Tuesday 14 February 2012

தமிழைத் தேடுகிறேன், தமிழனைத் தேடுகிறேன் .

எங்க கிராமத்துல இருந்த வரைக்கும் , சென்னைய பற்றி பல கனவு , எதிர்பார்ப்புகள் இருந்ததுங்க . அங்கும் கிராம அம்மாக்கள் மாதிரி சாணமிட்டு கோலம் போடுவார்களா ? அங்கும் மண் தரை இருக்குமா ..?
எல்லோரிடத்திலும் பணிவா , மரியாதையா பேசுவாங்களாணு! . அத விட முக்கியமா அங்கும் தமிழ் எப்படிப் பேசுவார்கள், இப்படி பல யோசனை , நகரத்தைவிட வெளிநாடுகளின் அழகாய்த் தமிழ் பேசப்படுகிறது..
பொதுவா தாய்மொழியே சில நேரங்களில் நமக்கு புதிராகவும் , புதிதாகவும் அமைந்து விடுகிறது .


உறவுகளை அழைக்கும் முறையும் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது .
ஒரு முறை என் அக்காவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் . அக்காவின் திருமணமான புதிது அந்த நேரம் . தெருவில் வெங்காய வியாபாரி சென்றுகொண்டிருந்தார் . வாசலில் என் மாமா வாகனம் துடைத்துக் கொண்டிருந்தார் . அக்கா "ஏங்க வெங்காயம் ...ஏங்க வெங்காயம் " என அழைக்க மாமாவோ எனை ஏன் கேட்குற வாங்க வேண்டியது தானே என்றார் . எனக்கு சிரிப்பு தாங்கல .
வெங்காய வியாபாரியையும் ஏங்க , கணவரையும் ஏங்க கிண்டலடித்த நானும் இப்போ அப்படித்தான் அழைக்கிறேன் என்ன பண்றதுங்க .
கணவரை பெயர் சொல்லி அழைப்பது இந்த காலத்தில் புதிதில்லை என்றாலும் . எங்களைப் போல கிராம வாசிகளிடத்தில் , இன்னமும் திணிக்கப் படவில்லை என்றே தான் கூறவேண்டும் .
அதே போன்று தெரிந்தவர் இல்லத்திற்கு சென்றிந்தோம் . அங்கு முதியவர் ஒருவர் "இருங்க " என்றார் எனக்கோ இருந்து போக சொல்றாங்க போல என்று நினைத்து விட்டேன் . மீண்டும் சிறிது நேரம் கழித்து அதையே சொன்னார் , ஒன்றும் விளங்க வில்லை எனக்கு பிறகே சொன்னார் சிரித்த படி உட்கார சொன்னேன் என்று .
இப்படி தமிழும் புரியாது போகிறது பல நேரங்களில் .ஒருமுறை கேரள எல்கையில் உள்ள ஊருக்கு சென்று வழிகேட்டபோது அங்கோடிப்போங்க என்றார்கள்.எங்க ஓடிப்போறது என்றுகேட்க வழிசொன்னவர் திகைத்து வீடுவரைவந்து வழிகாட்ட,........
மண்தோன்றாக் காலத்து மூத்ததமிழ்.கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறதா!தேய்கிறதா!!தேடிப்பார்த்தேன்,தேன்தமிழை எந்த அளவுக்கு கொச்சைப்படுத்த முடியுமோ;அந்த அளவுக்கு கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 நகரத்துக்கு நகரம்,மாவட்டத்திற்கு மாவட்டம்,கிராமத்திற்கு கிராமம்,தெருவுக்கு தெரு,வீட்டுக்கு வீடு,தமிழ் பேச்சு வழக்கில் மருவி இனியதமிழ் இன்னலை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
        தழிழ் மொழிக்கு வளர்பிறை காலமிது என்று மார்தட்டிப்பாடும் தமிழ்மொழிக் காவலர்கள் சிந்தையில் உலாவும் தமிழ்,இல்லங்களில் காணாமல்போய்,"அம்மா"-மம்மியாகவும்,
"அப்பா"-டாடியாகவும்   அலங்கோலப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க சொல்லிக் கொடுக்க புதிதாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டிய அவலம் அரங்கேறி தமிழ் தமிழனை தேடிக்கொண்டிருக்கிறது.தமிழும் ஒருகுடையின் கீழ்இல்லை,தமிழனும் ஓர் அணியாயில்லை.வார்த்தையில் வாழும் தமிழ்,வாழ்கையில் வாழாமல் போவது பரிதாபமே!
காலத்தால் அழிக்கமுடியாத தமிழை மேற்கத்திய கலாச்சாரத்தின் பெயரால் அழித்துவிட்டு தமழ்,தமிழன் என்று பெருமை பேசிபயனில்லை.


