Sunday 22 September 2013

சந்தைக்கு போனான் ரோசக்காரன் !


சந்தனம் மணக்கும் வாசக்காரன்
சந்தைக்கு போனான் ரோசக்காரன்

கர வேட்டி தரைய வெட்ட
கட்ட பொம்மன் தோற்றம் சொட்ட

அருவா மீச சிரிப்பழகன்
ஆள மயக்கும் கருப்பழகன்

அங்குமிங்கும் பார்த்துகிட்டே
ஆடி வந்தான் காதல் சொட்ட

மல்லிகை வாசம் அழைக்குதடி
மனசும் மெல்ல பிசையுதடி

காட்சியெதும் விளங்கவில்ல
கண்முன்னே எல்லாம் கருப்புவெள்ள

சரக்கு என்ன வாங்கவந்தான் ?
சத்தியமா விளங்கவில்ல...

செக்கு மாடா சுத்தி வந்தே
செண்பகப்பூ எங்கே என்றான்.

துறு துறுன்னு பார்வை சுத்த
தும்பப்பூ பல் வரிச
கல கலன்னு தான் சிரிச்சே-அவளும்
இது மீன் கடை என்றே சொன்னா...

28 comments:

  1. அருமை... காதல் சொட்ட ஆடி வந்தால் காட்சிகள் தெரிய வாய்ப்பில்லை...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. ஹா ஹா மீன் கடையில போய் செண்பகப்பூ கேட்டானா? அவ்வளவு காதலா அவனிடம்?

    ReplyDelete
  3. கா­தல் ­வெள்ள்­­மாய்ப் ­பொங்­கு­து ­க­வி­தை­யி­ல! சூப்­பர்!

    ReplyDelete
  4. காலையிலேயே கிறு கிறுங்குதே ....

    ReplyDelete
  5. துறு துறுன்னு பார்வை சுத்த
    தும்பப்பூ பல் வரிச
    கல கலன்னு தான் சிரிச்சே-அவளும்
    இது மீன கடை என்றே சொன்னா...

    கிறுக்கு புடிச்ச மச்சானுக்கு காதல் மயக்கம்
    வந்தாச்சு என்று அழகாய் வடித்த கவிதைக்கு
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  6. அருமை அருமை
    மச்சான் சந்தைக்கு வந்த காரணம்
    எங்களுக்கெல்லாம் புரிஞ்சு போச்சு
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காதல் கிறுக்கனை அழகா வர்ணிச்சிட்டீங்களே.....

    ReplyDelete
  8. சூப்பர்ங்க.... மீன் வாடையும் மலர் வாசனையா தெரிஞ்சிருக்கு..... எல்லாம் மனசுக்கு புடிச்சவ இருந்ததால.... அருமையா இருக்கு ஒவ்வொரு வரியும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஹஹ்ஹா.. ஒரு முழம் செண்பக மீன் கொடுக்க வேண்டியதுதானே??

    ReplyDelete
  10. அட... மீனெல்லாம் பூவாத் தெரிஞ்சுதோ அவனுக்கு...:)

    நல்ல கற்பனை தோழி! அருமையான வரிகள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. காதலில் மீன் வாடை செண்பகப் பூ நறுமணமாகத் தெரிந்ததோ..அழகு காதல்..
    எப்படி இவ்வளவு அழகாக கவி பாடுறீங்களோ .... :) வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
  12. ////////
    காட்சியெதும் விளங்கவில்ல/////

    எனக்கு விளங்கிவிட்டது...

    ரசிக்கும்படியான வரிகள்

    ReplyDelete
  13. ஒரு நாட்டுப்புற பாடலை ரசித்தது போன்ற உணர்வு.

    ReplyDelete
  14. ஹஹா... காதல் மயக்கம் இப்படி எல்லாம் பண்ண வைக்குமா?

    ReplyDelete
  15. அதுதானே! கண்ணு தெரியாமல் வருமில்லை:)))
    மிகவும் ரசனை.

    ReplyDelete
  16. காதல் மயக்கத்தில் பூக்கடைக்கு பதில் மீன்கடைக்கு சென்று விட்டாரா? நல்ல மயக்கம்தான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. சரக்கு அடிக்கலாம் என்று நினைத்தேன் அதற்கு முன்னால் உங்கள் கவிதையை படித்த நான் காதல் மயக்கத்தில் கிறு கிறுத்து போனேன் சரக்கு தரும் போதையை விட உங்கள் கவிதை தரும் போதை மிக அதிகம்.

    எதிர்காலத்தில் நீங்கள் இந்த மாதிரி கவிதை வெளியிட்டால் மது உடலை கொடுக்கும் என் கவிதை உங்கள் மனதை கிறு கிறுக்க வைக்கும் என்று எச்சரிக்கையை வெளியிடுங்கள்

    ReplyDelete
  18. மச்சான் சந்தைக்கு வர்ற முன்னாலே டாஸ்மாக் பக்கம் போயிட்டு வந்தாரோ ?

    ReplyDelete
  19. நாட்புற வரிகள் நன்றாக விழுந்துள்ளது.
    மிக மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. துறு துறுன்னு பார்வை சுத்த
    தும்பப்பூ பல் வரிச
    கல கலன்னு தான் சிரிச்சே-அவளும்
    இது மீன் கடை என்றே சொன்னா...//

    அருமை.

    ReplyDelete
  21. மீன்கடையில் காதல் பூ வாசம்...!

    ReplyDelete
  22. Visit : http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_28.html

    ReplyDelete
  23. ஆங்கிலத்தில் 'Love is Blind' என்பார்களே அதே நிலைதான் இவனுக்கும் போலிருக்கிறது! மீன் கடையில் செண்பகப்பூ கேட்பானா, இல்லையென்றால்?
    சந்தைக்குப் போன ரோசக்காரனைப் பற்றிய வர்ணனை அபாரம்!

    ReplyDelete
  24. உங்களின் நூல் விமரிசனமும் படித்தேன். இன்னும் நிறைய கவிதை நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துகள்!

    ReplyDelete