Friday 17 February 2012

காட்டுப் பூக்களைப் போலும் கவனிப்பாரற்று

“நாளெல்லாம் ஓடிக்களைத்து;
உண்டு உறங்கச் சொந்தமாய்;
குடிசையேனும் வேண்டுமென்ற ஆவலில் ..
அலைக்கழியும் மக்கள் கூட்டமிங்கே!
அவர்கள் கனவுகள் ...
காலச் சுழற்சியில் புதைக்கப் படுகின்றன
வரவை மீறிய செலவும் ,
தொடரும் துன்பத்தைப் போலும்!
பெருகிக் கொண்டே இருக்கும் விலைவாசியும் ..
விருந்தினர் வரக்கூடாது ,மின்சாரம்,
யூனிட் நான்கு , ஐந்து ரூபாய்
என அரசைப் போலும் அறிக்கை விடுக்கும்
வீட்டு முதலாளியும் ...
இந்த நடுத்தர வர்க்கத்தின்
துக்கத்தை துரத்தும்
தூக்கத்தையும் விரட்ட ..
படையெடுக்கும் கொசுக்களையும்
விரட்டவும் மின்விசிறி சுழலாது.
வீடொன்றிற்கு ஐந்து , ஆறு
குளிர் சாதனப் பெட்டிகள்...
சுரண்டி எடுக்கும் மின்சாரத்தால்

பாதிக்கப் படுவதென்னவோ
 இயற்கைத் தாயும்,
வருமைப் பிடியில் சிக்கி
சீரழியும் நடுத்தரவர்க்கமும்  தான் ”! .
மேலும்போகமுடியாமல்,
தெருவுக்கும் வரவழியின்றி.....
சுமைமட்டும் சுமக்கின்ற,
இவரென்றும்சாபங்களே!!

42 comments:

  1. உங்கள் ஆதங்கம் நியாயமும் சரியும் ஆனதுதான் சகோ. இவர்கள் சாபம்தான். யாருக்கு? இவர்களுக்கு இவர்களே சாபங்கள். காரணம் இந்த வர்க்க வேறுபாடு. கவிதைச் சாடல் செய்வதைத் தவிர வேறு ஏதேனும் செய்ய ஆகாத கையாலாகத்தனம் மனதைச் சுடுகிறது என்னை. எனக்கும் உங்கள் ஆதங்கம்தான். அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. துரைடேனியல்...
    உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களைப் போல் எனக்கும் வருத்தம் உண்டு . எழுத்துக்களால் மட்டுமே நம் சமூக அவலங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்று . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  3. ///வீடொன்றிற்கு ஐந்து , ஆறு
    குளிர் சாதனப் பெட்டிகள்...
    சுரண்டி எடுக்கும் மின்சாரத்தால்//

    இதெல்லாம அநியாம் அல்லவா?அரசாங்கத்தை குறைசொல்லும் மக்கள் முதலில் தங்களை திருத்தி கொள்ள கூடாதா?


    //பாதிக்கப் படுவதென்னவோ
    இயற்கைத் தாயும்,
    வருமைப் பிடியில் சிக்கி
    சீரழியும் நடுத்தரவர்க்கமும் தான் ”!///

    மிக உண்மை

    ReplyDelete
  4. எம்மில்
    திறமைகள் ஆயிரம் உண்டு
    வறுமை
    எம்மை சிறுமை ஆக்கியது...

    பொறுமை
    இழந்த எங்கள் மனத்திற்க்கு
    பூமியில்
    புலம்ப மட்டுமே தெரிந்தது...

    .............................

    எழுத்துச்சீர்திருத்தங்கள் ஓர்நாள்
    சீரழிவை எதிர்த்து
    கழுத்தைப்பிடிக்கும்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  5. இனி ஏழைகள் கற்காலத்தை நோக்கி போக வேண்டியதுதான்...



    அரசின் பாரபட்சம் எப்போது தீருமோ..?

    ReplyDelete
  6. இச்சாபம் என்று நீங்குமோ .......

    ReplyDelete
  7. நம்மள மாதிரி புலம்பறவங்க அதிகமாகிகிட்டே போறாங்க.இது எங்க போய் முடியுமோ?

    அருமைக் கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. Avargal Unmaigal ...
    தாங்கள் கூறுவதும் உண்மையே மக்களாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. வேலுச்சாமி ...
    அவர்களே வருக தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. கவிதை வீதி... // சௌந்தர் ..
    அவர்களே வருக இயற்கையை சீரழிப்பதில் மக்கள் பங்கும் உண்டு அல்லவே . தங்களின் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  11. கூடல் பாலா..
    அவர்களே வருக சாபம் நமக்கு நாமே விதித்தது . விடுபட வழி தேடுவோம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. DhanaSekaran .S
    அவர்களே புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடிகிறது வருத்தமாகத் தான் இருக்கிறது .

    ReplyDelete
  13. ஆதங்கமான பதிவு.படங்களே விசயத்தை சொல்லி விட்டது.

