Friday 17 May 2013

முந்தா நாள் பார்த்த நிலா !


பொட்டுமிட்டு பூவும் வச்சி
புது மஞ்சள் தானும் தொட்டு
கன்னம் வருடப் போறேன்டி
கண்மணியே வாயேன்டி...

மூக்கில்லி ஆட்டமாட -அழகு
மூக்குத்தியாள காணோமடி
முந்தா நாள் பார்த்த நிலா
முகம் காட்ட மறுக்குதடி...

ரெட்ட சடை பின்னலிப்போ
ராக்கனவா தெரியுதடி
தென்னங்கீத்து ஓட்டையில
தேடி நிக்கேன் பிறை நிலவ- அவளோ
தேவதையா குந்திகிட்டு-எனை
தேய வச்சி பார்த்திருக்கா.



21 comments:

  1. முந்தா நாள் பார்த்த நிலா
    முகம் காட்ட மறுக்குதடி...

    ம்ம் அருமை சசிகலா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. சரளமாக வந்து விழும் வார்த்தைகள்
    கவிதையை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை எனை மிகவும் உற்சாகப்படுத்துகிறது ஐயா. நன்றிங்க ஐயா.

      Delete
  3. அருமையான வர்ணனை! அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. கிராமத்துக் குயிலின் பாட்டு அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. கிராமத்து தேவதயோ நீ
    கானமிடும் குயில்தானோ
    தென்றலை கையிலேந்தி
    தேனுடன்தான் குழைத்து
    சித்திரமாய் வரையும்பாட்டு
    சிந்தையை நிறைக்குதம்மா
    உன்றன் பாகேட்கையிலே
    உள்ளூரஎன்மனமும்
    பின்னோக்கி ஓடியேதான்
    பிறந்தவூரை நினக்குதம்மா...

    ஒன்றைவிட ஒன்று மிஞ்சிநிற்கின்றது உங்கள் பாக்கள் தோழி!
    வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் வாரி வழங்குங்கள்!

    த ம . 5

    ReplyDelete
    Replies
    1. அகமகிழ்ந்தேன் தோழி.

      Delete
  7. முந்தா நாள் பார்த்த நிலா
    முகம் காட்ட மறுக்குதடி...
    பொட்டுமிட்டு பூவும் வச்சி
    புது மஞ்சள் தானும் தொட்டு
    வைத்த நிலவு சொக்கவைக்கிறது ..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றிங்க.

      Delete
  8. தென்னங்கீத்து ஓட்டையில
    தேடி நிக்கேன் பிறை நிலவ- //
    ஆஹா! அழகு.
    சசிகலா உங்கள் முந்தாநாள் பார்த்தநிலா அழகு,
    பாட்டில் மயங்கி இளமதி பாடும் பாடலும் அருமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இளமதி வரிகளில் நானும் மயங்கினேன்.

      Delete
  9. முந்தாநாள் பார்த்த நிலா முகங்காட்ட மறுக்குதடி - வரிகளே கட்டிப் போட்டுவிட்டன மனசை. அருமை தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மின்னல்...

      Delete
  10. நாட்டுப்புறக் கவிதை அப்படியே நெஞ்சை அள்ளுகிறது. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றிங்க.

      Delete