Thursday 5 September 2013

இரவின் மடியில் !

இரவின் மடியில்
கவிழ்ந்து கிடக்கிறதென்
கவிதை..

இமைகளை மூடவிடாது
வெளிச்ச பொத்தானையும்
ஏற்ற பயந்து..

எம்பித் தவிக்கும் வார்த்தைகள்
இப்படியும் அப்படியுமாக 
எனை புரட்டிப்போட்ட படி.

காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?

இல்லை...
பிரசவக்காரியின் சூட்டு வலியாய்
எழுதுமுன் மறையக் கூடுமோ ?

தீடிரென...
விரல் வழி மைகசிந்து
விடியலுக்கோர் சாசனம் 
எழுதிட துடித்தபடியே 
தூங்கிப்போகிறேன்.

22 comments:

  1. தவிக்கும் வார்த்தைகள் அழகாக புரட்டி போடுள்ளன... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. விடியலுக்கோர் சாசனம்
    எழுதிட துடித்தபடியே
    தூங்கிப்போகிறேன்.//

    நம்மில் பலரும் இப்படித்தான்...தூக்கம் நம்மில் பலருடைய கனவுகளையும் கலைத்துத்தான் போடுகிறது... அருமையான சிந்தனை.

    ReplyDelete
  3. விடியலுக்கே சாசனமா? விளாசித் தள்ளுங்க

    ReplyDelete
  4. வணக்கம் அக்கா...

    அழகான கவிதை...

    பிரவக்காரியா அல்ல பிரசவக்காரியா?

    ReplyDelete
    Replies
    1. பிரசவக்காரிதான்

      Delete
  5. சிந்தனை தரும் கவிதை

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமை! அருமை!
    //விரல் வழி மைகசிந்து
    விடியலுக்கோர் சாசனம்
    எழுதிட துடித்தபடியே
    தூங்கிப்போகிறேன்.// தூங்கினாலும் அழகான கவிதை படைத்து விட்டீர்கள் :)

    ReplyDelete
  7. எழுதிட துடித்தபடியே
    தூங்கிப்போகிறேன்
    >>
    எப்ப பாரு தூங்கிட்டியே இருப்பியா?! எந்திரி புள்ள பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பனும்!!

    ReplyDelete
  8. காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
    கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?//

    கவிதாயினியின் தவிப்பை அழகாய் சொல்கிறது கவிதை.

    ReplyDelete
  9. உறங்குவது உடல்தான் உள்ளம் இல்லைத் தோழி!
    படைத்திடும் உமது விடியலுக்கான சாசனத்தை...

    அழகெனில் அப்படியொரு அழகுக் கவிதை! உளத்தை அப்படியே
    சுருட்டிக்கொண்டு போய்விட்டீர்கள் சுனாமியாய்!

    வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
  10. உங்கள் கவிதைகளின் தரம் கூடிக் கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கவிதை உதயம்...ஒரு அழகான இம்சை தான் !

    ReplyDelete
  12. கவிதை எப்போதெல்லாம் எப்படியெல்லாம் உதிக்கிறது உங்களுக்கு
    அருமை சசிகலா!

    ReplyDelete
  13. கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ கலையாது நினைவில் நிற்கும்.

    ReplyDelete
  14. காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
    கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?

    கவிதை வரிகள் அருமை..!

    ReplyDelete
  15. வணக்கம்
    சகோதரி

    எம்பித் தவிக்கும் வார்த்தைகள்
    இப்படியும் அப்படியுமாக
    எனை புரட்டிப்போட்ட படி

    அழகாக சொற்களை ஒன்று சேர்த்து கவிக் கோர்வை அமைந்தது மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. அந்த நொடி அவஸ்தையைச் சொன்னவிதம் அருமை
    ஆம் பல சமயங்களில் சூட்டு வலியாகத்தான் போகிறது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_292.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  18. வணக்கம்

    வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  19. கவிதையின் மடியில் தூங்கிப்போகிறேன்..

    ReplyDelete