Wednesday 11 September 2013

அழகா பூத்த ரோசாப்பூ !


அக்கா மகளே ராசாத்தி
அழகா பூத்த ரோசாப்பூ
அத்த மகன் நானிருக்க
அரளிவெத சிரிப்பெதுக்கு.

கல்லு வச்ச மூக்குத்தியும்-சிரிப்ப
கடன் கேக்கும் லோலாக்கும்
பச்ச கலரு தாவணியும்- குனிய
பருத்தி கொட்ட எடுக்குதடி.

உன்னழக பார்ததிருந்தா
பூலோகம் இருளுதடி
புதைகுழியா தெரியுதடி
போன மாசம் சமைஞ்சவளே
புது மொட்டா சிரிப்பவேள

சீமத்தொர கணக்காத்தான்
சிரம் நிமித்தி நடந்திருந்தேன்
சிருக்கி உன்ன பார்த்துப்புட்டா
சிரிச்சி பேச மறக்குறேன்டி...

மாமனுந்தான் காவலுக்கு
மருகி மருகி காத்திருக்கேன்
மரிக்கொழுந்தா வாசம் வீசி
போவதெங்கே வீதியில..

44 comments:

  1. அழகா பூத்தது ரோசா மட்டுமா.. உங்க கவிதையும்தான் ...:)

    ஆளை மயக்கும் அற்புத கற்பனை!
    சிற்பமோ.. சித்திரமோ.. உங்கள் கற்பனையில் உயிர்பெற்றுவிடும்!

    மிக அருமையான நாட்டுப்புறக் கவிதை!
    தென்றல் வருடிய சுகம்!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 2

    ReplyDelete
    Replies
    1. தோழியின் வாழ்த்தில் மிகவும் மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  2. கிராமிய மணத்தோடு பூத்த ரோசாப்பூ வாசனை நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete
  3. உங்க கவிதைய பார்த்ததும் அத பாடணும்னு தோணித்து.. எப்படி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க..

    https://soundcloud.com/anandwaits/2k0vls5kvswo

    ReplyDelete
    Replies
    1. சுப்பு தாத்தாவிற்கு போட்டியாகவா..?
      பாடலை கேட்கும் ஆவலில் லின்க் கிளிக் செய்தால் என் கணினியில் ஓபன் ஆகவில்லையே ?

      Delete
  4. உன்னழக பார்ததிருந்தா
    பூலோகம் இருளுதடி
    <<
    இதான் மயங்க வைக்கும் அழகா!?

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா நம்ம ஊர் பக்கத்தில் இருந்துட்டு பார்க்காமலா இருக்கிங்க..?

      Delete
  5. அழகான அம்சமான கவிதை...சந்தத்தோட, தாளத்தோட பாடவைக்கும் பாடல்னு கூட சொல்லலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் தங்கள் வாழ்த்து. மிக்க நன்றிங்க.

      Delete
  6. அவளும் கூட அடியெடுத்து
    மாமனத் தான் தேடிப்
    போறா வீதியிலே ......
    ரோஜா மணக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க தோழி.. நன்றி.

      Delete
  7. //அரளிவெத சிரிப்பு!//
    எங்கேருந்துதான் வருதோ இப்படிச் சிந்தனையெல்லாம்
    வாழ்த்துகள் சசிகலாம்மா!

    ReplyDelete
    Replies
    1. கிராமத்தில் இப்படியெல்லாம் பேசுவாங்க..

      Delete
  8. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  9. #அரளிவெத சிரிப்பெதுக்கு.#இப்படி சந்தேகப் படுற மாமன்காரனுக்கு யோசிச்சு கழுத்தை நீட்டச் சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. சரியா சொன்னீங்க.

      Delete
  10. கிராமத்து வாசம் வீசும் அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  11. நாட்டுப்புற பாடல் ரசிக்க வைத்தது! அருமை!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  12. மண்வாசனையோடு பாடல் நன்றாகவுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. /
    சீமத்தொர கணக்காத்தான்
    சிரம் நிமித்தி நடந்திருந்தேன்
    சிருக்கி உன்ன பார்த்துப்புட்டா
    சிரிச்சி பேச மறக்குறேன்டி...

    //

    அழகான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. வணக்கம்
    சகோதரி

    கவிதையில் கிராமத்து மண்வாசணை வீசிது கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. மனதை மயக்கும் கவிதையிலேயே மரிக்கொழுந்து வாஸம் தென்றலாய் வீசுது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  16. அருமையான கவிதை.மரிக்கொழுந்து வாசம் போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  17. மச்சானை மயக்கும் அழகிய ரோசாப்பூ மணம் வீசி நிற்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. புது மொட்டா சிரிப்பவேள
    புதுசப்பூத்த ரோசாவாய் மணக்கும்
    கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. கவிதை அருமை அக்கா...
    அழகான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ.

      Delete
  20. வாசம் மிக்க மலரென மலர்ந்த கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  21. //அழகா பூத்த ரோசாப்பூ//
    //புது மொட்டா சிரிப்பவேள//
    //மரிக்கொழுந்தா வாசம் வீசி//
    //உன்னழக பார்ததிருந்தா
    பூலோகம் இருளுதடி//
    தூய தமிழ் காதல்..இப்படித்தானே யதார்த்தமாய் இருக்கும் நம் ஊர் காதல்..அருமையோ அருமை..மிகவும் ரசித்தேன்! வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
    2. கவிதை மணம் படிப்பவர் மனத்துள்ளும்
      மரிக்கொழுந்தாய்....
      மனம் கவர்ந்த கவிதை
      வாழ்த்துக்கள்

      Delete