்ய ?

      Delete
  8. கோபமே எனையாழும் சாபமே
    போ போய்விடு உன்னுறவு
    இனியும் வேண்டாமெனக்கு!

    கோபமே பாபம் ..!

    ReplyDelete
  9. கோபம் மனிதனின் பல வீழ்ச்சிகளுக்குக் காரணம்....

    அதை சொல்லும் உங்கள் கவிதை நன்று.

    ReplyDelete
  10. ஓ... கோபத்தின் உறவு வேண்டாமா.... ஓகே ஓகே..

    ReplyDelete
  11. கோபமே எனையாழும் சாபமே
    போ போய்விடு உன்னுறவு
    இனியும் வேண்டாமெனக்கு!//

    சினம் தவிர்த்தல் மிகநல்லது.
    உடல்நலம், மனநலம், உறவுகள் நலம் எல்லாம் இதனால் கெடும் அதனால் கோபத்தை போக சொன்ன கவிதை நன்று.

    ReplyDelete
  12. அருமையாக அழகு கவியியினால் உறவை வெறுத்த ஒரே நபர் நீங்கள்தான் தோழி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. தேவையில்லாத உறவு தான்...!
    தள்ளி விடு சசிகலா.

    ReplyDelete
  14. ''.,.கோபமே எனையாழும் சாபமே

    போ போய்விடு உன்னுறவு

    இனியும் வேண்டாமெனக்கு!...'''
    ஆம் வேண்டாம். தள்ள வேண்டியது தான்.
    பல நன்மை பயக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. வெட்டி ஒட்டி பூசினாலும்
    அழுதழுது தேற்றினாலும்
    ஒட்டாத உன் முகத்தை
    என்னில் ஏந்தித் திரிகின்றேன்.

    தவிர்க்க முடியாத வேதனை
    தானாகவே ஒட்டிக் கொள்ளும்
    இவ் வேளையில் அருமையாக
    சித்தரித்துள்ளீர்கள் தோழி
    காதல் தோல்வி தந்த வலியதனை !...
    வாழ்த்துக்கள் மேலும் இன்பக்
    கவிதைகள் இனிதே தொடரட்டும் .

    ReplyDelete
  16. கோபம் தொலையக் கோபம்.. சுவாரசியமான வட்டம்.

    ReplyDelete
  17. சுவாரசியமான வட்டம்... அதைத்தான் கவியாழி சொல்றாரோ?

    ReplyDelete

  18. வணக்கம்!

    புதியதோர் பார்வையில் போந்த கவிதை
    பதியும் மனத்துள் படா்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  19. ஆத்திரம்...
    அறிவை அறமிழக்கச் செய்துவிடும்....
    உண்மைதான் தங்கை...
    தேவையில்லை அந்த உறவு...

    ReplyDelete
  20. ஏ... கோபமே
    நீ சிதறியதே போதும்
    மீண்டும் என்னில் ...
    சேர்ந்து என்னெண்ணமதை
    கங்கையில் கரைத்துவிடாதே.

    நன்று! கோபம் சேர்ந்தாரைக் கொல்லி !ஐயமில்லை!

    ReplyDelete
  21. கோபம் நம் எதிரிதான்! அதை தவிர்ப்பது நலம்தான்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete