Wednesday 22 May 2013

பெயர் சூட்டு விழா !


சுயசிந்தனை அறவே முடக்கி
சம்பிரதாய சடங்கில் மூழ்கி
ஏச்சிப்பிழைப்பவன்  சாமியார் .

மூளைக்கு விலங்கிட்டு
முயற்சி தனை முடமாக்கி
வாழ்பவன் சோம்பேறி.

தன்னிலையும் உணராது
முன்னுக்குப் பின் முரணாகி
முன்கோபியாய் திரிந்து
அடக்க வருபவரை மூடன் 
எனும் முட்டாள்.

தேன் சேர்க்கும் 
இனத்தினையும் அழிப்பான்...
உடலுக்கு தேவையில்லா 
பானத்தையும் குடிப்பான்
குடிகாரன்.

உற்றவர் பெற்றவர் மறந்து
உடமைகள் பலவும் இழந்து
கொண்டவளையும் பணயமாக்கும்
சூதாட்டாக்காரன்.

ஈன்றவளும் பெண்ணென்பதை 
மறந்து இச்சைக்காய் 
மலர்களைத்  தீய்க்கும் காமுகன்.

எத்தனை எத்தனை பெயர்கள்
ஏன் இந்த தீமை தரும் செயல்கள்
உணர்ந்து திருந்த சட்டம் வைத்தார்
அதையும் உலையில் போட்டே
உழன்று திரியும்...மானுடரை என்ன சொல்ல.

வென்றதை தின்று மாய்ந்து
வெகுளியாய் உள்ளம் கொண்டு
காண்பவர் முகமதிலே காட்சியாய்
சிரிப்பைக் காண சிரித்துப் போகும் 
மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.
இவர்களால் பைத்தியம் என
பெயர் சூட்டப்பட்டவர்கள்.

16 comments:

  1. சுயவறிவு சுருங்கும் மாந்தர் உலகில்
    தவறிடுவர் வாழ்வை தாழ்ந்து

    ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டே இருக்கணும் ஆனால் அதுவும் நல்ல்வழியாய் இருக்கணும்

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தேடினால் இன்னும் பட்டியல் நீளும்!தென்றல்!

    ReplyDelete
  3. // உணர்ந்து திருந்த சட்டம் வைத்தார்
    அதையும் உலையில் போட்டே
    உழன்று திரியும்...மானுடரை என்ன சொல்ல. //

    சட்டத்தைக் கண்டு இவர்கள் பயப்படுவதில்லை! சட்டம்தான் இவர்களால் வளைக்கப்படுகிறது.

    ReplyDelete
  4. வேதனைகள் தரும் ”பெயர் சூட்டு விழா ! நல்லதொரு ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நல்லவே பெயர் சூட்டிருக்கீங்க சசிகலா!உன்மைதான்

    ReplyDelete
  6. ஆதங்கமான சிந்தனை தோழி!
    தொடர வாழ்த்துக்கள்!...

    பெயர் சூட்டினாலும் பெறுவரோ உணர்வினை
    அவர் தேட்டமவருக்கே அப்போது திருந்துவார்
    துயர் பலதருகின்றார் துன்பமே விதைக்கின்றார்
    உயர் சிந்தைதன்னோடு உரைத்தாய் உண்மையே...


    த ம. 5

    ReplyDelete
  7. சரியாக பெயர் சூட்டி உள்ளீர்கள்... இன்னும் சூட்டப்பட வேண்டியவர்கள் பலர் உண்டு...

    வாழ்த்துக்கள் சகோதரி...
    ™6

    ReplyDelete
  8. அருமையான கவிதை
    நிகழ்காலத்தில் வாழாத எப்போதும்
    ஏதோ ஒரு காலத்தில் வாழும் உம்
    அவர்களும் நிச்சயம் சித்தர்கள் போலத்தான்
    மனம் தொட்ட கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையான கவிதை பாராட்டுக்கள்,
    //உணர்ந்து திருந்த சட்டம் வைத்தார்
    அதையும் உலையில் போட்டே உழன்று திரியும்...மானுடரை என்ன சொல்ல //
    நாகரிகம்(civilized) என்பது உடுத்திற உடையும், பயன்படுத்துகிற பொருளும் மட்டுமே தீர்மானிக்கும் காரணி என நம்பும் மக்கள் இருக்கும் வரை இது தொடரும்.

    ReplyDelete
  10. வென்றதை தின்று மாய்ந்து
    வெகுளியாய் உள்ளம் கொண்டு
    காண்பவர் முகமதிலே காட்சியாய்
    சிரிப்பைக் காண சிரித்துப் போகும்
    மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.//என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்

    ReplyDelete
  11. வென்றதை தின்று மாய்ந்து
    வெகுளியாய் உள்ளம் கொண்டு
    காண்பவர் முகமதிலே காட்சியாய்
    சிரிப்பைக் காண சிரித்துப் போகும்
    மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.
    இவர்களால் பைத்தியம் என
    பெயர் சூட்டப்பட்டவர்கள்.//

    உண்மைதான் சசிகலா நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  12. சூட்டிக் கொண்டேபோகலாம்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. உலகில் இன்னும் எவ்வளவோ பெயர் சூட்டப்பட வேண்டிய நபர்கள் இருக்கிறார்கள்...

    நன்றி...

    ReplyDelete

  14. ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கும் ஏதாவது பெயர் சூட்டப்பட்டிருக்கும். பைத்தியம் என்ற பெயரே மேலோ.?

    ReplyDelete