Saturday 25 February 2012

காந்தியின் கனவும் பொய்யாய் போனதடி


ஆரோக்கியம் சமையலில் மட்டுமல்ல
ஆடையிலும் இல்லாமலே போனது
பேறு காலத்தின் போது
பிறந்த குழந்தைக்கும்
பின்னர்
கோடித் துணிக்கும்  மட்டுமே
தேடப் படுகிறது நூற்  துணிகள் .....!
கூட்டுப்  புழுவாய்
வாழ்வைத் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
நூலாய் விரிந்து
அது நெசவாளரின் வாழ்வாய் மாறி ...

கஞ்சியில் நீராட்டி 
தெருவில் பாகிட்டு
தட்டி சிக்கெடுத்து ..
பாகில் கோர்க்கின்ற அழகைக் காணோமடி
கால்கள் நடன மாட
தறி நாடாவோடு கைகள் பேச
ஆடவர் பெண்டிர் இணைந்துழைத்து
அழகாய் உருபெறும்
வண்ண ஆடை அழகை
பட்டாம்  பூச்சி வேடம் பூண்டு
பறந்து திரியும் மானிடர் கூட்டம்
அறியார் இந்த வேதனையை
அவர் கணக்கில் இதுவெல்லாம்
நாகரீக மாற்றம் மட்டும் தானே
கரித்துடைக்கப் போகின்ற துணியின்
கடைசி வாழ்வு போல்
இவர் வாழ்வும் கரியாகிப் போதல் முறையோ ..?
காந்தியின் கனவும்
பொய்யாய் போனதடி
திரும்பி பார்க்க வேண்டும் .
பார்ப்பீர்களா....?

48 comments:

  1. அனைத்தும் மெஷின் மயமானதில் பாதிக்கப்பட்டவர்களில் நெசவாளர்கள் அதிகம். நிச்சயம் திரும்பிப் பார்க்க வேண்டும் தென்றலே... நான் இதுவரை இந்நிலை பற்றி யோசித்ததில்லை என்பதால் சற்றே வெட்கத்துடன் இதைச் சொல்கிறேன். நற்சிந்தனையை விதைத்தற்கு நன்றி.

    ReplyDelete
  2. அரசு மட்டும்தான் தற்போது இந்த நூற்துணிகளை இலவசமாக கெர்டுத்துக் கொண்டு வருகிறது...

    அதுவும் இல்லையென்றால் நூற்துணிகளை மக்கள் எப்போதோ மறந்திருப்பார்கள்....


    நல்லதொரு கவிதை....

    ReplyDelete
  3. நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை கண்டீரென
    செய்யும் தொழிலின்று சீர் கெட்டுப் போனதனை
    செப்பினீர்! கவிதை சிறப்பே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அழகான கவிதை
    இன்னும் எங்கள் ஊரில் இந்த நெசவு தொழில் தொடர்கிறது நீங்கள் கவிதையின் ஊடாக சொன்னதை கண்கூடாக பார்த்தது போல் இருக்கிறது

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  5. நலிவு பெறும் நிலையில் உள்ள தொழிலை ஞாபகமூட்டியுள்ளீர்கள். அரசும் மக்களும் மனது வைக்கவேண்டும்.

    ReplyDelete
  6. வணக்கம்!
    ” சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி! நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி ” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தால் கொண்டாடப்பட்ட நெசவுத் தொழிலின் இன்றைய நிலைமையை கண்ணீர் நினைவுகளாய் சுமந்து குமைந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. நெசவின் பெருமையை கவில் கூறியுள்ளீர்கள் மிக அருமை.அக்கா நான் உங்களுக்கு வெர்சாடடைல் விருதை பரிந்துரைத்து கொடுக்கிறேன் பெற்று கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. கணேஷ்..
    மனிதர்களின் நாகரீக மோகத்தில் நலிவு பெற்றது இன்னும் பல வசந்தமே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. கவிதை வீதி... // சௌந்தர் //
    அவர்களே அதிலும் கலப்படம் உண்டு . அது சுத்தமான நூற் துணி அல்லவே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. புலவர் சா இராமாநுசம்
    ஐயா வருக வணக்கம் தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. ஹைதர் அலி ....
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. விச்சு ..
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. தி.தமிழ் இளங்கோ
    அந்த பாடல் கேட்பதிலே எத்தனை ஆனந்தம் . அதுபோல் இல்லையே அவர்கள் வாழ்வு .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. Esther sabi ..
    வருக தங்கையே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  15. அருமையான கவிதை, நான் பல வருடங்களுக்கு முன் என் நண்பனின் ஊரான ராஜபாளையம் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன். அந்த ஊரே நெசவுத் தொழிலில் தான் இருந்தது. இன்று அந்த ஊரில் யாரும் நெசவு நெய்வது இல்லை, இளைஞர்கள் அனைவரும் வேலைத்தேடி வெளியூர் சென்று விட்டார்கள். சமீப காலத்திற்கு முன் அந்த ஊருக்கு சென்ற போது மனது வலித்தது. நன்றி சசிகலா அவர்களே.

    ReplyDelete
  16. ஆரூர் மூனா செந்தில் ..
    அவர்களே வருக எங்கள் ஊரிலும் அதே நிலைமை தாங்க . அதைவிட கொடுமை எங்க ஊருக்கு நாங்க போன யார் நீங்க என்று விசாரிக்கும் புது முகங்கள் . என்ன செய்வது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. வார்த்தைகளை நெய்து நெசவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வருத்தும் செய்தியைச் சொல்லும் அழகு கவிதை

    ReplyDelete
  19. மொத்தத்தில் தொழிலாளிகளுக்கு
    வாழ்வு நலிந்து வருகிறது . ஆனால் பட்டு நெசவு எப்படி சென்று
    கொண்டிருக்குது எனத் தெரியவில்லை. அதற்கு மட்டும் தேவை அதிகம் இருக்குமே ....
    கவிதைக்கும் , வெர்சாடில் விருதிற்கும் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  20. நானும் கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்தி வருகிறேன். அனைவரும் விரும்பி அணிந்தால் இப்பிரச்சினை தீரும். எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. இதயங்களும் எந்திரங்களாகிவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. எப்போதோ படித்த ஒரு ஹைக்கூ கவிதை ஞாபகத்துக்கு வருகிறது. எழுதியவர் பெயர் நினைவிலில்லை.

    ஹைக்கூ :

    ஆடைநெய்து விற்கப் புறப்பட்டான்
    நெசவாளி தடுத்தது அவனின்
    கிழிந்த வேட்டி.

    ReplyDelete
  21. அப்புறம் சகோ. ஒரு கவிதைக்கு ஒரு லேபிளா? லோடு தாங்குமா? லேபிளை சுருக்கமாகவும் அதற்குள்ளே கவிதைகளை ரகம் வாரியாகவும் பிரித்துப் போடாலாமே?! சும்மா ஒரு ஐடியாதான். மற்றபடி நீங்கள் எதனால் இப்படி செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த லேபிள், அலங்காரம் எல்லாமே சும்மா மேக்கப்தான். சரக்கு இருந்தாதான் வியாபாரம் நடக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. நன்றி!

    ReplyDelete
  22. படங்களுடன் அவர்களின் வாழ்வின் அவல நிலையை
    மிக அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மதுமதி..
    நாம் வார்த்தைகளை நெய்கிறோம் . அவர்களின் வாழ்வு செழிக்க வழி இல்லையே . தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  24. "என் ராஜபாட்டை"- ராஜா
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. சென்னை பித்தன்
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. ஸ்ரவாணி ..
    அவர்களே பட்டுத் துணியை நாம் தினமும் பயன்படுத்த முடியாதல்லவா . ஆரோக்கிய உடை நெசவு மூலமே கிடைக்கும் அல்லவா...தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  27. துரைடேனியல்.....
    தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . அவரவர் ஆரோக்கியத்தையும் நம் நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியும் மக்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் .
    கவிதை பகிர்வு மட்டுமே எனக்கு தெரிந்தது . மற்றவை என் சகோதரரின் ஆக்கம் . தங்கள் கருத்தை சொல்கிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. ramani
    ஐயா தங்கள் தொடர் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. //காந்தியின் கனவும்
    பொய்யாய் போனதடி
    திரும்பி பார்க்க வேண்டும் .
    பார்ப்பீர்களா....?//
    நிச்சயம் காந்தியின் கனவு பொய்க்காது. காலம் ஒரு நாள் மாறும்.அவர்கள் கவலைகள் யாவும் தீரும் என நம்புவோம். நெஞ்சைத் தொட்ட கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. எப்போதும் சமூகத்தோடு ஒன்றியிருக்கிறது உங்கள் பார்வை சகோதரி.சமூகம் தூரப் போய்க்கொண்டே இருக்கிறதே !

    ReplyDelete
  31. வே.நடனசபாபதி..
    தங்கள் பின்னூட்டம் மனதிற்கு இதமளித்தது .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. Seeni..
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. ஹேமா..
    ஓடுவதை துரத்துவதும் துரத்தி பிடிப்பதுவே நம் தேடல் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. மகி மகேந்திரன் ..
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ''...காந்தியின் கனவும்
    பொய்யாய் போனதடி
    திரும்பி பார்க்க வேண்டும் .
    பார்ப்பீர்களா....?''
    நல்ல சிந்தனை சகோதரி...கனவுகள் மெய்க்கட்டும். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. நல்ல கவிதை தோழி

    ReplyDelete
  37. அருமையான வார்த்தை அக்கா

    ReplyDelete
  38. தோழி உன் ராதா

    ReplyDelete
  39. கவிதை ;வெற்றிபெற
    சசிஅக்கா மீண்டும் மீண்டும் வெற்றிபெற வாழ்த்து

    ReplyDelete
  40. மதிய வணக்கம் அக்கா

    ReplyDelete
  41. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete