Saturday 16 March 2013

பீரிட்டு வரும் பிரியம் !



எந்த வித முன்னறிவிப்புமின்றி
அறிமுகங்களுக்கு விருந்தாகும்.

நாசி தொட்டு 
நாவையழைக்கும் மணம்.

இதழ் தொட்டணைத்து
இருதய கதகதப்பை
உணரும் தருணங்கள்.

மிக மிக அருகிலேயே
அடர்ந்த நிறத்தில் ...
ஆர்வமாய் எனை நோக்கி.

கைகள் பரஸ்பரம் உணர்ந்த பின்பும்
ஏனோ...நாவைத் தீண்டும் முன்பு
ஞாபகத்திற்கு வந்தே தொலைக்கிறது
மருத்துவ ஆலோசனை..
டீ...காபி கூடாது என்பது.

ப்ரியத்தின் அளவை மீறி
பீரிட்டு வழிகிறது
கோப்பை வழியாக
தேநீர்க் காதல்.

22 comments:

  1. தேநீர் சுவை அருமை - இனிமை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. // முன்னரிப்புமின்றி//- முன்னறிப்புமின்றி வரவேண்டுமா? அரிப்பு-அறிப்பு வேறுபடும்.

    ஆஹா.. காதலுக்கு வில்லனா இருக்காரே மருத்துவர்..! இருந்தாலும் நல்ல வில்லந்தான்.. !

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நல்ல வில்லன்.

      Delete
  3. டீயும் காபியும் நம்மை விட்டு பிரிக்க முடியாத பந்தம் ஆகிவிட்டது! அருமையான சுவை கவிதையில்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அதனால தான் பிரிக்கப்படும் போது வருத்தமா இருக்கு.

      Delete
  4. அட.... தேநீர் :)))

    இப்ப எனக்கு தேவை ஒரு கோப்பை தேநீர்! எடுத்துக் குடித்து விடுகிறேன்! :)

    ReplyDelete

  5. வணக்கம்!

    தேநீா்க் கவிதை தெளித்த மணம்பெற்றுப்
    பா..நீா் பெருகுதே பாய்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  6. அருமை தோழி... மிகவே ரசித்தேன். ருசித்தேன். வாழ்த்துக்கள்!

    பீறிட்டு வந்த உங்கள் பிரியம்
    கூறிட்டு வந்த கவிதை மிகவே
    ஊறிட்டு வந்த தமிழினிமைகண்டு
    சீறிட்டு வந்ததே சிரிப்பு....

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்ட கவிதை எனையும் சிரிக்க வைத்தது நன்றி தோழி.

      Delete
  7. ப்ரியத்தின் அளவை மீறி
    பீரிட்டு வழிகிறது
    கோப்பை வழியாக
    தேநீர்க் காதல்.//

    எதுவும் அளவோடு இருந்தால் நலமே!
    தேநீர்க் காதல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் சொன்னீங்க நன்றிங்க.

      Delete
  8. மருத்துவ ஆலோசனை எல்லாம் ஞாபகம் வரக்கூடாது...

    ஒரே 'மடக்' என்றும் கூடாது...

    ReplyDelete
    Replies
    1. இது தனி ஆலோசனை போல இருக்கே சகோ.

      Delete
  9. சசிகலா... உங்களுக்கு “சக்கரையா?“

    அதனால் தான் நீங்கள் எழுதும் கவிதை எல்லாம் இனிக்கிறதா...?
    இப்பொழுது புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஏன் இப்படியெல்லாம் அல்சர் மட்டும் தாங்க.

      Delete
  10. தங்கள் கவிதையைப் படித்ததும் எங்களுக்கும் அந்த
    ஆர்வம் வந்து விட்டது தோழி ! இனி பருகிய பின்னர்தான்
    அடுத்த கதையே :) வாழ்த்துக்கள் இன்பக் கவிதை இனிதே
    தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. பார்த்திங்களா ? சின்ன பசங்க மாதிரி ஒழுங்கேத்துறிங்களா ?

      Delete
  11. தேநீரின் சுவையினும் இனிய கவிச்சுவையில் அடிமையானோம். இதற்கு எந்த மருத்துவரும் தடை சொல்ல முடியாது.

    ReplyDelete