Friday 31 May 2013

ஒரு ஜென்மம் போதாதே ! (உண்மைச் சம்பவம் )

தினம் தினம் காத்திருந்தேன்
திரும்பிய திசையெலாம் 
முகம் பார்த்திருந்தேன்...

இன்று நாளை என்று நானும்
நாட்களை எண்ணி வந்தேன்
வருவாய் வசந்தம் தருவாய்
என்றே காத்திருந்தேன்.

மகன் முகம் பார்த்தில்லை
மகளின் குழந்தையை தாலாட்டியதில்லை
அனுப்பி வைத்த பணத்தினிலே
அடுக்குமாடி சிரித்திருக்கு..

அன்பாய் வருடும் தென்னங்காற்றும்
உன் வரவை பார்த்திருக்கு..
உன் மடியில் தலைசாய்த்து
உணர்வையெலாம் கொட்டி அழ
ஒரு ஜென்மம் போதாதே...
ஓடோடி வா என்னவனே.

தூரெடுத்த கிணற்றைப்போல
ஊற்றெடுக்கும் உந்தன் எண்ணச்சுமை
கன்னிவெடி வெச்சது போல்
கலங்கிடுதே கண்களிரண்டும்.

உன் முகம் பார்த்துவிட்டால் 
பறந்திடுமே எந்தன் சோகம்
சீமைக்கு போன மன்னவனே
வந்தாயே உயிரற்ற சிலையாக.

தோழியின் கணவர் வெளிநாட்டில் இருந்தார். திடீரென இறந்துவிட்டார். அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும்.

24 comments:

  1. மிகவும் வருத்தம்....பணத்திற்காக பயணித்து இதயத்தை கீறிடும் இரத்த வேதனை அல்லவா அந்த பெண்ணிற்கு.

    ReplyDelete
  2. வருத்தப்படும் சம்பவம்...

    ReplyDelete
  3. மிகவும் கொடுமையான விஷயம் தான். வருத்தமாக உள்ளது. ;( சூழ்நிலைக்குத்தக்கவாறு பாடல் நன்கு எழுதப்பட்டுள்ளது..

    ReplyDelete
  4. வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  5. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது...மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது...

    ReplyDelete
  6. வாக்கியங்களை வாசிக்கும் போதே மனது சங்கடப் படுகிறது. அனுபவித்தவர்களுக்கு எப்படியிருக்கும் :(
    என் ஆழ்ந்த அனுதாபங்கள் தோழிக்கு

    ReplyDelete
  7. வருமானம் தேடப்போய் வலிவாங்கிய வாழ்வாச்சு...:’(

    என் ஆழ்ந்த அனுதாபங்களும் உங்கள் தோழிக்கு...
    உங்கள் கவி கண்ணீரைத்தருகிறது...

    ReplyDelete

  8. வணக்கம்!

    உன்றன் கவிபடித்து என்றன் உளமுருகும்!
    இன்றென் இதயம் இடிந்து!

    தமிழ்மணம் 5

    கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. கொடுமை! இன்னொரு பெண் வெளிநாட்டில் இறந்த தன கணவனின் உடலை வாங்கவே போராடும் செய்தியொன்றும் படித்தேன்.

    ReplyDelete
  10. ஒரு ‌ஜென்மம் போதாது! வார்த்தையே கலங்க வெச்சிடுச்சு தென்றல். நீங்க சொல்லியிருக்கற விஷயமும் மனசை அசைச்சுடுச்சு. அப்பெண்ணுக்கு ஆறுதல் தர வார்த்தைகளில்லை!

    ReplyDelete

  11. தூரெடுத்த கிணற்றைப்போல
    ஊற்றெடுக்கும் உந்தன் எண்ணச்சுமை
    கன்னிவெடி வெச்சது போல்
    கலங்கிடுதே கண்களிரண்டும்./

    என் கண்களும்
    மனத்தைக் கலக்கிய கவிதை


    /

    ReplyDelete
  12. வருத்தமாய் உள்ளது.தா-ம. 7

    ReplyDelete
  13. அடடா.... வருத்தம் தந்த கவிதை. உங்கள் தோழிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்......

    ReplyDelete
  14. அனுப்பி வைத்த பணத்தினிலே
    அடுக்குமாடி சிரித்திருக்கு..//

    படிக்கவே மனது வருந்துகிறது.
    பணம் சம்பாதிக்க போய் உயிரற்ற சிலையாக வருவது குடும்பத்தினர் எல்லோருக்கும் வேதனை அளிக்கும்.
    உங்கள் தோழிக்கு ஆறுதலை இறைவன் அருள வேண்டும்.

    ReplyDelete
  15. Very sorry to know Mrs. Sasikala that your friend lost her husband! :-(

    ReplyDelete
  16. பாவம்தான்.., நீதான் அருகிலிருந்து ஆறுதல் சொல்லி தேற்றனும். அவளின் பிள்ளைங்க முகம் காட்டி உற்சாகப்படுத்தனும். சிறு வயசா இருந்தா மறுமணம் செய்துக்க மனசை மாற்றனும். உடலுக்காக அல்ல.., மனதுக்காகவும், பிள்ளைங்க எதிர்காலத்திற்காகவும் மட்டுமே!

    ReplyDelete
  17. எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தங்கள் தோழிக்கு

    ReplyDelete
  18. ஆ! இருபது நொடிகள் இதைப் படித்த எனக்கே இப்படி வலிக்கிறதே, நீங்கள் எப்படித் துடிப்பீர்கள்! உங்கள் தோழியின் வலியை விளக்கவும் முடியுமா!
    ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  19. மனதை நெகிழச் செய்த கவிதை...என்னுடைய அனுதாபங்கள்...

    ReplyDelete
  20. மகன் முகம் பார்த்தில்லை
    மகளின் குழந்தையை தாலாட்டியதில்லை
    அனுப்பி வைத்த பணத்தினிலே
    அடுக்குமாடி சிரித்திருக்கு..

    அழுகை பிறந்திருக்கே..!

    ஆற்றாத சோகம் ...!

    ReplyDelete
  21. மனதை கனக்க வைத்த கவிதை !

    ReplyDelete