Sunday 29 September 2013

காதலின் நளினம் !


என்னடி அதிசயம் இது
வெண்டைக்காய் நடந்திடுமோ ?
வாசலில் கோலமும் வரைந்திடுமோ ?
என்றே கேட்டான்.
பிடுங்கித் தின்ன வெட்கத்தோடே
பிடிகொடுக்காமல் எங்கே என்றேன்.
விரலதனை பிடித்து அவனும்
வில்லங்கமாய் சிரித்து நின்றான்.

குளக்கரைக்கு நானும் போனேன்
குளத்து மீனும் எம்பிகுதித்து
குத்தாட்டம் போடுதென்றான்
புரியாமல் புருவம் உயர்த்த
புது வகை மீனினம் (கண்கள்)-உன்
புது வரவை காண என்றான்.

பூபறிக்க நானும் போனேன்
அடிபாதகத்தி வண்டெல்லாம்
உன் பின்னே வர...
வாடிப்போச்சே பூக்கள் என்றான்..

என்னடி வம்பா போச்சி
வாய் ஜால மன்னனிவன்
வார்த்தையோட மல்லு கட்ட
வழியிருந்தா சொல்லிப்போயேன்.

39 comments:

  1. அருமையான கற்பனை... ரசித்தேன்....

    மின்னஞ்சல் அனுப்பினேன். கிடைத்ததா?

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் மின்னஞ்சல் வரவில்லையே...

      Delete
  2. தியேட்டருக்கு நானும் போனேன்..
    எப்போதும் ரசிக்கின்ற
    புதுப்படங்கள் பிடிக்கவில்லை,
    பொன்னியின் செல்வன் புதினத்தை
    மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்
    மனசும் அதில் லயிக்கவில்லை

    அட, காலங்காத்தால உங்க கவித
    ஒன்ன படிச்சுப்புட்டேன்.. அத்துணை
    சுவையா இருந்ததுன்னு
    இப்போ நானும் புரிஞ்சுகிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அழகா எச பாட்டு பாடுறிங்க...

      Delete
  3. அருமையான கவிதை சசி

    ReplyDelete
    Replies
    1. அக்கா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  4. ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அட அட அருமைங்க !
    // வண்டெல்லாம்
    உன் பின்னே வர...
    வாடிப்போச்சே பூக்கள் என்றான்..// கலக்கல்!
    ரசித்தேன் மகிழ்ந்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  6. மிகவும் அருமை! சசி! பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  7. பழைய காலத்துல ஒரு நாயகனும் நாயகியும் நகர்வலம் வர்றப்போ நாயகியைப் பார்த்து பாடற ஒரு பாட்டைப் போல அவ்வளவு நளினம், அவ்வளவு சுவை.... சூப்பர்ங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி நினைத்து தாங்க எழுதினேன்..

      Delete
  8. வார்த்தையோட மல்லு கட்ட
    வழியிருந்தா சொல்லிப்போயேன்.
    >>
    ஓங்கி ஒரு அப்பு அப்பு அவன் கன்னத்துல. பய எழுந்துக்க ஒரு வாரம் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதா அந்த பிள்ளையிடம் சொல்றேங்கா.

      Delete
  9. காரியம் ஆகும் வரைக் காலைப் [ வாய் ஜாலம் தான் ]
    பிடி தான் !
    படம் காவியம் !

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க.

      Delete
    2. காரியம்(காதலுக்கு எஸ் சொல்லும் வரை ) ஆகும் வரைக் காலைப் பிடிப்போம் அதன் பின் கையைப் (கல்யாணம் பண்ணுவோம்) பிடிப்போம் . கல்யாணத்திற்கு அப்புறம் நாங்கள் எங்கள் காதையும் வாயையும் பொத்தி சம்த்தாக இருப்போம்

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. படித்துவிட்டுப் பெருமூச்சு விடவேண்டியிருக்கிறது!- கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  12. என்னவெனச் சொல்வேன்
    கவியரசி உன் பாடலை...
    எங்கிருந்து உனக்குள்
    இத்தனை ஊற்றுக்கள்!...
    வியக்கின்றேன்!.. உன்னுள்
    வீணாதேவிதான் வாசஞ்செய்கின்றாள்!...

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்ட வரிகள் குளிர்ந்து போனேன் தோழி.

      Delete
  13. அழகிய கற்பனை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. அழகிய கற்பனை. ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  15. ஹஹா சூப்பர்.... வித்யாசமா இருக்கு, நான் இன்னும் பயிற்சி பெறணும் கவிதை எழுத

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. தாகத்திற்கு தண்ணி கொடுத்தேன்
    தண்ணி கேட்ட எனக்கு தேவாமிர்தம்
    தருகிறாயே என்கிறான்


    எமர்ஜென்ஸி வார்டில் மிக சிரியஸாக இருந்த அவனை பார்க்க சென்றேன்
    நான் விட்ட முச்சுகாற்றை சுவாசித்து
    இப்போதுதான் எனக்கு சுத்தமான ஆக்ஸிசன் கிடைத்து என்று சொல்லி
    உயிர் பிழைத்து எழுந்து நிற்கிறான்

    ReplyDelete
    Replies
    1. மிக மிக ரசிக்க வைத்த பின்னூட்டம் ரசித்துப்படித்தேன்.

      Delete
  17. பூபறிக்க நானும் போனேன்
    அடிபாதகத்தி வண்டெல்லாம்
    உன் பின்னே வர...
    வாடிப்போச்சே பூக்கள் என்றான்

    படமும் வாய்ஜாலமும் ரசிக்கவைத்தன..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  18. இந்த பதிவிற்கு நீங்கள் இட்ட படத்திற்கு பதிலாக உங்கள் ப்ரொபைலில் உள்ள உங்கள் படத்தையே இங்கே போட்டு இருந்திருந்தால் மிக பொருத்தமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏங்க இப்படி அந்த படமே நன்றாக தான் இருக்கிறது.

      Delete
  19. வாய்ஜால வித்தைக்காரனாக இருப்பான் போலிருக்கே.. நல்ல கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete