Monday 16 September 2013

மூக்கொழுகி ராசாத்தி !


ஆத்தா அருகம்புல்லும் அழகாத்தான்
மூக்குத்திய போட்டிருக்க...
ஆளான பெண்னெனக்கு
அழுக்கு பாவாடை தான்
மீதமாத்தா...?

பனித்துளி வாழ்வதற்கு
பாவடக்காரி உனக்கேன்டி
நால்வருக்கு அடுத்து பொறந்து-உனக்கு
நல்ல நேரம் இன்னும் வரல..

பொண்ணாக பிறந்திடவே
வரம் கேட்டு பொறக்கவில்ல
நான் பிறக்கும் போதே
என்அப்பன் ஆண்டியப்பன்
எனக்குனு பழமொழிய
எழுதியவன் எவனாத்தா..?

குடிசைக்குள் ஒழுகலாட்டம்
குத்தங்கொறக்கு பழமொழி
நூறுண்டு.
நூல் சேலைக்கே ஏங்கிடும்
பொழப்பா  நம் வாழ்க்க
நமக்கு மூக்குத்தி ஒரு குறையா
மூக்கொழுகி ராசாத்தி.

35 comments:

  1. //நூல் புடவைக்கே ஏங்கிடும்
    பொழப்பே நம் வாழ்க்க
    நமக்கு மூக்குத்தி ஒரு குறையா//

    ஏழைச் சிறுமியின் ஏக்கப் பெருமூச்சு.. அழகாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர ஆசிரியரின் முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.. நன்றிங்க.

      Delete
  2. ஏழ்மையை அழகாக படம் பிடித்து காட்டி இருகிறீர்கள்
    //பனித்துளி வாழ்வதற்கு
    பாவடக்காரி உனக்கேன்டி//
    இந்த வரி புரியல

    நாட்டுப்புற கவிதை என்பதால் சில இடங்களில் தூய தமிழை தவிர்த்திருக்கலாம்.

    உதாரணம்
    பெண்ணாய் -பொண்ணா
    புடவை - சேலை

    தவறாக நினைக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. உரிமையாக சொன்னதில் மகிழ்வே.. நட்பிற்குள் தவறாக நினைக்க என்ன இருக்கு.

      Delete
    2. அருகம்புல்லின் மேல் பனித்துளி அதுவே அவளுக்கு அருகம்புல் மூக்குத்தி போட்டிருப்பதாக தெரிகிறது.. அந்த வாழ்வு ஏன் என்று ஆத்தா கேட்கிறாள்..

      Delete
  3. ராசாத்தியின் ஏக்கம் என்று தீருமோ ?

    ReplyDelete
    Replies
    1. ஏழையை துரத்தும் ஏக்கம்..

      Delete
  4. சிந்தனை தரும் சிறந்த படைப்பு !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. மூக்குத்தி ஒரு குறையா.....

    என்று தீரும் ராசாத்தியின் ஏக்கம்.....

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரி

    கவிதையின் வரிகள் ரசிக்கும்படி அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. இயல்பான வார்த்தைகளில்
    இல்லா கொடுமையை சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  8. உடனே படிக்க வைத்த தலைப்பு.
    அழகான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மிகவும் மகிழ்ச்சிங்க..

      Delete
  9. //நமக்கு மூக்குத்தி ஒரு குறையா
    மூக்கொழுகி ராசாத்தி.//
    மூக்குத்தி என்னங்க மூக்குத்தி..அது இல்லாமலே அவ ராசாத்தி தானே ..அழகாய் சொல்லும் கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆனா பிள்ளைக்கு சொன்னா புரியள..

      Delete
  10. மூக்குத்தி போட்டுக்கத்தான்
    மூக்கொழுகி ராசாத்திக்குத்தான்
    மூக்குமேல வந்த ஆசையைக்கேட்டு
    மூக்கால அழுவுறா ஆத்தாளும்.
    பொன்னு வக்கிற இடத்திலே
    பூ வக்கத் தெரியாதா பொண்ணுக்கு?
    மூக்குத்திப் பூக்குத்தி மனசத்தான்
    தேத்திக்குவா அந்த மவராசி!
    மனசத் தொடுற கவிதைபாடி
    மயங்கவைக்கிறா இந்த சசி!

    ReplyDelete
    Replies
    1. அய்... அழகான வரிகளால் என்னை மயக்கிட்டிங்க தோழி..

      Delete
  11. தென்றலாய் மனதினை வருடிச்சென்றுவிட்டன கவிதை வரிகளை படிக்கையில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி நலம் தானே.. ?
      பயணம் எல்லாம் முடிந்ததா ?

      Delete
  12. ராசாத்தியின் ஏக்கம் விரைவில் நிறைவேறட்டும்...

    நல்ல கவிதை... அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கம் விலை குறையட்டும்..அப்போது தானே ராசாத்தியின் ஆசை நிறைவேறும்.

      Delete
  13. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. ரஸிக்கும்படியான கவிதை. பகிர்வுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  15. இது போல இன்று பல ராசாத்திகள் உள்ளனர். மனதை நெகிழச் செய்த படைப்பு.

    ReplyDelete
  16. நூல் சேலைக்கே ஏங்கிடும்
    பொழப்பா நம் வாழ்க்க
    நமக்கு மூக்குத்தி ஒரு குறையா
    மூக்கொழுகி ராசாத்தி.//

    நெகிழ வைத்த கவிதை.

    ReplyDelete