40 comments:

  1. கை கொடுங்க சசிகலா. அழுத்தமா குலுக்கி பாராட்டணும் போலருக்கு. தமிழ் உச்சரிப்பு குழந்தைங்க கிட்ட அலகிய, தமில் என்று கொடுமையாக வதைபடுகிறது. ஆபிஸ் இன்சார்ஜ் ஒருவர் எல்லோரையும் ‘வாங்கோ‘ என்பார். புதிதாய் சேர்ந்த ஒரு இளைஞனிடம் அதையே சொல்லிவிட்டு அவர் மாடியேறி மானேஜரின் அறைக்குச் செல்ல அங்கும் பின் தொடர்ந்திருக்கிறான். ‘எதுக்கு பின்னாடியே வர்றே’ன்னு கேட்டதுக்கு ‘நீங்கதான சார் வாங்கன்னு சொன்னீங்க’ என்றிருக்கிறான்.

    ReplyDelete
  2. சென்னை வந்த புதுசுல நான் மார்க்கெட்ல கீரை வாங்கிட்டிருந்தப்ப பக்கத்தில் ஒரு வயதான குரல் ’எப்படிக் கீரை’ எனக் கேக்க, ’கட்டு அஞ்சு ரூவா சொல்றாங்க’ என்றபடி நான திரும்பினால் அந்த வயசான அம்மா, பக்கத்தில் நின்ற பெண்ணை விசாரித்திக்கிறார் ‘எப்படிக் கீரே’ என்று. அவ்வ்வ்வ்வ்! தமில் எப்படித்தான வாலப் போகுதோ... என்னமோ போங்க...

    ReplyDelete
  3. எனக்குள் ஒரு தவிப்பு,தாகம்,வேகம்,யாரும் தமிழுக்காக உண்மையாய் குரல் எழுப்பவில்லையென.அந்த ஏக்கத்தை உங்கள் தேடல் கொஞ்சம் தீர்த்திருக்கிறது.எழுதுங்கள்,தமிழ் வாழ,தமிழன்னையின் தாகம்தீர எழுதுங்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாங்க கணேஷ் (வசந்தமே )...
    உண்மைதாங்க அங்கே போடு என்பது அங்கே கடாசு இன்னும் ஏதேதோ புரியலங்க . வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  5. தேடல் நீண்டுகொண்டே தான் செல்கிறது . வருகை கண்டு மகழ்ந்தேன் சேகர் அவர்களே .

    ReplyDelete
  6. கவிதையை விடுத்து அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டீர்கள்..மகிழ்ச்சி..ஆமாம் தாங்கள் சொன்னது போலத்தான் இருக்கிறது..நாம் ஆதங்கப்படலாம்.வேறென்ன செய்ய முடியும்.அருமையானதொரு பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. என் மனதில் உள்ள குமுறல்களை அப்படியே எழுதி இருக்கீர்கள் சசி அதிலும் ஆத்தா என்ற புனிதமான வார்த்தையை சென்னை நகரவாசிகள் சொல்லும் விதம் தாங்க முடியவில்லை

    ReplyDelete
  8. ம்ம்... நிறைய இடங்களில் நானும் அனுபவித்துள்ளேன்...

