Wednesday 18 September 2013

ஹலோ அம்மாவா..?

பூண்டு மிளகு 
தட்டிப்போட்டு
புளிய கொஞ்சமா
கரைச்சி ஊத்தி
அம்மா வைக்கும் 
வாயு குழம்பு...

என்ன இலைமா அது ?
அலைபேசியில் கேட்டிடவே
அழைக்கிறேன்.
அவர் தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கிறார்.. -என
யாரோ சொன்ன பிறகே
உணர்கிறேன் .
அம்மா இல்லை என்பதை.
***********************************
அம்மா கத்துக்கொடுத்த
கம்பிக் கோலங்கள்
மனதைக் கிழிக்காமல்
விரல் வழி வந்து விழுவதில்லை.

42 comments:

  1. உங்க கவிதைகளை நான் எப்போ படிக்கும் போதும் பாட்டு மாதிரி படிக்கிறது வழக்கம்.. இன்னைக்கும் அதுபோல ஜாலியா பாட ஆரம்பிச்சேன். இடையிலே என்னையும் அறியாமல் குரல் கம்ம ஆரம்பித்து விட்டது..

    கோலக் கவிதையும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. அம்மா எனும் வார்த்தையின் மகிமை.

      Delete
  2. அழகு... ரசித்தேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  3. ஆயிரம் கோடி வழியிருந்தும்
    அம்மா சொன்னதே அருமருந்து
    பாயிரம் பாடி புகழ்ந்தாலும்
    பண்பவள் செயலுக்கு ஈடில்லை

    அருமை சசிகலா...

    அம்மாவின் வழிகாட்டுதலில்
    கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாவுடன் வந்த வாழ்த்து மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  4. உங்கள் மனதைக் கிழித்த வலி எங்கள் மனதிலும் கீறிச் செல்கிறது...
    நினைவுகள் சுழல நினைவை இழந்திடக்கூடாதென நினைக்கிறேன்...

    ஒவ்வொரு படைப்பிலும் மனதை ஆழ உழுகின்ற திறமை உங்களது!..

    திறமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  5. அருமை. அம்மா அம்மா தான்.

    அம்மா மட்டுமே எப்போதும் நம் தொடர்பு எல்லைக்குள்.

    //அம்மா கத்துக்கொடுத்த கம்பிக் கோலங்கள் மனதைக் கிழிக்காமல்
    விரல் வழி வந்து விழுவதில்லை.//

    சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  6. ஒவ்வொரு படைப்பிலும் மனதை ஆழ உழுகின்ற திறமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கவிதை இன்னும் சற்று நீண்டிருக்கக் கூடாதோ அம்மாவின் சிறப்பைப்
    பற்றி எடுத்துரைக்க எனத் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. எழுதிக்கொண்டே இருக்கலாம் இன்று ஏனோ அம்மாவின் நினைவு எனை எந்த வேலையும் செய்ய விடவில்லை.

      Delete
  8. அம்மா ஒவ்வொருத்தருக்கும் ரொம்பவும் ஸ்பெஷல்தான்! கவிதை மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அம்மா ஆயிரம் கதைகளை சொல்லும் வார்த்தை.. அம்மாவின் அன்புக்கு இணையுண்டோ? கவிதை அழகு சகோ...

    ReplyDelete

  10. இது என்ன விந்தை ?

    கோலப்பொடி என் கண்களில் விழவில்லை.
    கண்ணீர் வழிகிறதே

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் அழ வைத்து விட்டேனா ? மன்னிக்கவும்.

      Delete
  11. அழகான அம்மா கவிதை...


    அம்மாவிற்கு இனை யார்...

    ReplyDelete
  12. அம்மாவின் நினைவுகள் நாம் மரணித்தாலும் மறையாது....

    நல்லதொரு நெகிழ்ச்சியான கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள்.

      Delete
  13. யதார்த்தம், எல்லாம் அம்மா தானே கற்றுக் கொடுப்பது...உண்மை கூறி நெகிழவைத்த கவிதை..கோலமும் அழகா போட்டுருகீங்க சசி!

    ReplyDelete
    Replies
    1. படம் இணையத்தில் இருந்து எடுத்ததுங்க..

      Delete
  14. மனதைக் கிழிக்காமல்
    விரல் வழி வந்து விழுவதில்லை.

    தாயின் அன்பை வர்ஷிக்கும் அருமையான உணர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி தோழி.

      Delete
  15. மனதை நெகிழவைக்கின்றது கவிதை.

    அடிக்கடிஎழுந்துகொண்டே இருக்கும் அம்மாவின் நினைவுகள் சிறப்பான கவிதையாக. மனம் கவர்ந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி தோழி.

      Delete
  16. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி தோழி.

      Delete
  17. அம்மா கத்துக்கொடுத்த
    கம்பிக் கோலங்கள்
    மனதைக் கிழிக்காமல்
    விரல் வழி வந்து விழுவதில்லை.//
    அருமை.
    அம்மாவின் நினைவுகளை எனக்கும் கொடுத்தது. வாழ்க்கை பாடம், வாழ்வில் உயர அம்மா கத்துக் கொடுத்தவை எவ்வளவு!
    மனதை நெகிழ வைத்து விட்டீர்கள், கண்களில் ஊற்று எடுக்கும் அம்மாவின் நினைவு முத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்களில் ஊற்று எடுக்கும் அம்மாவின் நினைவு முத்துக்கள்.
      ஆமாம் தோழி.

      Delete
  18. கவிதை அருமை அக்கா...
    கம்பிக் கோலமாய் பின்னிப் பிணைந்த உங்கள் அம்மா பாசம் நெகிழ வைத்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. சின்னக் கவிதையிலும் அம்மாவின் நினைவுகள்! அழியாத கோலங்கள்!

    ReplyDelete
  20. அழைக்கிறேன்.
    அவர் தொடர்பு எல்லைக்கு
    அப்பால் இருக்கிறார்.. -என
    யாரோ சொன்ன பிறகே
    உணர்கிறேன் .
    அம்மா இல்லை என்பதை.//

    ஆஹா கண்களை நிறைய வைத்த வரிகள். அழகா வருதுங்க உங்களுக்கு கவிதை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அம்மா கத்துக்கொடுத்த
    கம்பிக் கோலங்கள்
    மனதைக் கிழிக்காமல்
    விரல் வழி வந்து விழுவதில்லை// எவ்வளவு வருஷம் ஆனாலும் அம்மா நியாபகம் ஒரு நிமிஷம் தனிமையை பரிசளித்து செல்ல தவறுவதில்ல

    ReplyDelete
  22. //அம்மா கத்துக்கொடுத்த
    கம்பிக் கோலங்கள்
    மனதைக் கிழிக்காமல்
    விரல் வழி வந்து விழுவதில்லை////

    அருமை..... மனதைத் தொட்டது. நிச்சயம் நினைவில் நிற்கும் வரிகள்.

    ReplyDelete
  23. அம்­மா­வை ­எண்­ணி­ய­தும் ­நெ­கிழ்ந்­த ­உன் ­உ­ணர்­வு­க­ளை ­அப்­ப­டி­யே ­நாங்­க­ளும் ­உ­ணர்ர்­கி­ற ­மா­தி­ரி ­க­டத்­தி­விட்­ட­து ­உன் ­க­வி­தை! அ­ரு­மை­யம்ம்­மா...! சா­தா­ர­ண­மா­கப் ­ப­டி­க்­க ­ஆ­ரம்ம்­பித்­து ­­ப­டித்­து ­மு­டிக்­­கை­யில் ­ம­னம் ­கனத்­துத்தான் ­போ­ன­து!

    ReplyDelete