Wednesday 15 February 2012

வாயில்லாப் பூச்சி



சாரை சாரையாய்
எறும்பினங்கள் ஊர்வதுண்டு..
கூட்டம் கூட்டமாய் 
பறவையினம் போவதுண்டு..
மந்தை மந்தையாய் 
மானினம் வாழ்வதுண்டு..
கூடிக் குலவியே 
மீனினம் பாய்வதுண்டு..
இவையெல்லாம்
சுதந்திரமாகவே ஆடி ஓடித் திரிகின்றன..




அம்மா என்றழைத்து
துள்ளிக்குதித்தோடி
அழகாய்த் தாய்மடியில்
அமுதம் குடித்து குதூகலிக்கும்
அருமை உயிரதற்கு
மூக்கணாம் கயிறுகட்டி
உரிமைபறித்தெடுத்தோம்.
பாலைக் கறந்தெடுத்து
காசுக்காய் விற்றுவிட்டு
பட்டினியாய் அதைப்போட்டு
குலமாதா என்றழைத்தோம்..
தயிர் வெண்ணை நெய்யென்று
நிற்காமல் சாணத்தையும்
சாம்பலாய் உருமாற்றி
இறைவன் பெயரெடுத்து
விபூதியாக்கி விற்றோம்
மனிதகுலம் வாழ்வித்த
இவர்களின் ஊர்வலம்
ஊர்திகளில் நடக்கிறது.
இவை எங்கே போகின்றன..
வாழவா?மடியவா?
உற்று நோக்கினேன்..
காவுகொடுக்க கொண்டுசெல்லும்
அடிமாடுகளாய் அப்பயணம்!




உலக்கையால் தலையிலடித்து
முருகா என்பவரும்
மந்திரித்துக் கழுத்தறுத்து
அல்லாவை அழைப்பவரும்
மூக்கணாங்கயிரால் உயிர்வாங்கி
இயேசுவே என்பாரும்
கூட்டணி அமைத்திங்கே
உயிர்வாங்கும் அவலம் கண்டேன்!
மனிதஉயிர் எடுத்தல் பாவம்..
உரைக்கின்ற உத்தமர்கள்
உயிர்பறித்து உண்கின்ற
கொடுமைகள் நீதிதானா?
அடிமைப் பெண்ணினம் போல்
மிருகமாய் மனிதகுலம்
மீட்பார்யாருமில்லை!




இதயம்மட்டும் துடிக்கவில்லை
ஊனும் மாய்ந்து துடிக்கிறது
வாயில்லாப் பூச்சிகளை
காப்பாற்ற யாருக்கும் வாயில்லை.
வளர்த்தபிள்ளை ஊன்அதனை
உண்ணும் வன்மம் நமக்கெதற்கு!

42 comments:

  1. நினைத்தால் வேதனையாகத்தானிருக்கிறது.உங்களது பார்வை சிறப்பு..தொடர்ந்து இதே பாணியில் செல்லுங்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

    http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


    Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

    http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


    மெமரி Card Data Recovery Software !

    http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

    ReplyDelete
  3. நாம் வீணாக்கும் தவிடையும், கழுநீர்த் தண்ணியையும் உண்டு நமக்கு பால், நெய், தயிர் என போஷாக்குத் தருகிறது பசு. நாம் அதை வாழும் நாளில் வைக்கோல் கன்றுக் குட்டி கொண்டு ஏமாற்றுகிறோம். அவற்றை வதைப்பதுடன் அடிமாடாக்கும் அவலம் வேறு! உங்களின் குமுறல் நியாயமே. எனக்கும் முழு உடன்பாடு தென்றலே! (கவி புனையும் திறன்தான் என்னிடமில்லை) நன்று உம் சிந்தனை! மனம் நெகிழ்ந்த எம் வாழ்த்துக்கள் உமக்கு! தொடரட்டும் நற் கருத்துகள்!

    ReplyDelete
  4. உண்மையான வரிகள்..

    ReplyDelete
  5. இதயம்மட்டும் துடிக்கவில்லை
    ஊனும் மாய்ந்து துடிக்கிறது
    வாயில்லாப் பூச்சிகளை
    காப்பாற்ற யாருக்கும் வாயில்லை.........

    என்னை உருக்கிய வரிகள் அக்கா நல்லதோர் கவி

    ReplyDelete
  6. மனதை புண்ணாக்கும் கவிதை சாரம் அதிகம்.

    அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உலக்கையால் தலையிலடித்து
    முருகா என்பவரும்
    மந்திரித்துக் கழுத்தறுத்து
    அல்லாவை அழைப்பவரும்
    மூக்கணாங்கயிரால் உயிர்வாங்கி
    இயேசுவே என்பாரும்
    கூட்டணி அமைத்திங்கே
    உயிர்வாங்கும் அவலம் கண்டேன்!

    அருமையான உணர்வுப் பூர்வமான வரிகள்
    படங்களுடன் பதிவும் உள்ளம் உருக்கிப் போனது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நீங்கள் அனுபவித்து எழுதிய உணர்வுப் பூர்வமான வரிகள் மிக அருமையாக உள்ளன

    ReplyDelete
  9. brilliant.
    அந்தப் படம் பார்க்க முடியவில்லை!கடவுளே.!

    ReplyDelete
  10. மதுமதி ...
    அவர்களே தங்களின் வருகையும் தென்றலை ஆறுமுகப் படுத்திய அழகும் எனை மென்மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகிறது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. கணேஷ் ..
    அவர்களே தங்கள் விமர்சனத்திற்கு ஈடாக கவிதையும் இல்லை . உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தினால் என்ன எல்லாமே அழகு தான்

    ReplyDelete
  12. சங்கவி ..
    தங்கள் வருகை எனை மகிழ்வித்தது .

    ReplyDelete
  13. Esther sabi
    வருக தங்கை தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  14. dhanasekaran .S
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. ரமணி ஐயா..
    அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் எனை உற்ச்சாக மூட்டுகிறது .எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. Avargal Unmaigal
    அவர்களே தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  17. சென்னை பித்தன்..
    அவர்களே வருக மக்கள் செய்வதை உணர்த்த வேண்டும் அல்லவே . வருகை கண்டு மகிழ்ந்தேன் ஐயா .

    ReplyDelete
  18. வணக்கம்!
    // இதயம் மட்டும் துடிக்கவில்லை
    ஊனும் மாய்ந்து துடிக்கிறது //
    படத்தில் மட்டுமல்ல, உங்கள் கவிதையிலும் உதிரம் கொட்டுகிறது , இரக்கத்தின் வெளிப்பாடாக.

    ReplyDelete
  19. தி.தமிழ் இளங்கோ .
    வருக நண்பரே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  20. claps claps claps

    அருமையான சிந்தனை சகோதரி..
    படித்து படித்து ரசித்தேன்..

    ReplyDelete
  21. சற்றுத் தாமதமாக வந்து விட்டேன்.
    மனிதன் எப்போதும் ஒரு சுயநலவாதி தான் . அனைத்திலும்.
    அதற்கான அத்தாசிதான் உங்களின் இந்தக் கவிதை.
    அருமை.

    ReplyDelete
  22. மகேந்திரன் ...
    அண்ணா தங்கள் மகிழ்ச்சி கருத்தில் தெரிகிறது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. ஸ்ரவாணி ..
    அவர்களே வருக மனிதனின் சுயநலத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா ..?
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. உங்கள் கவிதை மனதை உலுக்கியது நிஜம். அதனால்தான் திருவள்ளுவர் அன்றே சொன்னார்
    `கொல்லான், புலால் மறுத்தானைக் கைகூப்பி,
    எல்லா உயிரும் தொழும்'
    என்று

    ReplyDelete
  25. வாழத் தகுதியுடையன மட்டுமே வாழும்
    அல்லன செத்து மடியும்..

    காட்டில் எவ்வளவு கொடிய விலங்குகள் இருந்தாலும்
    அவற்றையெல்லாம் அடித்துச் சாப்பிடும் மனிதனை விட பெரிய விலங்கு எதுவுமே நானறிந்து இல்லை..

    சிந்திக்கும்விதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி..

    ReplyDelete
  26. நெஞ்சம் பதற வைத்த ஒரு பதிவு.

    ReplyDelete
  27. கொல்லாமை, புலாலுண்ணாமை பற்றி இரங்கி எடுதியுள்ளீர்கள் நகோதரி. நான் ஒரு தாவரபட்சணி. எனக்கு இது பிடிக்கும். வாழ்த்தகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. மிருகங்கள் படும் பாடு கொடுமை. அடிமாட்டுக்கு கொண்டு போகப்படும் விதமும் அதைவிட அங்கே அவை படும் சித்திரவதையும் அகோரம். படிக்கையில் நெஞ்சம் கனக்கிறது சகோ. அழகாய்ச் சொல்லிவிட்டீர்கள். சாட்டையால் அடிக்காவிட்டாலும் வார்த்தைகளால் அடித்துவிட்டீர்கள். உணருமா மனித குலம்?

    ReplyDelete
  29. படங்கள் பயம் காட்டுது சசி.திருந்தவேணும்ன்னு சொல்றீங்க வார்த்தையால அடிச்சு !

    ReplyDelete
  30. செத்தும் தன்னுடலை
    சிலருக்கு உணவாக
    வித்தும் பணமாக்கும்
    விதமாகத் தன்வாழ்வை
    தத்தும் கொடுக்கின்ற
    தன்னகரில் மாடுகளை
    பத்தித் துயர்பட்டீர்
    பாட்டாக எழுதிவிட்டீர்
    பாராட்டுக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. வே.நடனசபாபதி...
    அவர்களே வருக தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. guna thamizh..
    அவர்களே வருக தங்கள் ஆதங்கம் புரிகிறது . உணருவார்களா..? . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. விச்சு ...
    தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. கோவைக்கவி...
    அவர்களே தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  35. துரைடேனியல் ..
    அவர்களே வணக்கம் நம் வார்த்தைகளால் உணர்த்தமுடியாததை எழுத்துக்களால் உணர்த்த முயற்சிப்போம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. ஹேமா..
    அவர்களே வருக தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  37. புலவர் சா இராமாநுசம்..
    ஐயா அவர்களே வருக
    எனது ஆதங்கத்தை உங்கள் வரிகள் உணர்த்துகின்றன . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  38. பசுவதையையும் பார்வையால் கவிதையாக்கி மனதில் மாட்டு இறைச்சி சாப்பிடும் மக்களை சிந்திக்கத்தூண்டும் கருத்தாளம்மிக்க கவிதை.

    ReplyDelete
  39. பகீரென்னும் படத்துடன் சாட்டை வீசும் வரிகள். மனிதநேயத்தையே மறந்தவர்கள் மாட்டின்மீதா நேசம் வைக்கப்போகிறார்கள்? மனத்தை கனக்கச் செய்யும் கவிதை.

    ReplyDelete
  40. தனிமரம்..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  41. கீதமஞ்சரி...
    உண்மைதான் சகோ மனிதநேயம் மறுக்கப் படுகிறது .
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete