Saturday 28 September 2013

நினைவெனும் வானில் !


நோக்காது நோக்கி
தாக்காது தாக்கும்
அவன் விழியம்பு...

காயத்துடன் அவன்
இதயக்குகைக்குள்
தஞ்சம் புகுந்தவளை
வார்த்தை உளியாள்
செதுக்கியபடி இருக்கிறான்.

இடை இடையே
சௌக்கிய விசாரிப்புகளோடு
கொஞ்சலும் கெஞ்சலுமாய்
நகரும் சந்திப்பு நேரங்களை
அவனுக்கு மட்டுமே
சொந்தமாக்கிக் கொண்டு..

வர்ணங்கள் ஏதுமின்றி
வார்த்தைகளை குழைத்தே
அலங்கார சிலையாக்கி ..
நிஜத்தின் இனிமை 
நிமிடமென்றே...
நினைவெனும் வானில்
நித்தம் நித்தம்
உலா வரச்செய்கிறான்.

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ///காயத்துடன் அவன்
      இதயக்குகைக்குள்
      தஞ்சம் புகுந்தவளை///



      காயப்பட்டவளை தன் இதயத்துக்குள் இடம் கொடுத்து அணைத்த அந்த கள்வன் யாரோ

      Delete
  2. நினைவெனும் வானில் உலா வரச் செய்யும் 'அவனை' பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது, சசி!

    ReplyDelete
  3. நோக்காது நோக்கி
    தாக்காது தாக்கும்
    அவன் விழியம்பின்
    கதிர்வீச்சில்
    உயிர்வரை
    காந்தப் படிமங்கள்
    ஒட்டிக் கொள்கின்றன
    காதலோடு காதலாய்....!

    அழகு கவி சசிகலா
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  4. கிராமிய பாணியிலும் சரி காதலில் உருகுவதில் ஆகட்டும் உங்களின் கவிதைகள் ஜொலிக்கின்றன

    ReplyDelete
  5. வாத்தைகள் தேவையில்லை வாஞ்சையான காதலுக்கு!

    பரிணமிக்கும் அழகுணர்வுக் காதல் கவிதை தோழி!
    வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
  6. நோக்காது நோக்கி
    தாக்காது தாக்கும்
    அவன் விழியம்பு...

    காத்திருப்பதில் இன்பம் மட்டும் அல்ல
    இவ்வாறான சிறு சிறு துன்பங்களும்
    காதலுக்குள் ஊடுருவத்தான் செய்கின்றது .
    உணர்வுபூர்வமான வரிகள் .வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  7. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை கவர்ந்த வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. //காயத்துடன் அவன்
    இதயக்குகைக்குள்
    தஞ்சம் புகுந்தவளை
    வார்த்தை உளியாள்
    செதுக்கியபடி இருக்கிறான்.//

    அழகான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  10. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  11. சிறப்பான கவிதை......

    பாராட்டுகள்.

    ReplyDelete
  12. அழகிய கவிதை அக்கா...
    ரசித்தேன்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கவிதை வரிகள் அருமை ரசித்தேன்

    ReplyDelete
  14. //நிஜத்தின் இனிமை
    நிமிடமென்றே...//

    உண்மைதான்.. அழகாக எழுதியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  15. //வர்ணங்கள் ஏதுமின்றி
    வார்த்தைகளை குழைத்தே// உங்கள் கவிதையும் இப்படியே,அழகோ அழகு! மிகவும் ரசித்தேன் சசிகலா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. உள்ளூர காதல் ஏக்கம் கொண்டு தவிக்கும் பெண்மனத்தின் எண்ணம் இங்கே கவிதையாய்க் கமழ்கிறது. அருமை சசிகலா.

    ReplyDelete