Wednesday 15 October 2014

தினம் பாடும் பாட்டு !

 
கண்ணழகு கருத்த மச்சான்
காதலிலே கரைய வச்சான்.
காத்து வாங்க நானும் போனேன்
பூங்காத்தா அவனே தொடர்ந்து வந்தான்.
வாசமுல்ல மணக்கவில்ல
வாடக்காத்தும் வீசவில்ல..
காலநேரம் விளங்கவில்ல
காலும் போக திசையுமில்ல..
உண்ண உணவும் எடுக்கவில்ல
ஊரில் உலவும் வசவுத்தொல்ல..
படுத்தா நாளும் தூக்கமில்ல
படுற பாடும்  கொஞ்சமில்ல

சேதி சொல்ல யாருமில்ல
சேம நலம் கூடுதில்ல...
தினம் படும் பாட்ட நானும்
மனமுழுக்க எழுதி வச்சேன்.

மனமிருந்தா வந்திடுவான்
மணக்க மணக்க படிச்சிடுவான்.

15 comments:

  1. மனம் வரட்டும். மணக்க மணக்கப் படிக்கட்டும். மனம் மகிழட்டும்! :))

    ReplyDelete
  2. வாழ்வின் அச்சானியான

    மச்சானை எண்ணியே

    கனவுல மெதந்தே நாளும்

    காத்திருக்கும் தென்றலே

    உன் மூச்சு காத்தினால்

    காகித பூவும் மணக்குதே

    காகித ஓடத்தில் நானேறி

    நெடுந்தூரம் போனேனே

    கவனவல்ல நான் சொல்வது

    விழித்துக் கொண்டே கண்டதால்

    நடக்கும் என்ற நம்பிக்கையால்

    நாள்தோறும் வாழ்கிறேனே...

    அருமை சசி கலா பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மனமிருந்தா வந்திடுவான்
    மணக்க மணக்க படிச்சிடுவான்.
    Vetha.Langathilakam

    ReplyDelete
  4. தென்றல் தழுவிய தெம்மாங்குத் தேன்பாட்டு
    என்றும் இருக்கும் இனித்து!

    கிராமத்து மண்வாசனையோடு தரும் உங்கள் பாடலுக்கு
    இணையாக ஏதுமில்லைத் தோழி!
    அப்படியே எம்மை வயல்வரப்பு வெளிகளுக்குக்
    கொண்டு செல்கிறது! மிகச் சிறப்பு!
    சொக்கிப் போனேன் சொற்களில்! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கருத்த மச்சான் வருகிறானோ இல்லையோ நாங்க கண்டிப்பா வந்து படிச்சிடுவோம்

    ReplyDelete
  7. வழக்கம் போல ரசனைமிக்க நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் & அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
    மறக்காம தீபாவளி பட்சணம் அனுப்பி வைச்சுடுங்க

    ReplyDelete
  8. மீண்டும் உங்களின் அழகிய வரிகளில் கிராமிய மணம் கமழும் கவிதைகள் தொடர ஆரம்பித்ததில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. காகிதக் கப்பலேறி
    செல்லுமிடமறியாது
    கனவு வாழ்க்கையிலே
    கவிதை மணமேந்தி
    காத்திருப்பு காலமெது
    அறியாத இசைபாட்டு!

    ReplyDelete
  10. கிராமிய மணம் வீசும் அருமையான் கவிதை. பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  11. நல்ல கிராமிய மணம்மா வாழ்த்துகள்.






    ReplyDelete
  12. அழகிய கவிதை . வாழ்த்துக்கள்

    ReplyDelete

  13. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. சேதி சொல்ல யாருமில்லாததால் மனம் முழ்க்க எழுதி வைத்த கவிதை வாச மலரின் நறுமணமாய் மணக்கின்றது! அருமையான கவிதை சசிகலா!

    ReplyDelete
  15. கிராமியத் தென்றலின் அழகிய வரிகளின் மணம் மிக இனிமை! :)

    ReplyDelete