Monday 25 March 2013

நீயா? ... நானா ?


விண்னை முட்டிய சோகங்கள்
மண்ணில் வென்ற கனவுகள்
கண்ணில் வாழ்ந்த காட்சிகள்
நம்மில் வாழும் உறவுகள்.

வார்த்தையால் வந்த பேங்கள்
உயிரில் கலந்த உண்மைகள்
உதிரம் குடித்த பொய்கள்
நிரந்தரம் என தேடும் துணைகள்.

இடையில் மலர்ந்த வழித்துணைகள்
இன்பத்தால் விளைந்த லாபங்கள்
துன்பத்தால் கண்ட இழப்புகள்
அன்பால் வென்ற மனங்கள்.

அச்சத்தால் பறிபோன வெற்றிகள்...
சொல்லும் செயலும் நாமாயிருந்தால்
பொருளில் பொருளிருக்கும்.

வாழ்க்கை வழியில்
நீயா நானா கேள்வி எழுந்தால்
வாழ்வே பொய்யாகும்.

கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
கசப்பே எஞ்சி வாழும்.

18 comments:

  1. சிறந்த சிந்தனைக்கவிதை!

    //வாழ்க்கை வழியில்
    நீயா நானா கேள்வி எழுந்தால்
    வாழ்வே பொய்யாகும்.//

    அருமை. உணர்ந்தால் கிடைக்கும் அமைதி. வாழ்த்துக்கள்!

    வாழும் காலம் கொஞ்சமே
    வழக்குகள் ஏனோநெஞ்சமே
    ஊரும் உறவும் கொஞ்சுமே
    உணர்ந்தால் இல்லைப் பஞ்சமே...

    ReplyDelete
  2. போட்டியும் பொறாமையும் தான் வாழ்க்கையாகி விட்டது.
    ஆனால் அதுவும் வாழ்வை உணர்த்தும் அல்லது
    உயர்த்தும் வழி தான் சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ///கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
    கசப்பே எஞ்சி வாழும்.//

    உண்மை ......

    ReplyDelete
  4. கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
    கசப்பே எஞ்சி வாழும்.

    this is true

    ReplyDelete
  5. நியாயமான கேள்வி எழலாம்... புரிதலில் சிக்கல் இல்லாமல் இருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை...

    ReplyDelete
  6. நேர் மறை எண்ணம் இருந்தால் அனைத்துமே எளிதுதான் சகோ.. சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை.

    ReplyDelete
  7. //நீயா நானா கேள்வி எழுந்தால்
    வாழ்வே பொய்யாகும்.//

    நான் என்ற முனைப்பே (Ego) பலரது வாழ்வை சீரழிக்கும் என்பதை அருமையாய் சொல்ல்யிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்க்கை வழியில்
    நீயா நானா கேள்வி எழுந்தால்
    வாழ்வே பொய்யாகும்.

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை !
    கடைசி வரைக்கும் யார்க்கிட்டேயும் இந்த கேள்வியை
    நான் கேட்டதே இல்லப்பா .ஏன் தெரியுமா?.. அதுதான்
    எனக்கே தெரியுமே என்னட்டத்தான் ஒன்றுமே
    இல்லை என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) வாழ்த்துக்கள் தோழி
    ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு .

    ReplyDelete
  9. கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
    கசப்பே எஞ்சி வாழும்.

    ஆகவே இனிமையாக வாழ்வு அமைக்க முயற்சிப்போம் ..

    ReplyDelete
  10. கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
    கசப்பே எஞ்சி வாழும்.//

    கனவு உலகத்தில் வாழ முடியாது.

    ReplyDelete
  11. நீயா நானா - தொலைகாட்சியில் மட்டும்தான் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் நீயும் நானும் என்று இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்.

    //வார்த்தையால் வந்த பேங்கள்// பேதங்கள் என்று இருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  12. Dear sister last line remarkable

    ReplyDelete
  13. உண்மை தான் அன்பரே

    ReplyDelete
  14. சொல்லும் செயலும் நாமாயிருந்தால்
    பொருளில் பொருளிருக்கும்.//

    உண்மை சொல்லும் வரிகள் நல்ல கவிதை

    ReplyDelete
  15. நல்ல கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete