Monday 20 February 2012

ஆதிமுதல் அந்தம்வரை..?

        பாடல்: பணம் பந்தியிலே.
        திரைப்படம்: பணம் பந்தியிலே.
        பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
        இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
        இசை: கே.வி. மஹாதேவன்
        ஆண்டு: 1961

        “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே
        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
        உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
        ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
        உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
        என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
        என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
        எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
        அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
        ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
        ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
        எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே

        உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
        உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
        மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
        மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
        முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
        பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
        பிழைக்கும் மனிதனில்லே
        பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

        எத்தனை எத்தனை உண்மைகளையும் . அனுபவங்களையும் கூறும் பாடல் வரிகள் ………..
        பண்ட மாற்று முறையில் தொடங்கி ஆரம்பித்த பண வியாபாரம் .
        தங்கம் , வெள்ளி , செம்பு,காசு வடிவம் பெற்று , மன்னர் காலம் , மக்களாட்சி என்று மாறி இப்போது வெள்ளைக் காகிதங்களாய்!!!
        அரசன் காலத்தில் பொருட்கள் வாங்க,சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட பணம் , ஜனநாயகத்தையே விலைபேசும் நிலையல் இன்று! ஜனநாயகமே பணத்திற்கு விற்கப்படுகிறது .
        உழைப்பவனுக்கு வியர்வை மட்டுமே சொத்தாகிறது . பணம் எந்நாளும் அவன் காணும் கனவுமட்டுமே!
        இல்லாதவரை பாடு படுத்தும் .
        இருக்கின்றவர் கையில் பாடுபடும் .உலகநீதிஇதுதானோ!!
        ஏழைகளுக்கோ என்றுமே எட்டாத தூரத்தில்?
        பணமிருந்தால் இறைவனும் கூட பாவமன்னிப்பு வழங்கி விடுவான் என்று காணிக்கை செலுத்தும் பொய்நம்பிக்கை!
        திருடிய பணத்தில் தசம் பாகம் காணிக்கையாக செலுத்தி பாவமன்னிப்புக்காய்.அலையும் மனங்கள்.
        மக்களாட்சி தத்துவத்தை விலைக்கு வாங்க சதிராடும் அரசியல்.
        கற்பையும் விலைபேசி, தன் அழகு விற்று,மாடமாளிகை வாழ்வுதேடி பணம் சேர்க்கும் மாயமான் கூட்டம் .
        தன் நிலை மறந்து வாழ போதைக்கு அடிமையாகி,பாதையைத் தொலைத்துவிட்டு வாழ்வை நரகமாக்கி அழும் பரிதாபம். மதுவும்,புகையும் பகை, நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்று எழுதி வைத்து பணம் பார்க்கும் ஆட்சித்தத்துவங்கள்.
        நிழலையே நிஜம் என்று சினிமாவை வாழ்வென்று விற்பனை செய்து உச்சியிலே வாழும் சுகஜீவிகள்.
        பணமிருந்தால் பெற்ற தாயையும் வாங்கி விடலாம் என பேசி,உறவையும் விற்கும் மாபாதகர்கள்.
        வாழ்விற்கும் இது முதலாளி! .
        பாவத்திற்கும் இது முதலாளி!!
        பாவிக்கும் இதுவே முதலாளி!!!
        மன்னர் காலத்தில் கல்லணைகள், பெயர் நிலைக்க வானுயர்ந்தகோவில் , கலைச்சிற்பங்கள் , மக்கள் நலத்திட்டங்கள் என ஆக்க வேலைகளுக்காய் பயன்படுத்தப் பட்ட பணம், .
        இன்று சுயநலத்திற்காய்,அழிவுக்காய்,பயன்படுத்தப்படும் அவலம்! பெற்ற தாய் தந்தையை வீதிகளிலும் , பிள்ளைகளை காப்பகத்திலும் அனுப்பிவிட்டு , உறவுகளை தூக்கிஎறிந்தும்,காணிநிலத்துக்காய் நீதிமன்றத்தின் படியேறி,இறுதியில் கூலிப்படை அமர்த்தி உயிரெடுக்கும் அவல நிலை பணத்தால் அரங்கேற்ற பட்டுக்கொண்டிருக்கிறது.
        பணம் மட்டுமே வாழ்வில்லை! பணமின்றியும் வாழ்வில்லை!!ஆதிமுதல் அந்தம்வரை,கருவரை தொடங்கி,கல்லரைவரை ஆட்சிசெய்யும் பணத்தின் ஆதிக்கம் ஒழிக்க,ஏற்ற தாழ்வுகள் நீங்கி சமதர்மம் பிறக்க,அன்புடன் கூடிய வாழ்வுவேண்டும். அன்பு வாழ்கிறதா?உண்மை அன்பு ஒன்றே பணத்தை வெல்லும் ‘மாசக்தி’

41 comments:

  1. வாழ்க்கையின் உண்மையை சொல்லும் அர்த்தமுள்ள பாடலுக்கு...

    தங்களின் அழகிய விவரிப்பு...

    இன்னும் பணம் தான் மணிதனை அசைத்துக் கொண்டிருக்கிறது...


    நல்லதொரு பதிவு...

    ReplyDelete
  2. கவிதை வீதி... // சௌந்தர்
    அவர்களே உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . அன்பால் அசைய மறுத்து ... பணத்தால் எதையும் வாங்கும் அவலம் . என்ன செய்வது ....?

    ReplyDelete
  3. அருமையான கருத்துமிக்க பாடல் .. இப்போ இது போல எங்கே வருது

    ReplyDelete
  4. "என் ராஜபாட்டை"- ராஜா
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  5. காசு இல்லாவிட்டால் நாம் செல்லாக்காசு தான் ....
    சிலருக்குக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்
    பலருக்கு காற்றிலும் , மழையிலும் கூரை பிய்த்துக் கொண்டு கொல்லும் ..
    அளவோடு இருந்தால் நாம் அதை ஆள்வோம்...
    அளவின்றி இருந்தால் அது நம்மை ஆளும் ....
    இப்படி எல்லாம் சொல்லிப் பார்க்கலாம் ,
    கவிதை எழுதிப் பார்க்கலாம் ..
    வாங்க ,நம் பிழைப்பைக் கவனித்து நாலு காசு தேடுவோம் ...
    அருமைத் தோழி.

    ReplyDelete
  6. பணம் ஒரு நாய். தீனி போடுகிறவரை காலைச்சுற்றி வரும். பட்டினி போட்டால் எஜமானையே குதறும். புதுமையான முயற்சி. அருமையான மனம் கவர்ந்த பதிவு சகோ.

    ReplyDelete
  7. ஸ்ரவாணி..
    அளவோடு இருந்தால் நாம் அதை ஆள்வோம்...
    அளவின்றி இருந்தால் அது நம்மை ஆளும் ...
    தாங்கள் சொல்வதும் உண்மையே தோழி . எதுவும் அளவோடு இருத்தல் வேண்டும் .

    ReplyDelete
  8. துரைடேனியல் ..
    அவர்களே நன்றி உள்ள விலங்கோடு ஒப்பிட முடியுமா ..? தெரியவில்லை . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  9. வணக்கம்! பழைய திரைப்பட பாடல்கள் அன்றும் இன்றும், பொங்கும் பூம்புனலாய் மனதில் நிற்பவை. பணம் பந்தியிலே பாடலுக்கு உரையாசிரியர் போல நல்ல விளக்கம்.

    ReplyDelete
  10. ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளம்மா... நிறைய இருந்தா அதை நாம காப்பாத்தணும், நிறைவா இருந்தா அது நம்மைக் காப்பாத்தும். என்னைப் பொறுத்தவரை கடன் இல்லாம வாழறதால நான் பணக்காரன்னு தான் நினைக்கறேன். சரிதானா சசிகலா? (அட, சிறுகதைக்கு தலைப்பா வைக்கலாம் போலருக்கே!)

    ReplyDelete
  11. உழைப்பவனுக்கு வியர்வை மட்டுமே சொத்தாகிறது . பணம் எந்நாளும் அவன் காணும் கனவுமட்டுமே!
    எனக்குப் பிடித்த வரிகள் அக்கா

    ReplyDelete
  12. இன்று சுயநலத்திற்காய்,அழிவுக்காய்,பயன்படுத்தப்படும் அவலம்! பெற்ற தாய் தந்தையை வீதிகளிலும் , பிள்ளைகளை காப்பகத்திலும் அனுப்பிவிட்டு , உறவுகளை தூக்கிஎறிந்தும்,காணிநிலத்துக்காய் நீதிமன்றத்தின் படியேறி,இறுதியில் கூலிப்படை அமர்த்தி உயிரெடுக்கும் அவல நிலை பணத்தால் அரங்கேற்ற பட்டுக்கொண்டிருக்கிறது.

    சரியாகச் சொன்னீர்கள்..பாராட்டுகள்..வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பணம் மட்டுமே வாழ்வில்லை! பணமின்றியும் வாழ்வில்லை!!ஆதிமுதல் அந்தம்வரை,கருவரை தொடங்கி,கல்லரைவரை ஆட்சிசெய்யும் பணத்தின் ஆதிக்கம் ஒழிக்க,ஏற்ற தாழ்வுகள் நீங்கி சமதர்மம் பிறக்க,அன்புடன் கூடிய வாழ்வுவேண்டும். அன்பு வாழ்கிறதா?உண்மை அன்பு ஒன்றே பணத்தை வெல்லும் ‘மாசக்தி’//


    அருமையான பாடலைக் கொடுத்து
    அதற்கு மிக அருமையான விளக்கமும் கொடுத்து
    அசத்திவிட்டீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தி.தமிழ் இளங்கோ ..
    அவர்களே வருக தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  16. கணேஷ் ..
    வருக வசந்தமே நிறைவான மனசு இருக்கிற எல்லாருமே வசதியானவங்க தாங்க . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. Esther sabi..
    அக்கா தங்கைகள் என்றால் அடித்துக்கொள்வார்கலாம்.
    இங்கு வரிகளை ரசிக்கும் அன்புத் தங்கை வாழ்க வளமுடன் . முடிந்தால் தங்கள் வலை முகவரியை அனுப்பவும் .

    ReplyDelete
  18. மதுமதி ..
    அவர்களே தங்கள் தொடர் வருகையும் . வாழ்த்துரையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. Rathnavel Natarajan ..
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. ரமணி ஐயா...
    தங்கள் வருகை தென்றலுக்கு என்றென்றும் வசந்தத்தின் வளர்பிறையை என்னுள் உணர்த்துகிறது . தங்கள் " தொடர வாழ்த்துக்கள்" எனும் வாக்கியம் எனது ஒவ்வொரு பதிவிலும் காண்கிறேன் . மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. பணம்தான் பிரதானம் என்ற நம்பிக்கை மாறவேண்டும். நல்ல பதிவு.

    ReplyDelete
  22. ‘பொருள்’பற்றி பொருள் பொதிந்த திரைப்பட பாடலை வெளியிட்டு,நமது திரைப்பட உலகமும் இது போன்ற நல்ல பாடல்களை ஒரு காலத்தில் கொண்டிருந்தது என்பதை சொன்னதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

    ‘பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
    மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
    பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்’

    என்ற பாடலும் கூட இதைத்தான் சொல்கிறது.
    என்றைக்கு பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை மாறுகிறதோ, அன்று தான் அன்புடன் கூடிய வாழ்வு கிட்டும்.நல்ல பதிவு.

    ReplyDelete
  23. விச்சு ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. கவி அழகன்
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. வே.நடனசபாபதி ..
    மாறும் என்ற நம்பிக்கையுடன் நகர்த்துகிறோம் வாழ்க்கையை . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. கருத்தாழமிக்க பாடலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி

    ReplyDelete
  27. உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
    உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
    முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

    மனதில் பதிந்த வரிகள்..

    ReplyDelete
  28. ராஜி ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. guna thamizh..
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. அலையல்ல சுனாமி,,,,,திரு விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்,நீங்கள் அதை 5 பேருக்கு பரிந்துரைக்கவும்.

    ReplyDelete
  31. பணம் என்றதுமே
    திரு. கலைவாணர் அவர்களின் பாடல்
    தான் நினைவுக்கு வருகிறது...

    ஜனனம் முதல் மரணம் வரை
    தொடரும் ஜாலம்!

    மனிதனை பேயெனச் செய்யும்
    மந்திர மார்க்கம்!

    ReplyDelete
  32. பணம் பற்றி , படுத்தும் பாடு பற்றிய தங்கள் விளக்கங்கள் அருமை. பாடலும் உச்சமான பாடல். மிக லேட்டாக வந்துள்ளேன். நல் வாழ்த்தகளைக் கூறுகிறேன் சகோதரி. பயணம் தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  33. பணம் அளவோடு இருந்தால் வாழ்வு நின்மதி.பழைய பாடல்களுக்குள் பிடித்தமான தத்துவப் பாடல்.நன்றி சசி !

    ReplyDelete
  34. நல்ல பதிவு!
    பணம் குறித்து நான் எழுதிய கவிதை
    http://www.esseshadri.blogspot.in/2011/12/blog-post_09.html
    என்னுடைய வலைப்பூவில்!
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  35. அருமையான பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  36. எப்போதோ சொன்ன பாடல்
    இணையிலா வெண்திரை ஆடல்
    இப்போதும் பொருந்தும் வகையில்
    எடுத்துநீர் இயம்பிய நிலையில்
    தப்பேதும் இல்லா ஒன்றே
    தந்தீராம் சிறப்பாய் நன்றே!
    முப்போதும் நெஞ்சில் கொண்டே
    முறைப்படி வாழ்வார் உண்டே!

    சா இராமாநுசம்

    ReplyDelete