Wednesday 19 March 2014

வரமா ? சாபமா ?

 
பகல் இரவு வாடிக்கையாய்
பசிக்குணவு வேடிக்கையாய்.
ஓடும் ஓட்டம் தொடர்ந்திடுதே
ஓடமும் கரை தேடிடுதே.
உழைப்பே நாளும் நோக்கமாய்
உப்பு நீரே வயிற்றின் தேக்கமாய்.
கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.
கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.

உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.
மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?

45 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. கவிதை அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்! உண்மை ஊதியம் தந்திடுவீர்! அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. துயர் மிகுந்த வரிகள் !வாழ்த்துக்கள் என் தோழியே .உங்கள்
    வரவுக்காகவும் காத்திருக்கிறது ஒரு காதல் பாடல் என்
    வலையில் முடிந்தால் வாருங்கள் .
    த..ம 5

    ReplyDelete
    Replies
    1. சென்றேன் தோழி. அருமையான பகிர்வை கண்டேன்.

      Delete
  5. சிறப்பு!
    நீங்களும் அதிகம் எழுதுவதில்லையா?!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயா. வலைப்பக்கம் வருவதே இல்லை. தங்களின் நலன் அறிய ஆவல். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. ஐயா.

      Delete
  6. //எளியோர் செய்த பாவமா
    ஏழ்மை என்பது சாபமா //
    அருமை! தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  8. சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. // உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
    உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.// மிக அருமை. உண்மையான ஊதியம் கொடுத்தாலே பலரின் ஏழ்மை நீங்கும். நல்ல கவிதை, வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  10. எளியோர் செய்த பாவமா
    ஏழ்மை என்பது சாபமா ?

    இல்லை! இதுதான் விதியா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  11. ஏழ்மை சாபமில்லை,வரமும்தான்.ஆனால் ஏழ்மை அப்படியாக்கி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  12. உண்மைதான்.எவ்வளவோ அனாவசிய செலவுக ள் செய்யும் நாம் வரியவரிடத்து பேரம் பேசிக் கொண்டிருப்பது வேதனைதான்
    நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
    மனித நேயத்துடன் காத்திடுவீர்.

    வரமாய் மிளிரும் வரிகள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. இதுதான் நிதர்சனம். உழைப்புக்கேற்றவாறு கொடுக்கப்படாத கூலி மரணத்திற்குப் பின்னும் முறையிடுமாம். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.//

    அருமையான கவிதை உழைப்புக்கு ஏற்ற உணமையான ஊதியம் தரப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  17. உழைக்கும் மக்கள் படும்பாடு..... துயர்தீர்வதுஎப்போது ?

    அருமையான கவிதை.


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  18. பதிவை படிச்சிட்டு கருத்திட வரும் வழியெல்லாம் ஒரே நன்றி மழை மேடம், அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள் சகோ. என்று ஒழியுமோ இந்த சாபம்?....

    ReplyDelete
    Replies
    1. ஹஹ சரிங்க வருகைக்க நன்றி.

      Delete
  19. பேட்டா செருப்பில போட்டிருக்கும் 989ரூபாய் விலையில், ஒரு ரூபாய்கூடக் குறைக்க முடியாமல்-ஒருரூபாய் சிலலறையும் வாங்காமல்- கொடுத்துவிட்டு வரும் சிலர், வேகாத வெய்யிலில் மோர்விற்கும் கிழவியிடம் “ஒரு குவளை மூனுரூவாயா?” என்று பேரம் பேசுவார்களே பாரததிருக்கிறாயா சசி? வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா? எனும் பாரதிதாசன்தான் உன் புதுக்கவிதையாகி....அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா வயதானவர்களிடம் பேரம் பேசுவதை கண்டிருக்கிறேன். தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. அண்ணா.

      Delete
  20. சிறப்பான கவிதை.....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete