Monday, 24 March 2014

வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

வணக்கம் உறவுகளே அனைவரும் நலம் தானே ? தொலைதூர பயணித்தின் நடுவே கடிதப்போக்குவரத்தாக ஆகிவிட்டதா ? தென்றலின் வருகையும். என்ன செய்ய ? சரி விடுங்க. இனி அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது திடீரென அனைவரையும் இங்கழைத்து நலம் விசாரிக்கும் ஆவல் வந்தது. ஆனால் சும்மா யாரும் அழைச்சா வருவாங்களா ? ஆதலால் ஒரு தொடர்பதிவு. யாரும் திட்டாம... தேடிவந்து அடிக்காம சமத்தா எழுதுவிங்களாம் சரியா ? பொதுவா எல்லோரும் பிறந்த ஊர் பற்றி தான் பெருமையா பேசுவாங்க.. நாம் புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசுவோம் வாங்க...காடுகர தோப்பெங்கும் கானக்குயில் பாட்டுசத்தம்
கேட்டுதினம் மதிமயங்கி நடனமிடும் மயிலுநித்தம்
அரவமிடும் ஓட்டத்திலே சலசலக்கும் சருகுகளும்
ஆரவாரம் கேட்டுவரும் கலகலன்னு குருவிகளும்.


மா-பலா வாழையோடு மருகிநிக்கும் தேனினமும்
மாங்கனியில் உள்நுழைந்து மயங்குதங்கே வண்டினமும்
காலைநிறக் கதிரவனின் காட்சியங்கே ஓவியமே
மாலை வரக்காத்திருக்கும் அந்தியொரு காவியமே.
வண்டிமாடு சலங்கையொலி வழிவகுக்கும் பாதையுந்தான்
வாஞ்சையோடு உடனடந்து வயலுழவும் காளைமாடுந்தான்
நடவுப்பாட்டில் நாட்டு நடப்பு நாவசைய இசையுடனே
நாட்டாமையில் நீதி நேர்மை வாழ்ந்திடுதே பாங்குடனே.

அய்யனார் குளமழகு அரளிப்பூ சிரிப்பழகு
அடுக்கடுக்கா படியழகு அதனோரம் பனையழகு
ஊர்க்காக்கும் காளியம்மா உள்ளிருக்கும் காமாட்சி
உடனுறை நீராட்டில் அரசமரத்தான் அருளாட்சி.
கம்மாயில் நீரோடி கழனியெல்லாம் பாய்ந்தோடி
சும்மாயாரும் இல்லாம ஏர் பிடிக்கும் சனம்கோடி
புதனோடு சந்தையில புதிர் போடும் விந்தையில
புது மாடும் ஆடும் வாங்க புதையலாகும் மந்தையில
வான்தொடும் உசரத்தில் வளர்ந்து நிக்கும் தென்னை
வளமோடு நலம்சேர்க்கும் இளநிகிடக்கும் திண்ணை
பகுத்தறிவுப் பாதையில நடக்குமிங்கே சீர்த்திருத்தம்
பண்பாளர்கள் வாழ்ந்திருப்பர் எங்கள் வடசேரி வாழ்வில் நித்தம்.

இனி என்ன நான் அழைக்கும் அன்பு நெஞ்சங்கள்.

ரஞ்சனி நாராயணன்

கோமதி அரசு

தி.தமிழ் இளங்கோ

ஆதி வெங்கட்

ராஜி

குடந்தையூர் சரவணன்

என்ன ஆண் பதிவர்கள் பெயரும் இருக்கே என்று கேட்பது தெரிகிறது. ஏன் அவர்களும் முதன் முதலாக பெண் பார்க்கப் போன அனுபவத்தை எழுதலாமே. இவளின் அன்பு வேண்டுகோளை ஏற்று பதிவிடும் ஒவ்வொருவரும் குறைந்தது நால்வரை அழைக்க வேண்டும்.

34 comments:

 1. வந்தாலும் வந்தீர்கள்... களைகட்டப் போகும் தொடர்பதிவுடன்... பாராட்டுக்கள் சகோதரி...

  கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ. உற்சாகம் தரும் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ. அதோடு தகவலை பகிர்ந்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 2. வணக்கம் சசி.
  நலமாக இருக்கிறீர்களா?
  எங்கள் ஊர் திருக்கண்ணபுரம் பற்றி எழுதச் சொன்னால் எத்தனை பதிவு வேண்டுமானாலும் எழுதுவேன்.
  கூடிய விரைவில் எழுதுகிறேன்..
  வாய்ப்பிற்கு நன்றி சசி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா. தங்களுக்கு தகவல் அனுப்பியுடனே வந்தது குறித்து மகிழ்ச்சி. தொடர்பதிவெழுதுவதாக சொன்னது அதைவிட மகிழ்வாக இருக்கிறது. மிக்க நன்றிங்க அம்மா.

   Delete
 3. தொடர்பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி சசி. கண்டிப்பா எழுதுறேன். சின்னதுக்கு பத்தாவது பரிட்சை. அதனால கொஞ்சம் தாமதம் ஆகும்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை அக்கா மெதுவாகவே எழுதுங்க. பிள்ளையை கவனிங்க..

   Delete
 4. சுவாரஸ்யமான தொடர்பதிவு அழைப்பு தான். என்னையும் அழைப்பு விடுத்ததற்கு நன்றி. கூடிய விரைவில் எழுதி வெளியிடுகிறேன்.

  தகவல் சொன்ன தனபாலன் சாருக்கு ஸ்பெஷல் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக வருக தோழி நலம் தானே ? விரைவில் எழுதுவாதாக சொல்லியமைக்கு மிகவும் மகிழ்வுடன் நன்றியை தெரிவிக்கிறேன்.

   Delete
 5. அன்பு வணக்கங்கள் சசி.... தொடர்பதிவு என்று சொல்லி அழகிய புகுந்த ஊரை சுற்றிக்காண்பித்தது போல் அத்தனை அழகு வரிகளில்.... நேரில் சென்று பார்த்தது போல் இருந்ததுப்பா.... த.ம.3

  ReplyDelete
  Replies
  1. அக்கா வாங்க ... உங்களையும் விட மாட்டோம் விரைவில் எழுதுங்க..

   Delete
 6. புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசும் சுவாரஸ்யமான தொடர்பதிவு..

  ReplyDelete
  Replies
  1. வருக வருக தாங்களும் எழுத அழைப்பார்கள் உறவுகள். அப்போது இன்னும்சுவாரஸ்யமாகவே இருக்கும். நன்றிங்க.

   Delete
 7. களை கட்டட்டும் கச்சேரி.

  ReplyDelete
  Replies
  1. கச்சேரியில் கலந்துக்குங்க.

   Delete
 8. ஆஹா என் கவிக் குயிலே காதல் ரசம் சொட்டும் அழகே
  விரித்த சடையாள் நான் வந்து நிற்கின்றேன் மா மரமாய்
  மணக்கும் சோலைக்குள் ஒரு தொடர் பகிர்வா ?...!!
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பங்குபற்றி அசத்தப் போகும்
  என் சொந்தங்களுக்கும் உங்களுக்கும் .த .ம .4

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி. அசத்தப்போகும் சொந்தங்கள் மட்டுமல்ல நீங்களும் தான் அசத்தனும்... வருகைக்கு நன்றி தோழி.

   Delete
 9. அன்பு சசிகலா, வாழ்க வளமுடன். உங்கள் அன்பு அழைப்புக்கு நன்றி எழுதுகிறேன்.
  ஆனால் உங்களைப்போல் அழகாய் கவிதைவடிக்க முடியாது உரைநடையில் எழுதலாம் அல்லவா?
  புகுந்தவீட்டு பெருமையை சொல்லலாம் .
  நன்றி.
  மிக அருமையாக் இருக்கிறது வடசேரி. வனப்பாய் இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக அழகு.

  //வான்தொடும் உசரத்தில் வளர்ந்து நிக்கும் தென்னை
  வளமோடு நலம்சேர்க்கும் இளநிகிடக்கும் திண்ணை
  பகுத்தறிவுப் பாதையில நடக்குமிங்கே சீர்த்திருத்தம்
  பண்பாளர்கள் வாழ்ந்திருப்பர் எங்கள் வடசேரி வாழ்வில் நித்தம்.//
  அருமை.

  வாழ்த்துக்கள் வடசேரி வாழ் மக்களுக்கு.
  அருமையான கவிதை பாடும் மருமகளை அடைந்த உங்கள் புகுந்தவீட்டருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உரைநடையில் அழகாக சொல்வீர்கள் என்றே தங்களையும் அழைத்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

   Delete
 10. தகவல் சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என் சார்பாகவும் நன்றியை தெரிவிக்கிறேன்.

   Delete
 11. மீண்டும் தொடர் பதிவு! களை கட்ட போகிறது! கவிதையில் புகுந்த வீட்டின் அழகை சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 12. ம்ம்ம்ம்... மறுபடியும் தொடர்பதிவா.... நடக்கட்டும்... சோர்ந்து போயிருந்த சில பதிவர்கள் மீண்டும் புத்துணர்வுடன் தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனைவரும் புத்துணர்வுடன் தொடர...

   Delete
 13. தொடர வாழ்த்துகள்.

  இது என்னுடைய வலைப்பக்கம்.

  http://pudhukaiseelan.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்க. கண்டிப்பாக தங்கள் வலைக்கு வருகிறேன்.

   Delete
 14. கவிதையாய் வடசேரியை சொல்லிவிட்டீர்கள்...
  நல்ல தொடர்பதிவு...
  வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ.. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிப்பா.

   Delete
 15. நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் வந்துள்ளீர்கள்! நானும் சில நாட்கள் வலைப்பதிவின் பக்கம் வர இயலவில்லை. முன்பு ஒருமுறை நீஙகள் ” எனது ஊர்” என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்தீர்கள். இப்போது “புகுந்த ஊர்” என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத அழைத்திட்ட சகோதரிக்கு நன்றி! தொடருகிறேன்.

  எனது வலைத்தளத்தில் முதல் தகவலைத் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் எனது ஊர் தொடர்பதிவை அசத்தும் விதமாக அனைவரும் பதிவு செய்தோம். அப்படியே இந்த பகிர்வையும் தொடர எண்ணியே அனைவரையும் அழைத்திருக்கிறேன். அனைவருமே எழுதுவதாக கூறியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 16. நான் வரலப்பா! என்னை விடுங்க!

  ReplyDelete
  Replies
  1. ஹஹ சரிங்க ஐயா.

   Delete
 17. வடசேரி ஊர் பற்றிய பதிவிற்கும் பாட்டு நடையா

  தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி எழுத முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 18. வணக்கம் சசிகலா.
  மிகவும் தாமதமாக நீங்கள் அழைப்பு விடுத்த தொடர் பதிவை என் தளத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  http://wp.me/p244Wx-GT

  ReplyDelete