Tuesday 21 February 2012

பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு

“பூப் போன்ற கனவேந்தி,
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து  கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
 விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!

 சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
 பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
 எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
 வாழவிட்டால் அதுபோதும் !

14 comments:

  1. பெண்மையை மதித்துப் போற்றுவோர் சிலருண்டு தென்றலே. அனைவரும் உணரும் நாளில் இந்நிலைக்கு விடிவு வரும். மனந் தளராதீர். அழகிய தமிழ் நடை கவிதையில் களிநடமிடுவதை ரசித்து வாழ்த்துகிறேன் உம்மை.

    ReplyDelete
  2. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !
    http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


    Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !
    http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


    மெமரி Card Data Recovery Software !
    http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

    ReplyDelete
  3. சிலைகிருக்கும் மரியாதை,
    உயிர்க்கு இங்கே இல்லையடா!
    சிந்தித்தால் மரணமொன்றே,
    இல்லார்க்கு சொர்கமடா!!
    வழியுமில்லை ஒளியுமில்லை,
    பெண்ஜென்மம் பாவமடா!
    விடியல்பேசும் வித்தகரே,
    எதுவும் தேவையில்லை,
    நிம்மதி தேடுகிறோம்,
    வாழவிட்டால் அதுபோதும் !

    கோபவேகம் அருமை.இன்னும் நிறைய கோபம் வேண்டும்.அப்போது தான் சுதந்திரம் வரும்.

    அருமைக்கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //நிம்மதி தேடுகிறோம்,
    வாழவிட்டால் அதுபோதும் !//
    நம் உண்மைநிலை இதுதான்....
    அழகாக எழுதியுள்ளீர்கள், சசி.....

    ReplyDelete
  5. இந்த அவலங்கில் இருந்து பெண் உலகம் விரைவில் விடியல்வரும் என்று நம்புவோம்...

    ReplyDelete
  6. கணேஷ்..
    வருக வசந்தமே ... சிலரை பலராக்கும் முயற்சி இது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  7. DhanaSekaran .S
    பெண்களின் கோபம் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லையே . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  8. அகிலா ..
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  9. கவிதை வீதி... // சௌந்தர் //
    விடியலை நோக்கியே காத்திருக்கிறோம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. வறுமையின் அவலத்தைக் காட்டமாகக் காட்டியவிதம் மனம் கனக்கச்செய்கிறது.

    ReplyDelete
  11. சசி ,
    மேலோட்டமாகப் பார்த்தால் முன்பை விட நிலைமை
    பரவாயில்லை. ஆனால் நகரம் , கிராமம் என்று வித்யாசம் இல்லாமல்
    எங்குமே மறைமுகமாக சுரண்டப்படுகிறோம் என்பதே உண்மை.
    நல்ல கவிதை தோழி.

    ReplyDelete
  12. கீதமஞ்சரி..
    இன்னமும் வறுமை பெருகிக்கொண்டுதானே இருக்கிறது சகோ . தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  13. ஸ்ரவாணி ...
    தங்கள் கருத்து உண்மையே சகோ . மேடைப் பேச்சிற்கு மட்டுமே பெண் சுதந்திரம் சம உரிமை பேசப் படுகிறது . என்ன செய்வது ..?

    ReplyDelete
  14. kalangivitten!
    sokamaana vari!
    aankal verka padavendiya vari!

    ReplyDelete