    ReplyDelete
  14. மதுமதி ...
    அவர்களே வருக தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  15. ஆடம்பர ஆசைகளும், இயற்கையை இடர்படுத்துவதும் மக்களே வரவழைத்துக் கொள்வதுதானே... ஓசோன் படலத்தை வதைக்கும் ஏசியைத் தவிர்க்க இயலாதா..? வசதியானவர் போல் வாழவும் இயலாமல், சாதாரணர் போன்று எளிமையாயும் இல்லாமல் நடுத்தர வர்க்கம்தானே இங்கு இடர்? இயற்கையை நேசிக்கும் எவரும் இப்படைப்பை மிக விரும்புவர் தென்றலே... யானும் அவ்வண்ணமே...

    ReplyDelete
  16. நடைமுறை சொல்லும் துடிப்பான கவிதை.

    ReplyDelete
  17. யதார்த்தமதை கவியால் வடித்துள்ளீர்கள் மிக சிறப்பு

    ReplyDelete
  18. வணக்கம்!

    // மேலும்போகமுடியாமல்,
    தெருவுக்கும் வரவழியின்றி.....
    சுமைமட்டும் சுமக்கின்ற,
    இவரென்றும்சாபங்களே!! //

    நல்ல கருத்து. திரிசங்கு நிலையில் உள்ள, நடுத்தர மக்கள் பெற்ற சாபம் தீர யார் கால்பட வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  19. நல்ல அருமையான சிந்தனை... மேன் மேலும் தொடருங்கள் சகோ ...........

    ReplyDelete
  20. வரங்களே சாபங்களாயும்,சாபங்களே வரங்களாயும் வரப்பெருகிற வாழ்வு இனிக்கிற தருணங்கள் நிறையவே நம்மில்/

    ReplyDelete
  21. கணேஷ் ...
    வருக வசந்தமே இருப்பது போதும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்ப்படும் வரை இந்த நிலை தொடரும் .

    ReplyDelete
  22. thirumathi bs sridhar....
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. Esther sabi..
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோ...
    நன்மையும் தீமையும் நம்மால் அமைவதே .தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  25. Meganathan ..
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  26. விமலன்..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  27. நாகரீக வாழ்வு என்கிற பெயரில் இயற்கை வாழ்வு வீணாகிறது !

    ReplyDelete
  28. அனைவருக்குமான வேதனையை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  29. நல்ல பதிவு... நன்றி.. வருகை தாருங்கள் உங்களை அன்போடு அழைக்கிறது

    ReplyDelete
  30. உண்மை. நெஞ்சைத் தொட்ட பதிவு.

    ReplyDelete
  31. ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. ‘சொல்லுங்கள்.சொல்லுங்கள். சொன்ன பிறகு, சொல்லிவிட்டோம் என்பதை திரும்பவும் சொல்லுங்கள்’ என்று. எனவே நாம் சொல்வதை (அதை புலம்பல் என எடுத்துக்கொண்டாலும்) சொல்லிக்கொண்டே இருப்போம்.ஒரு நாள் நமது குரல் விழவேண்டியவர்கள் காதில் விழும் என்ற நம்பிக்கையோடு.
    நல்ல கருத்துடைய பதிவு.

    ReplyDelete
  32. Versatile Blogger Award தங்களது வலைப்பூவிற்கு அளிக்கப்பட்டுள்ளது சகோதரி. ஏற்று மகிழ்வீர்.
    அன்புடன் அட்சயா.
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  33. சகமனிதரை மனிதராய் நினைக்கும் பக்குவம் வந்தாலே இதுபோன்ற அநியாயங்கள் அழிந்துபோகுமே. சமூகச் சாடல் கவியானவிதம் வெகுநன்று. எழுத்தாளனின் மாபெரும் கடமையும் அதுதானே. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  34. ஹேமா..
    தங்கள் கருத்து உண்மைதாங்க சகோ .

    ReplyDelete
  35. கவிப்ரியன் ..
    அவர்களே வருக தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. PUTHIYATHENRAL..
    வணக்கம் . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  37. ஸ்ரவாணி...
    அவர்களே வருக தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  38. வே.நடனசபாபதி..
    அவர்களே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி . நம்பிக்கை தரும் தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  39. atchaya..
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  40. கீதமஞ்சரி ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் எழுத்தாளருக்கு உள்ள கடமையை உணர்த்துகிறது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  41. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  42. "நடுத்தர வர்க்கத்தின்
    துக்கத்தை துரத்தும்
    தூக்கத்தையும் விரட்ட ..
    படையெடுக்கும் கொசுக்களையும்
    விரட்டவும் மின்விசிறி சுழலாது."
    கொதித்து எழும் கோபகனல்களாக தெறிக்கிறது உங்களின் வார்த்தைகள் சமூகத்தின் அவலங்களை சுட்டுபவன் சிறந்த கவிஞன் தொடர்ந்து எழுதுங்கள் நேரம் இருப்பின் வலைத்தளம் வாருங்கள்
    பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.com

    ReplyDelete