    ReplyDelete
  9. உன்மைதான்.ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் தமிழில் வேறுபாடு இருக்கவே செய்கிறது.குமரி மாவட்டத்தில் அவர்கள் பேசிய தமிழ் புரியாமல் என் அன்னை பட்ட சிரமத்தை ஒரு நகைச்சுவைப் பதிவாக்கலாம்.

    ReplyDelete
  10. இளந்தென்றல்
    வருக தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  11. சங்கவி ...
    அவர்களே வருக அனுபவங்களை பகிர மட்டுமே முடிகிறது .

    ReplyDelete
  12. சென்னை பித்தன் ..
    அவர்களே ஆமாம் தாங்கள் சொல்லும் விதமே அழகு ஒரு பதிவை பகிருங்கள் .

    ReplyDelete
  13. வார்த்தையில் வாழும் தமிழ்,வாழ்கையில் வாழாமல் போவது பரிதாபமே!
    aroumayana vakkiyam! vazhthoukkal sasikala.

    ReplyDelete
  14. அனைவரிடத்தும் உள்ள ஆதங்கத்தை மிக அழகாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வணக்கம் சசிகலா. இன்று தான் முதல் முறையாக தங்களது வலைப்பூவுக்கு வந்தேன். நானும் எனது ஊரும் (தொடர் பதிவு), இந்த பதிவு அனைத்தும் அருமை. 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னைக்கு படிக்க வந்த போது எனது கல்லூரியில் என் வகுப்பு மாணவர்களாலேயே ராகிங் செய்யப்பட்டவன் நான். இந்த அவஸ்தை எனக்கும் புரியும்.

    ReplyDelete
  16. AROUNA SELVAME.....
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. ரமணி ஐயா...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. ஆரூர் மூனா செந்தில்..
    அவர்களே வருக தங்கள் முதல் வருகையும் அனுபவ பகிர்வையும் கண்டேன் நம் போன்றவர்களுக்கு இது புதிதல்லவே .

    ReplyDelete
  19. "அதே போன்று தெரிந்தவர் இல்லத்திற்கு சென்றிந்தோம் . அங்கு முதியவர் ஒருவர் "இருங்க " என்றார் எனக்கோ இருந்து போக சொல்றாங்க போல என்று நினைத்து விட்டேன் . மீண்டும் சிறிது நேரம் கழித்து அதையே சொன்னார் , ஒன்றும் விளங்க வில்லை எனக்கு பிறகே சொன்னார் சிரித்த படி உட்கார சொன்னேன் என்று" .

    நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால் அல்லது ஈழத்தமிழர் வீடுகட்குச் சென்றால் இந்த வார்த்தையை சரளமாகக் கேட்கலாம்...இப்பிடித்தான் நாங்க உட்காரசொல்லுவம் :) ... சுவாரஸ்யமான் பதிவு..உங்களது இணையம் புதுப்பொலிவுடன் அழகாக இருக்கிறது..கவிதைகளுடன் நின்றுவிடாது தொடர்ந்து இது போன்ற பதிவுகளையும் எழுதுங்கள்...

    ReplyDelete
  20. வணக்கம்! உங்களில் தமிழையும், தமிழனையும் காணுகின்றேன். ”காலத்தில் அழிக்க முடியாத தமிழை” என்று சொல்லி விட்டீர்கள். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  21. தாய்த்தமிழில் பற்றுதல் ஆழமாக இருந்தால் இத்தனை ஆதங்கமும் நிச்சயம் இருக்கும்.என்னை அப்படியே வெளிப்படுத்தினமாதிரி இருக்கு சசி !

    ReplyDelete
  22. சசிகலா,

    நல்லா எழுதுறீங்கங்க. தேவையான கவலை. அழகான தமிழ்ல உங்க ஆதங்கத்தை எழுதி இருக்கீங்க.

    மம்மி, டாடினு சொல்றாங்கனு கவலைப்படிறீங்க.

