Tuesday 3 September 2013

மகிழ்வான தருணங்கள் ...!

அலமு : சசி! நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லடிம்மா.. ஆமா சொல்லிட்டேன்.

சசி : என்ன மாமி... நான் என்னத்த அப்படி செய்துவிட்டேன்னு இம்புட்டு கோவப்படுறிங்க ?

அலமு : இன்னும் என்னடிம்மா நீ செய்ய பாக்கியிருக்கு..?

சசி : ஏன் மாமி... இம்புட்டு கோவம்?

அலமு : போன வருடமே என்னைய விட்டுட்டு பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்துட்ட.. இந்த வருடம் கிளம்ப சொல்லிட்டு மறுபடி என்னைய விட்டுட்டு போனது சரியா?  நான் வேற ப்யூட்டி பார்லர் எல்லாம் போயிட்டு வந்து வெயிட் பண்னேன் .

சசி : ஆமா மாமி, உங்களை கிளம்ப சொல்லிட்டு காத்திருந்தேன். நீங்க வருகிற வழியா தெரியல.. நான் கிளம்பி ­பு­­வர் ஐயா வீட்டிற்கு சனிக்கிழமை மாலையே சென்று விட்டேன். நீங்க கிளம்பினது தான் கிளம்பினிங்க... காலையில மண்டபம் வரவேண்டியது தானே.?

அலமு : ஏன்டிம்மா சொல்ல மாட்ட... நான் தனியா வந்து அங்க சசி எங்க ... சசி எங்கனு தேடிட்டு இருக்கவா? பார்த்தாலும் பார்க்காத மாதிரியில்ல நீ போவ....

சசி : என்ன மாமி இப்படி சொல்லிட்டிங்க... நான் முன்னாடி போய் அகிலா, எழில்  மற்றும் கோவைப்பதிவர்களை பன்னீர், கற்கண்டு ஏதுமில்லாம வரவேற்றேன் மாமி.

அலமு : பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை பார்க்க.. ஆசையா கம்புயூட்டர் முன்னாடி உட்கார்ந்தா அங்க என்னடிம்மா ஒன்னுமே வரவில்லை ? நீயாவது இல்ல உங்க பதிவர் நண்பர் யாராவது என்ன நடந்தது என்று விரிவா எழுதுவாங்கனு பார்த்தா என்னடி யாருமே எழுதுகிற வழியா தெரியல...!

சசி : ­து­வா மாமி...! எல்லாரும் இன்னும் அந்த இன்ப நிகழ்ச்சி­தந்­ ­சந்ந்­தோ­ஷத்­து­ல இருந்து வெளிவர­ல அதனால லேட் ஆகும்..

அலமு : நீயாவது சொல்லேன்டி.. என்னமோ தெரிய­... இங்க அடுத்தாத்து மாமி கூட ஊருக்கு போயிட்டா வம்பளக்க யாருமில்லடி.. எதாவது சொல்லேன்.

சசி : நான் தான் கிடைத்தேனா இன்னிக்க்­கி..? சரிதான்.... சொல்றேன் மாமி.. பு­­வர் ஐயா வாசலில் நின்று வரவேற்று ‘‘முன்னாடியே வந்திருக்க வேண்டியது தானம்மா என்ன தயக்கம் இது உன் வீடும்மா’’ என்றார். எனக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. மாமி! ஐயா வீட்டில் அற்புதமான உபசரிப்பு ஐயாவின் மகள் அன்பாக பேசி ‘‘என்னங்க பிள்ளைகளோட விழாவுக்கா? பிள்ளைகளையும் பழக்கப்படுத்துறிங்களா?’’ என்று நிதானமாக அமர்ந்து பேசி பிள்ளைகளோட விளையாடினாங்க.  என் சின்ன பையன் இளையவன் விழா முடிந்து வரும் போது கூட ‘‘அம்மா அந்த தாத்தா வீட்டில் இன்றும் தங்கிட்டு போலம்மா..’’ என்று சொல்லும்படி நடந்து கிட்டாங்க.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது மாமி.

அலமு : எங்க போனலும் எப்பம்மா வீட்டுக்கு போகலாம்னு கேட்கிற உன் பையனே.. அப்படி சொன்னானா ? ஆச்சரியமா இருக்கேடிம்மா.

சசி : ஆமா மாமி எல்லாத்தையும் இழுத்து போட்டு விளையாடிட்டு இருந்தான். காலையிலும் எப்பவும் லேட்டா எழுந்துக்கிற வாண்டுங்க இங்க சீக்கிரமே எழுந்து கிளம்பிட்டானுங்க. அரங்கிற்கு வந்தா முதலில் கணேஷ் அண்ணா இருந்தாரு. அப்படியே ஒவ்வொருத்தரா பார்த்து பேசியபடி உள்ளே போனோம்.  விழா ஆரம்பிக்க பத்து மணியாகிவிட்டது. அதற்குள் அறிமுகப்படலம் நிகழ்ந்தது. போனில் என்னை அழைத்து பேசி வருவதாக சொல்லியிருந்த உமா வந்திருந்தாங்க­பாட்­டி ­சொன்­ ­­தை­கள்னு ­இப்­­வும் ­உற்­சா­கம் ­குன்­றா­­ ­­ழு­திட்ட்­டி­ருக்­­ ­ருக்­­ணி ­சே­­சா­யி ­அம்ம்­மா ­வந்ந்­தாங்­. அப்புறம் மாமி.... காதல் கடிதம் எழுதினேன்னு சொன்னேனில்ல அதில் பங்கு பெற்ற பதிவர் அல்லாத தோழி ரேவதி செல்லதுரை வந்தாங்க. சின்ன பொண்ணு மாமி! நான் அவங்க எழுதியதை பார்த்து என்னைய விட பெரியவங்களா இருப்பாங்கனு நினைத்தேன். அவங்க பையனும் நம்ம இளையவனுந்தான் விழா ஏன் அவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று மாலை 6 மணிக்கும் கேட்டுட்டு பிரிய மனமில்லாது பிரிந்தாங்க.


அலமு : இந்த வருடமும் நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்களா ?

சசி : ஆமா மாமி உண்மைத்தமிழன், பழனி கந்தசாமி ஐயா. ரமணி ஐயா இப்படி மூத்த பதிவர்கள் எல்லாம் நிறைய பேர் வந்திருந்தாங்க. நம்ம ராஜி அக்கா பந்தாவா பெட்டிபடுக்கையோட வந்தாங்க. என்னடா இவங்க கல்யாண வீடுன்னு நினைச்சி மாத்திக்க துணி கொண்டு வந்துட்டாங்களோன்னு நினைச்சேன். பிறகு தான் சொன்னாங்க அவங்க ­பெங்­­ளூர்ல பெண்னை பார்த்து விட்டு அப்படியே வருவதாக.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. விழா ஆரம்பம். ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டாங்க. தொகுத்து வழங்க போன வருடம் போல சுரேகா வந்திருந்தாங்க. அவங்களுடன் அகிலாவும் எழிலும் தொகுத்து வழங்கினாங்க. கைத்தட்டல் விசில் பறக்க அறிமுகம் அசத்தலா நடந்தது. ஐயாவின் தனிமையைப் போக்க அவங்க மகள் துவங்கி கொடுத்த வலையின் மூலம் நிறைய நண்பர்களையும் உறவுகளை பெற்றிருப்பதா ­ஐயாவும் பேசினாங்க. தலைமை தாங்கியது அவர் இல்லையா அதனால அவருக்கு வருத்தமும் கூட ...

அலமு : அதனால என்னடிம்மா அவங்க அவங்க தலைமை பொறுப்புக்கு ஆளா பறக்குறாங்க. அவர் ஏன் அப்படி சொன்னார்.


சசி : மாமி தலைமை பொறுப்பு ஏற்றதால அவருக்கு எல்லோருடனும் சகஜமா பேச முடியாம இப்படி மேடையில ஏத்தி உட்கார வச்சிடுறாங்க இல்லையா .. அதனால அப்படி சொன்னாங்க. அப்புறம் நம்ம சென்னை ஹீரோ தான் முன்னிலை ..
நடுவில் ஆவிய அறிமுகம் செய்தாங்க மாமி....


அலமு : என்னடிம்மா இது பட்டப்பகலில் ஆவியா ?

சசி : அஹா..அஹா ஆமா மாமி நம்ம கோவைப் பதிவரைத்தான் ஆவி என்று அழைச்சாங்க. எல்லாருந்தான் வித விதமா யோசிச்சி வலைக்கு பெயர் வச்சிருக்காங்களே.. நான் தான் திடீர்னு தென்றல்னு வச்சிட்டேன்.

அலமு : அதனால என்னடிம்மா நல்லா தான இருக்கு... சரி சரி உன் புராணம் வேண்டாம் மற்ற நிகழ்வ பத்தி சொல்லு.

சசி : பதிவர்கள் ஆர்வம் மாதிரி வெயிலும் அதிகமா தான் இருந்தது. அசரவில்லையே நம்ம நண்பர்கள் வேர்க்க விறுவிறுக்க உள்ளயும் வெளியேயுமா ஜீஸ் குடிச்சிட்டு அடுத்தடுத்த நிகழ்வில் பங்கேற்றாங்க. அப்ப என் செல் அடித்தது நம்ம இளமதி தோழி தெரியும் இல்ல உங்களுக்கு..

அலமு : ஆமா சொல்லியிருக்கேடிம்மா க்விளிங் வேலைப்பாடுகளோட அசத்தலா பதிவிடுவாங்கனு.

சசி : ஆமா மாமி அவங்க தான் போன் பண்ணாங்க. சசி நேரலை பார்க்க முடிய­ல நிகழ்ச்சி எப்படி நடக்குதுப்பானு கேட்டாங்க. எனக்கு உடனே நினைவு வந்ததது அவங்க முன்னாடியே சொல்லியிருந்தாங்க. ஐயா சுற்றுப்பயணம் சென்ற போது வந்து பார்க்க முடியள ஐயாவிடம் சொல்லுப்பா என்று. உடனே சென்று ஐயாவிடம் போனை கொடுத்தேன். அப்படியே கவியாழி மற்றும் மதுமதியிடம் பேசிட்டு மிக்க மகிழ்ச்சிப்பானு சொல்லிட்டு வச்சாங்க.

அலமு : பாருடிம்மா வெளிநாட்டில் இருந்தாலும் சந்திப்பை பற்றி ஆர்வமா கேட்டிருக்காங்க. பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

சசி : ஆமா மாமி அதற்கும் முன்னாடியே வெளிநாட்டு நண்பர் ஒருவர் அலைபேசி வழியாக அனைவருக்கும் வாழ்த்து சொன்னாங்க.

அலமு : பே­ஷ்....பேஷ்...!.

சசி : பிறகென்ன சிறப்பு விருந்தினர் வாமுகோமு, பாமரன், பாட்டையா, கண்மணி குணசேகரன், நா.முத்து நிலவன் எல்லாம் வந்திருந்து மிக சிறப்பா பதிவர்களுக்கு ஆர்வம் குறையாம பேசினாங்க. மதிய விருந்தும் சுவையோட முடிந்து. ம­தி­யம் ­நம்­ ­­வி­ஞர் ­­து­­தி ­­­ழு­தி ­­யக்­கி­ ‘90 டி­கி­ரிங்­­ ­கு­றும்­­டத்­தை ­வெ­ளி­யிட்­டாங்­... ­ரு ­சின்­னப் ­பொண்­ணை ­மை­­மா ­வெச்­சு, நல்­ ­­ருத்­தைச் ­சொல்­லி... பத்­தே ­நி­மி­ஷத்­து­ ­­சத்த்­தி­டா­ரு ­­து­­தி.
பாமரன்


                                                     கண்மணி குணசேகரன்

­மா­மி : ­­டே... ­தி­வர்­கள் ­­சி­னி­மாத் ­து­றை­யி­­யும் ­­லக்­ ­­ரம்­பிச்­சுட்­டாங்­­ளா... பேஷ்... அப்­பு­றம் ­வே­ ­என்­ ­வி­சே­ஷம்?

­சி: ­துக்­கப்­பு­றம்... பதிவர்கள் ­­ங்­­ளோ­ தனித்திறமை­­ளை ­வெ­ளிப்­­டுத்த்­தி ­­­­சத்த்­தி­னாங்­. ­துக்­கப்­பு­றம் புத்தக வெளியீடு இப்படியாக வெகு சுவாரயஸ்மா தொடர்நதது மாமி.

அலமு : புத்தக வெளியீடுமா... போன வருடம் உன்னுடைய புத்தகம் வெளியீடு இல்லடிம்மா. அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிப்போச்சா.

சசி : ஆமா மாமி இந்த வருடம் 5 புத்தக வெளியீடு .. சென்ற ஆண்டு தென்றலின் கவிதை நூலை பெற்றுக்கொண்ட சேட்டைக்காரன் ஐயாவின் நூலும் வெளியானது மாமி. புத்தகம் வாங்கிட்டு வந்திருக்கேன் படிச்சி பாருங்க. நான் நேத்து படிச்சிட்டு இருக்கும ;போது இளையவன் ஸ்கூல்ல இருந்து வந்தான் என்னம்மா தனியா சிரிச்சிட்டு இருக்க அந்த புக்ல என்னம்மா இருக்குனு கேட்டுட்டு நாம நேத்து பார்த்தோமே அந்த தாத்தாவுதாம்மானு கேட்டான். அப்படி படிககும் போதே சிரிக்க வைக்கும் எழுத்து நடை அப்ப்பா எப்படித்தான் எழுதினாங்களோ எழுதும் போது விழுந்து விழுந்து சிரிப்பாங்களோ ? பாவம் அவர் வேற ரொம்ப ஒல்லியா வேற இருக்காரு..
                         சேட்டைக்காரன் ஐயா

அலமு : ஆமாண்டிம்மா நானும் போன வருடம் அவர் புகைப்படம் பார்த்தேனே.. அவரா அப்படி எழுதியிருக்கார்.. படிச்சிட்டு தரேன் தாடிம்மா.

சசி : அதனால என்ன மாமி எடுத்துக்குங்க.  அப்புறம் நண்பர் மோகன் குமார் தெரியுமில்லையாஉங்களுக்கு... அவரோட வெற்றிக்கோடு புத்தகம் வெளியாச்சி.
                           மோகன் குமார்

அடுத்து கோவைப்பதிவர்கள் சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள் புக்கும்.. அதே கோவையில் தோழி யா­மி­தா­ஷாநிஷாவின் அவன் ஆண் தேவதை புக்கும் தொகுப்பாளர் சுரேகாவின் புத்தகமும் வெளியிட்டாங்க மாமி..
                          சங்கவி

அலமு : என்னடிம்மா இது வித்தியாசமான தலைப்பா இருக்கே எல்லாம் பேர் படிக்கும் போது படிக்கனும்னு ஆசை வருதுடிம்மா.
                          சுரேகா

சசி : படிங்க படிங்க எல்லா புக்குக்கும் வாங்கிட்டு வந்துட்டேன்.  அப்புறம் மாமி நம்ம சகோ சீனு போட்டிக்கான பரிசை புக்கா வாங்கிக்க சொன்னாங்க என்ன புக் வாங்குறதுன்னு தெரியல. அங்க என்னோட ரேவதியும் புக் தேடிட்டு இருந்தாங்க அவங்க எடுத்த கோபல்ல கிராமம் புக்கையே நானும் கேட்டேன் எடுத்துங்க நான் நாளை வாங்கிக்குறேன்னு சொன்னாங்க அதனால அந்த புக்கும் வாங்கி நம்ம ரஞ்சனி அம்மாவிடம் கையெழுத்து வாங்கிட்டு நம்ம கோவைப்பதிவர்களோடயே அவங்க வேனில் தாம்பரம் வரை வந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தேன் மாமி; இன்னும் விரிவா சிறப்பு விருந்தினர் எல்லாம் என்ன என்ன பேசினாங்க என்று நம்ம நண்பர்கள் ப்ளாக்ல போடுவாங்க அப்ப படிங்க இதுக்கு மேல பதிவு பெரிசா போன என்னைய யாராவது தேடி வந்து அடிப்பாங்க மாமி.

அலமு : யாராவது என்ன நானே அடிப்பேன்.. ஏதோ சுருக்கமா சொல்வனு பார்த்தா இப்படி பேசிட்டே இருக்கியே என்ன...


சசி : யார் நானா சொல்விங்க... மாமி சொல்விங்க... என்­னோ­ ­வா­யக்­கிண்­டி ­பே­ ­வெச்­சுட்­டு... சொல்­ ­மாட்ட்­டீங்­...! ­டுத்­ ­வா­ரம் ­­ரை ­உங்­­ளோ­ ­பே­சப் ­போ­­தில்­ ­நான்!

                                             நகைச்சுவையா உங்களுக்கு எழுத தான் தெரியும் எப்படி சிரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் சகோ சீனு.

                                                           டோக்கன் கொடுத்து போட்டோ எடுத்த கவியாழி நண்பர்களுடன்.

படங்கள் எல்லாம் நண்பர்கள் வலையில் சுட்டது.

65 comments:

  1. Replies
    1. எல்லோருக்கும் நீங்க தான் குரு எனக்கும் அப்படியே இந்த ஃப்ஸ் இல்லாம டியுசன் எடுங்க.

      Delete
  2. அசத்தலான பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விழாவிற்கு வந்தும் எங்களுடன் எல்லாம் பேசாமல் வந்து விட்டீர்கள் போல..

      Delete
  3. விழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ ...

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியேங்க.

      Delete
  4. விழாவை நேரில் பார்த்த திருப்தி

    அருமையான் தொகுப்பு !

    ReplyDelete
  5. அசத்திட்டீங்க சகோதரி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.

      Delete
  6. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. you have described it in a different and interesting way , Nice it is.

      Delete
    2. குடந்தையூர் சரவணன் தங்களை சந்தித்ததில் எனக்கும்மகிழ்ச்சியே.
      அருணா மேடம் தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  7. வரவேண்டும் என்று ஆசை இருந்தாலும் இந்த வருடம் முடியவில்லை..நிகழ்ச்சி பற்றி அழகாகப் பதிவிட்டு நேரில் பார்த்தது போல ஆக்கிவிட்டீர்கள்..நன்றிங்க சசிகலா...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  8. அலமுவை இன்று வரை விடாது சிநேகதம் வைத்திருப்பதே
    ஓர் பெருய்மையான விஷயம்தான் சசி அவர்களே...

    இது என்ன தொடர்கதை என்று நினைத்தேன் அப்படியே
    அம்போன்னு விட்டு விட்டீர்கள்...

    வேறுயாரும் சொல்ல மாட்டாங்க சசி நீங்களே மிச்சமீதி
    உள்ளதையும் சொல்லி முடிச்சுடுங்க சற்றே விளக்கமா....

    யாரு தேடிவந்து அடிக்க மாட்டாங்க தேடிவருவாங்க
    மனதார பாராட்டுவதற்காக... எவ்வளவு மெனக்கட்டு எழுதியிருக்கீங்க சசி...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு விருந்தினர்கள் உரையை நம் நண்பர்கள் ஒரு வார்த்தை கூட தவற விடாமல் எழுதிட்டு இருக்காங்க.. அங்க படிக்கலாம் வாங்க.

      Delete
  9. உன்னை விட உன் பிள்ளைங்கதான் மனசுல நின்னுட்டாங்க சசி! அதுலயும் சின்னது இருக்கே! எப்படி அவனை வீட்டுல சமாளிக்குறே ந்னு தான் தெரியலை!!

    ReplyDelete
    Replies
    1. உங்க மகளுடன் அவன் ஒட்டிக்கொண்டான் .. இனி அவர்கள் தோழமையுடன் இருப்பார்கள்...

      Delete
  10. வணக்கங்க சசி! என்னங்க இது.... என்னமா அசத்துறீங்க! இயல்பான- அழகான- நடை!எதார்த்தமான வார்த்தைகளில் குறும்பும், கிண்டலும் கலந்த ஒரு இனிய பதிவு! வாழ்த்துக்கள்!!(ஏங்க... அன்றைக்கு நான் உங்களை கூப்பிட்டேன்ல... சென்னைக்கு வந்து இருக்கேன்... உங்களை பார்க்க முடியுமான்னு... அப்பவாவது, நான் பதிவர் திருவிழாவில் இருக்கேன்னு சொல்லியிருந்தா, வந்திருப்பேனே...எனக்கும் உங்க எல்லோரோட தரிசனமும் கிடைச்சிருக்குமே! சரி.. சரி.. சிலதெல்லாம் புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் தான் வாய்க்கும் போல...)

    ReplyDelete
    Replies
    1. நீங்க கோவையில் இருப்பதாகத்தானே சொன்னிங்க... அதுவும் நீங்க விழாவிற்கு வருவதாக முன்பே சொல்லி இருந்தால் நினைவுபடுத்தியிருப்பேன். மன்னிக்கவும் அன்று தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன் அதனால் சரியாக எங்கிருக்கிறேன் என்று சொல்ல இயலவில்லை. கண்டிப்பாக அடுத்த சந்திப்பில் சநதிக்கலாம் வாங்க.

      Delete
  11. படிக்கும் போது நானே நிகழ்ச்சியில் நேரில்
    பங்கு பெற்றது போல ஒரு யதார்த்தம்.
    மகிழ்ச்சி. அது சரி கோவை ஆவியின் 'தமிழா '
    பாடலைப் பாடினாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் வரவில்லை..

      Delete
    2. கேட்டதுக்கு நன்றிங்க.. இதுவரை பதிவிட்ட யாருமே அதுபத்தி போடலீங்க.. அந்த ரகசியம் என்னவென்று தெரியவில்லை.. :-)

      அந்த பாடலை பதிவர் விழாவில் அரங்கேற்றிவிட்டேன்.. அதுவும் ஒரு இன்ஸ்டன்ட் குழுவினருடன் பாடியது மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது. அதைப் பற்றி விரிவாக விரைவில் என் வலைப்பூவில் இடுகிறேன்..:-)

      Delete
  12. அப்புறம் நாடகம் நடந்ததா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லங்க... ஒத்திகை பார்க்கவும் நேரமில்லை. அதனால நிகழவில்லைங்க.

      Delete
  13. உங்கள சந்தித்து பேச முடியாம போச்சுங்களே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க பிசியா இருந்திங்க.. பரவாயில்லங்க.

      Delete
  14. ஊரில் இல்லாததால் பதிவர் சந்திப்பிற்கு வந்து கலந்துகொள்ள இயலவில்லை. அதனாலேன்ன. தங்கள் பதிவைப் படித்ததும் நேரில் கலந்துகொண்டது போன்று உணர்ந்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய நிகழ்வுகள் இருக்கு சொல்ல ...நம் நண்பர்கள் சொல்வாங்க ...

      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. மகிழ்வான தருணங்களை அழகாய் பகிர்ந்து கொண்டீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி. நன்றியும்.

      Delete

  16. தெரிந்த எல்லோருடைய நட்பும் புதுப்பிக்கப் பட்டது தெரிகிறது. . முகந்தெரியாத பதிவர்களின் முகங்கள் அறிமுகம் கிடைத்ததா.?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. புதிய தோழர் தோழிகள் அறிமுகமும் கிடைத்ததுங்க.

      Delete
  17. நீங்கள் எழுதி இருக்கும் விதம் அழகாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  18. அசத்தலாக சொல்லியிருக்கீங்க சசி.
    உங்களை மறுபடியும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. ரேவதி சதீஷ் பற்றி நீங்க சொல்லியிருப்பதை அப்படியே ரிப்பீட்டு!

    அடுத்த வருடமும் சந்திக்கலாம். அதுவரை இந்த இனிய நினைவுகளோடு!

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்கம்மா.

      Delete
  19. ம்கிழ்வான தருணங்கள் ..
    ஆனந்த நினைவலைகளை
    சிறப்பாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  20. நிகழ்வினை மிக மிக அழகாக
    பதிவு செய்து அந்த நினைவினில்
    மீண்டும் மூழ்கி மகிழச் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களை எல்லாம் சந்தித்ததே மிகவும் மகிழ்ச்சி தரும் நினைவுகள் தானே ஐயா.

      Delete
  21. கலக்கலான பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு... அலமு மாமி தான் பாவம்...

    ReplyDelete
    Replies
    1. அவங்களோட பேசிய நான் தாங்க பாவம்...

      Delete
  22. நகைச்சுவையோடு என்னவொரு பிரமாதமாக நிகழ்ச்சியின் தொகுப்பை வாரி வழங்கிவிட்டீர்களே... அசத்தல்தான் தோழி...

    ரொம்பவே ரசிச்சு வாசிக்கிறப்போ... ஐயோடா... இ..ள.மதின்னும்... போச்சுடா... அவ்வ்வ்.. என்னதிது...
    நான் நிகழ்ச்சி பார்க்கும் ஆவலில் நேரலை தெரியவில்லையேன்னு உங்களுக்குத் தெரிவிக்கப் போன் செய்ததை... இப்படிப் இங்கின போட்டுடைச்சிட்டீங்களே...:)
    ம். என்னை வாழ்த்துத் தெரிவிக்கச் சொல்லிக்கேட்க நான் ஆயத்தமாக இல்லாதமையால் புலவர் ஐயாவிடம் மட்டும் கூறிவிட்டு நழுவிவிட்டேன்.

    உங்கள் தொகுப்பு பிரமாதம். நேரில் பார்த்த திருப்தி தோழி!

    என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நீங்க பேசியது ஒரு சந்திப்பு மாதிரி தான என்ன முகம் தான் பார்க்க முடியவில்லை மற்றபடி போனில் அழைத்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  23. //சென்னை ஹீரோ தான் முன்னிலை ..//

    இது வேறயா?

    சிறப்பான தொகுப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா எங்க சென்னை ஹீரோ நீங்க தான..

      Delete
  24. அருமை சசி ....
    நேரடியாக காணாத பதிவர் சந்திப்பை
    ஒரு கதையாக சொல்லி அசத்திட்டீங்க
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!

    ஆமா அந்த மாமி யாரு
    அவங்களும் வலை உலகில்
    இருக்கினமோ...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா இருக்காங்க... தேடுங்க.

      Delete
  25. // என்னடிம்மா இது பட்டப்பகலில் ஆவியா ?//

    அலமு மாமி, எங்க வீட்டுல ரெண்டு நாளா கெஸ்டா இருந்துட்டு இப்படி கேக்கறீங்களே, ஞாயமா, சொல்லுங்க..


    ஒருவேளை உங்களை அப்பாடக்கர் அலமு மாமின்னு கூப்பிட்டதால பழி வாங்கிட்டீன்களோ?? :-)

    ReplyDelete
    Replies
    1. மாமிக்கு பிடித்த மாதிரி சமைச்சி போட்டிருக்க மாட்டிங்க.

      Delete
  26. பதிவர் சந்திப்பு விழா குறித்து அழகான பதிவு! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

      Delete
  27. சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டதை உரையாடல் பாணியில் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஏன் வரவில்லை விழாவிற்கு ?

      Delete
  28. சிறப்பான பதிவு சசிகலா. விழாவுக்கு உங்களுடன் வந்ததுபோலவே உணரமுடிகிறது. இன்னும் பிற விவரங்களையும் எழுதுங்கள். நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்களின் ஏக்கம் தீர்ப்பதாக இருக்கும்.

    ReplyDelete
  29. நல்ல அருமையான பதிவு

    ReplyDelete
  30. வணக்கம்
    உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
    http://blogintamil.blogspot.com/2013/09/3.html?showComment=1379545194911#c5940160482125873396
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  31. உங்கள் தளத்திற்கு முதல்வருகை...அடுத்த வருடமாவது பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  32. அலமு மாமியை மேடையில் ஏத்த முடியலைன்னு வலையிலே இறக்கி விட்டுட்டீங்களா சசி...அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... ஏகப்பட்ட பேரை ஒன்றாகச் சந்தித்ததால் யார் யாரிடம் என்ன பேசினோம் என்றே இன்று வரை யோசித்துக்கொண்டிருக்கிறேன்...மதியம் ரொம்ப டயர்ட் ஆகி விட்டதால் இன்னமும் நிறைய பேரிடம் பேச முடியவில்லை...ஆனால் நீங்கள் அழகாக எழுதியுள்ளதில் நிகழ்ச்சி இன்னொரு முறை ரீவைண்ட்...நன்றி...

    ReplyDelete
  33. நல்ல அருமையான பதிவு

    ReplyDelete