    இவங்க ஏன் தன்னை "sasikala"னு சொல்லிக்கிறாங்க, சசிகலானு அழகு தமிழ்ல சொல்லாமல் என்பது என் சின்ன வருத்தம்! :)

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. ஏதோ நகைச்சுவை பதிவு என்று படித்து சிரித்து வரும் போது சடனாக திரும்பி தலையில் குட்டு வைத்தது போல இருந்தன இந்த வரிகள்

    //தமிழும் ஒருகுடையின் கீழ்இல்லை,தமிழனும் ஓர் அணியாயில்லை.வார்த்தையில் வாழும் தமிழ்,வாழ்கையில் வாழாமல் போவது பரிதாபமே!/

    சசிகலா மேடம் எந்த மொழியும் வட்டாரத்தீற்கு வட்டாரம் சிறிது மாற்றி பேசப்படுவதுண்டு அதனால் அந்த மொழி அழிவதில்லை. உதாரணத்தீற்கு சொல்லிகிறேன் ஆங்கிலம் பல நாடுகளில் பேசப் படுகிறது ஐரோப்பாவில் ஒரு மாதிரியாகவும் அமெரிக்காவில் ஒரு மாதிரியாகவும் பேசப்படுகிறது ஏன் அமெரிக்காவில் இடத்திற்கு இடம்தகுந்தாற் போல அமெரிக்கன் இங்கிலிசும் பேசப்படுகிறது அதனால் அந்த மொழி அழிவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    தமிழ் அழிவதற்கு மற்ற நாட்டு கலாச்சாரத்தை குறை சொல்ல வேண்டாம். அந்த குறையை தமிழ்நாட்டில் உள்ள குழந்தையை வளர்க்கும் பெற்றோரை சொல்லுங்கள். அம்மா என்று சொல்லிதர வேண்டியதற்கு பதிலாக மம்மி என்று சொல்லிக் கொடுபவர்களிடம்தான் அந்த குறை உள்ளது. அது மட்டுமில்லாமல் சொல்வது ஓன்று செய்வது ஒன்று என்று செயல்படும் தமிழினத்தலைவர்களை சொல்லுங்கள்.

    இரண்டு விஷயங்களை ஒரே பதிவில் சொல்ல முயன்று இருக்கிறிர்கள்......

    மேலைநாட்டுகலாச்சரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழை மறக்காத ஒரு மதுரைத் தமிழன்

    ReplyDelete
  25. தமிழுக்குள்ள சுகமே ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரிதான். டாடியும் மம்மியும் நாசப்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  26. நாங்கள் ஆதங்க படலாமே தவிர என்ன செய்ய முடியும்??????????????

    ReplyDelete
  27. தமிழ் படும் பாடு பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். வட்டார வழக்கைக் குறை சொல்லமுடியாது. அதுவும் தமிழுக்குப் பெருமைதான். ஆனால் அதுவே தமிழுக்கு இழுக்கு உண்டாக்கும் விதத்தில் இருந்தால் ஆதங்கம் நியாயமானதே. பிள்ளைகளிடத்தில் தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொடுக்காத பெற்றோர் அடுத்தத் தலைமுறையைத் தமிழை விட்டு விலக்கி வழிநடத்துகிறார்கள் என்னும் உண்மை நிறைய யோசிக்கவைக்கிறது.

    சென்னை வந்த புதிதில் வீட்டு வேலை செய்யும் பெண்மணியை நான் வாங்க, போங்க என்று அழைத்ததைப் பலர் கேலி பேசினாலும் என்னால் அதை மாற்ற முடியவில்லை. என் குழந்தைகளோ ஒரு படி மேலே போய் அவரை அத்தை என்று அழைத்தார்கள். அதனால்தானோ என்னவோ நான் இந்தியாவை விட்டுக் கிளம்பும்வரை கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எங்கள் வீட்டில் வேலையில் நீடித்திருந்தார். சென்னையில் இப்படி ஒரே வீட்டில் வேலைக்காரப் பெண்மணிகள் நீடித்து வேலை செய்வது மிகவும் அரிது.

    நல்லதொரு பதிவை இட்டு சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள். நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  28. சுபேஸ்..
    அவர்களே வருக வணக்கம் . பதிவைப் பற்றிய விளக்கவும் . தென்றலின் புதுப் பொலிவையும் கண்டு ரசித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. தி.தமிழ் இளங்கோ ...
    பதிவுக்கு வருகை தந்தவர்களையும் , அவர்களது கருத்துக்களையும் பார்க்கும் போதே தமிழின் மீது நமக்குள்ள பற்று தெரிகிறது . அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. ஹேமா..
    வணக்கம் தோழி நம் போன்றவர்கள் அடிக்கடி தமிழை பற்றிய பதிவை கொடுப்பதன் மூலமும் ஆதங்கத்தை குறைக்கலாமே . வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. வருண் ....
    அவர்களே வருக எனது கவனக்குறைவின் காரணமாக வந்த தவறை திருத்திக்கொள்கிறேன் . கருத்து தெரிவித்ததற்கு நன்றி .

    ReplyDelete
  32. Avargal Unmaigal
    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியதே .
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு தெளிவு பெற்றேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. விச்சு
    அவர்களே வருக தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  34. Esther sabi
    அவர்களே வருக தங்கள் கருத்தும் உண்மையே .

    ReplyDelete
  35. கீதமஞ்சரி ...
    வருக வணக்கம் தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . நிறைய பெற்றோர்கள் தன் மழலைகள்
    ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள் . நாம் என்ன செய்ய முடியும் .

    ReplyDelete
  36. எனது கருத்தை நல்ல முறையில் புரிந்து கொண்டதற்கு நன்றி தோழியே.

    ReplyDelete
  37. சென்னை முன்காலத்தில் ஆந்திரா தமிழகம் கேரளம் அடங்கிய பகுதிகளில் ஒரே தலைநகரமாகவிருந்தது. ஆந்திரம் அருகில் இருப்பதால் தெலுங்கு மக்கள் சென்னை வாழ்க்கையில் எல்லாத்தளங்களிலும் கலந்தார்கள். கீழ்த்தட்டில் குறிப்பாக . அவர்களால் தமிழைச்சரிவர பேசவியலவில்லை. 'ழ', 'ள', 'ல' என்பனவெல்லாம் அவர்களுக்கு ஒரே உச்சரிப்பே. அவர்கள் தெலுங்கையும் தெலுங்கு உச்சரிப்பையும் கலந்தார்கள் தமிழில். தமிழ்மொழிப்பற்றும் அக்கறையும் அவர்களுக்கில்லை.

    தமிழர்களைவிட சற்று உணர்ச்சிக்கொந்தளிப்புடைய்வர்களாதலால், அவர்கள் அடாவடித்தனமாக பேசும்பண்புடையோர். ஒருவருக்கொருவர் அனுசரித்து மெல்லப்பண்பாகப்பேசுவது அவர்களுக்கில்லை. இவ்வாறாக அவர்கள் நமக்குத்தந்ததுதான் சென்னைத்தமிழ். அஃதை அனைத்துச்சென்னை வாழ்வோரும் இன்று கைக்கொண்டு வருகின்றனர். எனவேதான், பழம் 'பயமாகிறது' 'இருக்கிறது' 'கீதாகிறது' கசமாலம், பேமானி, பேஜாரு, குந்து என்றெல்லாம் சென்னைத்தமிழ் திரிந்தது.

    நல்லவேளை தமிழகத்தில் உள்ளே அவர்கள் ஊடுருவவில்லை. தமிழ் உருமாறியிருக்கும்.

    தமிழைத் தமிழரே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பிறரிடமிருந்து

    ReplyDelete
  38. எண்ணங்கள் எழுத்துகளாக

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  39. தமிழுக்காய் குரல் கொடுக்கும் தமிழ்ப்பெண்ணே வாழ்க தங்கள் பணி

    ReplyDelete
  40. ”காலத்தில் அழிக்க முடியாத தமிழை” என்று சொல்லி விட்டீர்கள். கவலை வேண்டாம்.

    ReplyDelete